>> ததஜவினருக்கு மிகப்பெரும் தோல்வி (?) <<
"யாரோ ஒரு காட்டானை அழைத்து வந்து சூனியம் பலிக்கவில்லை என்றால், அவன் இஸ்லாத்திற்கு வந்துவிட வேண்டும் என்ற ததஜ மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அவன் இஸ்லாத்திற்கு வந்தானா ? நீங்கள் அழைத்து வந்தவன் Professional சூனியகாரனா?" என்ற அழகான (?) கேள்வியை கேட்பது ஜெமீல் காக்கா..! ஆம், ஜெமீல் காக்காவேதான்..!!
உங்களிடமும் கேள்வி கேட்கவேண்டிய சூழ்நிலை வரும் என்று நாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை!!!
وَحَاجَّهُ قَوْمُهُ ۚ قَالَ أَتُحَاجُّونِّي فِي اللَّهِ وَقَدْ هَدَانِ ۚ وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَن يَشَاءَ رَبِّي شَيْئًا ۗ وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا ۗ أَفَلَا تَتَذَكَّرُونَ
(6:80)அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். ''அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்சமாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?'' (அல்குர்ஆன் 6:80)
நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு சிலைகளினால் தீங்கு வரும் என்று அவர் சமுதாயத்தவர் சொல்லியபோது, அல்லாஹ் நாடினாலன்றி எதுவும் நேராது என்று சொல்கிறார்கள்.
இதை எப்படி புரிவீர்கள்..??
♦ சிலைக்கு ஒரு சக்தியும் இல்லை என்று புரிவீர்களா? அல்லது
♦ சிலைக்கு அல்லாஹ் நாடினால் சக்தி வரும் என்று புரிவீர்களா? அல்லது
♦ இப்ராஹீம் நபியிடம் Professional, Powerfull சிலை யாரும் வரவில்லை என்று புரிவீர்களா?
சூனியக்காரர்கள் எப்படி வந்தாலும் வெற்றி பெறமாட்டார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். ஆனால் அல்லாஹ் நாடினால் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்! அல்லாஹ் அப்படி நாடுவானா?
(10:81) فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ
அவர்கள் போட்டபோது ''நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்கச் செய்வதில்லை'' என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன் 10:81)
குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்க செய்யமாட்டான்!
உங்களின் வாதப்படி Professional (?) சூனியக்காரன் வந்து சூனியம் செய்தால் அல்லாஹ் நாடினால் பலிக்கும் என்று சொன்னால், 'சிலைக்கு எந்த சக்தியும் இல்லை அல்லாஹ் நாடினாலே தவிர' என்ற குர்ஆன் வசனத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். அதேபோல சூனியத்திற்கு எந்த சக்தியும் இல்லை அல்லாஹ் நாடினாலே தவிர என்பதையும் ஏற்றுக்கொள்வீர்கள்.
Professional சூனியக்காரன் வந்து சூனியம் செய்தாலும் அந்த சூனியத்திற்கு ஒரு சக்தியும் கிடையாது என்பது உங்களுக்கு தெரியாதா??!!!
அல்லாஹ் நாடி ஒரு விஷயம் நடக்கும்போது அதற்கு பெயர் "விதி"தானே ஒழிய வேறில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! அப்படி இருக்க, ஒரு மனிதனின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி உங்களை நீதம் தவற வைக்கின்றதே.. ஏன்..??
'மணிகண்டன் என்ற காட்டான் சூனியம் செய்து பலிக்காமல் இஸ்லாத்திற்கு வராமல் போய்விட்டான். ததஜவினருக்கு மிகப்பெரிய தோல்வி' என்று சொல்லும் நீங்கள், அவனால் சூனியம் செய்ய முடியாமல் போய்விட்டது; சூனியம் என்பது ஏமாற்றுக்காரர்களின் ஏமாற்று வித்தை என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்தார்களே? அது உங்களுக்கு புரியவில்லையா..?!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக