சூனியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூனியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 ஆகஸ்ட், 2017

அல்குர்ஆன் 2:102 - வது வசனம் ஓர் பார்வை


வ்ஹீத்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வோரிடையே தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஏனைய ஜமாஅத்திற்குமிடையில் சூனியம் என்ற ஒன்று, மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் பங்கை வகிக்கிறது.

'சூனியம் என்ற ஒன்று இருக்கிறது; அது  இருப்பதால்தான் அல்லாஹ் சூனியம் பற்றி  சொல்லிக்காட்டுகிறான்; ஆகவே சூனியம் இல்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒன்றை மறுப்பதாகும்; சூனியக்காரன் வைத்த சூனியம் அல்லாஹ் நாடாமல் பலிக்காது; ஆனால் அல்லாஹ் நாடினால் பலிக்கும்' என்பது அவர்களின் வாதம்.

'சூனியம் என்பது இருக்கிறது; ஆனால் சூனியம் என்பதற்கு நீங்கள் வைக்கும் விளக்கமும் அதன் மீதுள்ள உங்கள் நம்பிக்கையும் தவறு; அதை செயல்படுத்த அல்லாஹ் நாடமாட்டான்; அல்லாஹ் நாடுவான் என்று நீங்கள் சொல்வது தவறு' என்று இஸ்லாமிய அடிப்படைகளின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுதிபட சொல்கிறது.

வெள்ளி, 22 ஜனவரி, 2016

சூனியத்தை நம்புவது இணைவைத்தலே

சூனியத்தை நம்புவது இணைவைத்தலே.


சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என நம்புவது 
இணைவைத்தலே!

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் குற்றமாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

இரண்டு கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ, மூன்று கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ நம்புவது தான் இணை கற்பித்தல் என்று சிலர் நினைக்கின்றனர். இதுவும் இணைகற்பித்தல் தான் என்றாலும் இணைகற்பித்தல் இதை விட விரிவான அர்த்தம் கொண்டதாகும்.

அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவர்களாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.
இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள இயலும்.

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
திருக்குர்ஆன் 36:78

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை.
திருக்குர்ஆன் 112:4

அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இதன் கருத்தாகும்.
அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின் காலை அல்லாஹ் வெட்ட மாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே எந்தக் கருவியையும் பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.
ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக்கட்டையையோ எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.

அல்லாஹ் ஒருவனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் மன நோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மன நோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை சிதையும் அளவுக்கு தலையில் தாக்கியே மன நோயாளியாக ஆக்க முடியும்.
இந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.

அவன் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்; உடனே ஆகிவிடும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் 2:117, 3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறான்.

ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஆனால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் சூனியக்காரனை எந்த இடத்தில் வைக்கிறார்கள்?
சூனியக்காரன் உருட்டுக்கட்டையால் காலை முறிப்பான் என்று நம்புவதில்லை. அல்லாஹ்வைப் போல் ஆகு என்று கட்டளையிட்டு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று தான் நம்புகிறார்கள்.

சூனியக்காரன் எந்த மருந்தையும் செலுத்தாமல் ஆகு எனக் கூறி ஒருவனைப் பைத்தியமாக ஆக்க வல்லவன் என்று நம்புகிறார்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கவலைப்படுத்த, காயப்படுத்த உலகில் எந்த வழிமுறைகள் உள்ளனவோ அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலமாக ஒருவன் மற்றவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.

உதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் குத்தலாம். அல்லது இருவருமே கத்தியால் குத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு ஏற்படும்.
இது போன்று ஒருவருக்கொருவர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்..

ஒருவர் இன்னொருவரைத் திட்டுகின்றார்; அல்லது அவதூறு சொல்கின்றார் என்றால், யாரைத் திட்டுகின்றாரோ அல்லது அவதூறு சொல்கின்றாரோ அவரைக் கவலையடையச் செய்யலாம்.

இது போன்ற வழிகளில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைச் செய்வதற்காக தனியாக கற்றுத்தேறும் அவசியம் இல்லை. யாருக்கு எதிராக யாரும் இதைச் செய்ய முடியும்.

உலகத்தில் மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் எந்த வழிமுறையை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகள் தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை.

பாதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரைத் தொடாமல், அருகில் வராமல், அவரைப் பார்க்காமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று நம்புகின்றனர்.

யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவரின் சட்டை, வியர்வை, காலடி மண், தலைமுடி இது போன்றவற்றை வைத்துக் கொண்டு அதனை பொம்மை போல் செய்து பாதிப்பு ஏற்படுத்த வேண்டியவரின் பெயரை அந்தப் பொம்மைக்கு வைத்து அந்த பொம்மையின் வயிற்றில் குத்தினால் அவரது வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். அந்தப் பொம்மையின் கண்ணைக் குத்தினால் இவரின் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும். இது தான் சூனியம் என்று மக்கள் நம்புகின்றனர். உடலுக்கு மட்டுமின்றி மனதிலும் பாதிப்பை ஏற்படுத்த சூனியக்காரனால் இயலும் என்று நம்புகின்றனர்.

ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்த வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அவற்றில் எந்த ஒன்றையும் சூனியக்காரன் செய்ய மாட்டான்.
சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்பக் கூடியவர்கள் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் திறன் படைத்தவன் என்று தான் நம்புகிறார்கள்.

சூனியக்காரன் தனது சுயமான ஆற்றலால் இப்படிச் செய்யவில்லை. அல்லாஹ் அவனுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்துள்ளதால் தான் அப்படிச் செய்ய முடிகிறது. இது எப்படி இணைவைத்தலாகும்? என்று விதண்டாவாதம் செய்கின்றனர்.

நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தினரும் இதே பதிலைச் சொல்லி இணைவைப்பை நியாயப்படுத்தப் பார்க்கின்றனர்.
இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

எல்லா படைப்பினங்களின் செயல்பாடுகளும் அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் நடப்பவைதான்.
நாம் பேசுகிறோம்; பார்க்கிறோம்; கேட்கிறோம்; உண்ணுகிறோம்; பருகுகிறோம்; ஓடுகிறோம்; ஆடுகிறோம்; இல்லறத்தில் ஈடுபடுகிறோம் என்றால் அவை அனைத்துமே நாமாக உருவாக்கிக் கொண்டதல்ல. அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் தான் இவற்றை நாம் செய்ய முடிகிறது.

ஆனால் அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமான ஆற்றலைக் கொடுத்து இருந்தாலும் ஒருக்காலும் தனக்கு இருப்பது போன்ற ஆற்றலை யாருக்கும் கொடுக்க மாட்டான். எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.

"சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!
திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.
திருக்குர்ஆன் 25:2

தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் யாருக்கும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்பதை அழகான உதாரணத்தின் மூலம் அல்லாஹ் மேலும் விளக்குவதைப் பாருங்கள்!

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?
திருக்குர்ஆன் 16:71

அல்லாஹ் மனிதர்களுக்கு எந்த அளவு ஆற்றலை அளிப்பான் என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அதாவது தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பதுதான் அந்த அடிப்படை.
இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார்.

இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா? என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.
ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்கு சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணை வைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா?

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் அல்லாஹ்வை நம்பினார்கள். அத்துடன் வேறு சிலரையும் வணங்கி வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும் போது அவர்களெல்லாம் கடவுள்கள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை.
எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று வாதிட்டு அவர்களும் இதே நியாயத்தைத் தான் சொன்னார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும் சூனியக்காரனுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்று திருக்குர் ஆன் தெளிவாகச் சொல்கிறது.
அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்''
(அல்குர்ஆன் 20 : 69)

"நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்கச் செய்வதில்லை''
(அல்குர்ஆன் 10 : 81. 82)

மழையைப் பொழிவிக்கும் அதிகாரம்

அல்லாஹ்விற்குரியது. இந்த ஆற்றல் நட்சத்திரத்திற்கு இருப்பதாக நம்பும் நட்சத்திர ஜோசியத்தை சூனியக்கலை என்றும், அவ்வாறு நம்புபவர்கள் காஃபிர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் நட்சத்திர ஜோசியத்தைக் கற்றுக் கொள்கிறாரோ அவர் அதன் மூலம் சூனியத்தின் ஒரு பகுதியைத் தவிர வேறெதையும் கற்றுக் கொள்ள மாட்டார். (கற்பதை) அதிகப்படுத்துபவன் (சூனியத்தை கற்பதை) அதிகப்படுத்திக் கொள்கிறான்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : நஸாயீ (2000)

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, "உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று கூறினர். அப்போது "என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். "அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது' எனக் கூறியவர்கள் என்னை நம்பி இராசிபலனை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன ராசிபலனால் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்கள் என்னை மறுத்து, ராசிபலனை நம்பியவர்களாவர்' என இறைவன் கூறினான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1038

இராசிபலன் என்பது சூனியக்கலை ஆகும். அது ஒரு ஏமாற்று வித்தையாகும். அதனால் நன்மையோ தீமையோ ஏற்படும் என்று நம்புவது இணைவைத்தலாகும் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) நூல் : அஹ்மது (26212)

எனவே சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணைவைப்புக் கொள்கையாகும். இது போன்ற இணைவைப்புக் கொள்கையிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.


https://www.facebook.com/thakbeermulakkam/videos/1742268776002203/

செவ்வாய், 20 ஜனவரி, 2015

2:102 வசனதுக்கான விளக்கம்

2:102 வசனதுக்கான விளக்கம் by Ahmed Jamshath Al Azhari

2:102 வசனதுக்கான நமது விளக்கம் (1)

(فَيَتَعَلَّمُون َمِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ)
எதை கொண்டு கணவன் மனைவியை பிரிக்க முடியுமோ அந்த ஒன்றை அவர்கள் இருவரிடமும் இருந்து கற்றுக்கொண்டார்கள்
இதில் "பிஹி" சூனியத்தை பார்த்து மீள்கிறது என்பது சூனிய நம்பிக்கையுடையோர் வாதம்.ஆனால் "பிஹி"சூனியத்தை பார்த்து மீள முடியாது என்பதே சரியான வாதம் ஆகும்."பிஹி" என்பதற்கு முன் மவ்சூளின் "மா" வந்துள்ளது.அந்த"மா" வை நோக்கி மீளுகின்ற ஒரு "மவ்சூல் பிஹி" அதற்கு அவசியம் ஆகிறது.எனவே மேலே கூறப்பட்ட "பிஹி" யை இரண்டு வசனத்துக்கு முன்னுள்ள சூனியத்துக்கு மீட்டவே முடியாது.
இனி அதற்கடுத்த வசனத்தில் வரும் "பிஹி"எதை பார்த்து மீள்கிறது என்றால் அதுவும் மூன்று வசனத்துக்கு முன்னுள்ள சூனியத்தை பார்த்து மீள்கிறது என்று கூறுகின்றனர்.
وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ
"அல்லாஹ்வின் அனுமதியைக்கொண்டே அன்று அவர்கள் அதன்மூலம் தீங்கும் செய்ய முடியாது"
இதில் வரும் "பிஹி" பல வசனங்களுக்கு முன்னுள்ள சூனியத்தை பார்த்து மீளவே முடியாது.அருகில் உள்ள பெயரையோ அல்லது அதற்கு ஒப்பான மவ்சூளையோ பார்த்தே மீள வேண்டும் முதலில்.அப்படி என்றால் அதற்கு அருகில் உள்ள அவர்கள் கற்றுக்கொண்ட ஒன்றான "ما" வை பார்த்தே அது மீள்கிறது.
கணவன் மனைவியை பிரிக்க கூடிய ஒன்றை கற்றுக்கொண்டார்கள் என்று வருவதில் சூனியம் என்று இல்லை.எதைக்கொண்டு பிரிக்க முடியுமோ அதை கற்றுகொண்டார்கள் என்றுதான் உள்ளது.மேலே கூறப்பட்ட சூனியம் மூலம்தான் கணவன் மனைவியை பிரிக்க முடியும் என்று இருந்தால் கணவன் மனைவியை பிரிக்கும் சூனியத்தை அவர்கள் கற்றுக்கொண்டார்கள் என்று வரவேண்டும்.அல்லது "ما" என்ற மவ்சூளுக்கு முன் வரும் யதஅள்ளமூன" என்ற வினைச்சொல்லின் அருகில் "ஹூ" என்ற பிரதிப்பெயர் மேலே கூறப்பட்ட சூனியத்தை பார்த்து மீள வேண்டும்.அப்படி மீண்டிருந்தால் "பயதஅள்ளமூனஹூ" என்று வந்திருக்க வேண்டும்.ஏனென்றால் மேலே இரண்டு வரிக்கு முன்பு கூறப்பட்ட சூனியத்தை பார்த்து மீள்வது இந்த முறையில்தான் இருக்க வேண்டும்.
ஆனால் 2: 102 ல் வசனமோ வந்திருக்கும் முறை வித்தியாசம்.மேலே இரண்டு வசனத்துக்கு முன் உள்ள சூனியத்தை பார்த்து மீள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத வகையில் அதன் இலக்கண வடிவமும் சொல் ஒழுங்குகளும் அமைந்துள்ளன.
கணிதப்பாடத்தை கற்றுக்கொடுத்தேன் என்று கூறிவிட்டு இரண்டு வரிக்கு பின்னால் ஏதோ ஒன்றை கற்றுக்கொடுத்தேன் என்று வரமுடியாது.
கணிதப்பாடத்தை கற்றுக்கொடுத்தேன் (அது கஷ்டம் என்பதால்) அவர்களுக்கு இலகுவான பிரயோசனம் உள்ள ஒன்றை கற்றுக்கொண்டார்கள் என்று கூறினால் சரியான வசன ஒழுங்காக இருக்கும்.
இனி சரியான மொழியாக்கம்.........
எதைக்கொண்டு கணவன் மனைவியை பிரிக்க முடியுமோ அந்த ஒன்றை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.(அவர்கள்)கற்றுக்கொண்ட அந்த ஒன்றின் மூலம் அல்லாஹ் நாடினாலே தவிர தீங்கு செய்ய முடியாது.
இவ்வாறு அர்த்தம் செய்தாலே அகீதாவுக்கு முரண் இல்லாமலும் சரியான கருத்தாக்கம் வரும் இலக்கண ரீதியாகவும் குர்ஆனின் போக்கிலும் சரியான அர்த்தம் வரும்.
இது அல்லாத இவர்கள் கொடுக்கும் சம்மந்தம் இல்லாத மொழியாக்கமும் விளக்கமும் இஸ்லாமிய அகீதாவுக்கும் முரண்படுவதோடு மட்டுமில்லாது குர்ஆனின் வசன நடைக்கும் அரபு இலக்கணத்துக்கும் முரணாகவே அமைகிறது.
2:102 வசனங்களுக்கான விளக்கம் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 8 ஜனவரி, 2015

