புதன், 2 செப்டம்பர், 2026

தமிழக முஸ்லீம் பாகம் 3

 தலைப்பு:

“சட்டசபையில் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ‘தீவிரவாதி’ பட்டம் சூட்டியவர்கள் யார்?
அவர் மேற்கோள்காட்