ததஜவினருக்கு மிகப்பெரும் தோல்வியா ?



>> ததஜவினருக்கு  மிகப்பெரும்  தோல்வி (?)  <<

"யாரோ ஒரு காட்டானை அழைத்து வந்து  சூனியம் பலிக்கவில்லை என்றால்,  அவன் இஸ்லாத்திற்கு வந்துவிட வேண்டும் என்ற ததஜ மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அவன் இஸ்லாத்திற்கு வந்தானா ? நீங்கள் அழைத்து வந்தவன் Professional சூனியகாரனா?" என்ற அழகான (?) கேள்வியை கேட்பது ஜெமீல் காக்கா..! ஆம்,  ஜெமீல் காக்காவேதான்..!!

உங்களிடமும் கேள்வி கேட்கவேண்டிய சூழ்நிலை வரும் என்று நாம் நினைத்துக்கூட பார்க்க‌வில்லை!!!

وَحَاجَّهُ قَوْمُهُ ۚ قَالَ أَتُحَاجُّونِّي فِي اللَّهِ وَقَدْ هَدَانِ ۚ وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَن يَشَاءَ رَبِّي شَيْئًا ۗ وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا ۗ أَفَلَا تَتَذَكَّرُونَ
(6:80)

அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். ''அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்சமாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?'' (அல்குர்ஆன் 6:80)

நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு சிலைகளினால் தீங்கு வரும் என்று அவர் சமுதாயத்தவர் சொல்லியபோது, அல்லாஹ் நாடினாலன்றி எதுவும் நேராது என்று சொல்கிறார்கள்.

இதை எப்படி புரிவீர்கள்..??

♦ சிலைக்கு ஒரு சக்தியும் இல்லை என்று புரிவீர்களா? அல்லது
♦ சிலைக்கு அல்லாஹ் நாடினால் சக்தி வரும் என்று புரிவீர்களா? அல்லது
♦ இப்ராஹீம் நபியிடம் Professional, Powerfull சிலை யாரும் வரவில்லை என்று புரிவீர்களா?

சூனியக்காரர்கள் எப்படி வந்தாலும் வெற்றி பெறமாட்டார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். ஆனால் அல்லாஹ் நாடினால் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்! அல்லாஹ் அப்படி நாடுவானா?


(10:81)   فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ

அவர்கள் போட்டபோது ''நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்கச் செய்வதில்லை'' என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன் 10:81)

குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்க செய்யமாட்டான்!

உங்களின் வாதப்படி Professional (?) சூனியக்காரன் வந்து சூனியம் செய்தால் அல்லாஹ் நாடினால் பலிக்கும் என்று சொன்னால், 'சிலைக்கு எந்த சக்தியும் இல்லை அல்லாஹ்  நாடினாலே தவிர' என்ற குர்ஆன் வசனத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். அதேபோல சூனியத்திற்கு எந்த சக்தியும் இல்லை அல்லாஹ் நாடினாலே தவிர என்பதையும் ஏற்றுக்கொள்வீர்கள்.

Professional சூனியக்காரன் வந்து சூனியம் செய்தாலும் அந்த சூனியத்திற்கு ஒரு சக்தியும் கிடையாது என்பது உங்களுக்கு தெரியாதா??!!!

அல்லாஹ் நாடி ஒரு விஷயம் நடக்கும்போது அதற்கு பெயர் "விதி"தானே ஒழிய வேறில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! அப்படி இருக்க, ஒரு மனிதனின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி உங்களை நீதம் தவற வைக்கின்றதே.. ஏன்..??

'மணிகண்டன் என்ற காட்டான் சூனியம் செய்து பலிக்காமல் இஸ்லாத்திற்கு வராமல் போய்விட்டான். ததஜவினருக்கு மிகப்பெரிய தோல்வி' என்று சொல்லும் நீங்கள், அவனால் சூனியம் செய்ய முடியாமல் போய்விட்டது; சூனியம் என்பது ஏமாற்றுக்காரர்களின் ஏமாற்று வித்தை என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்தார்களே? அது உங்களுக்கு புரியவில்லையா..?!!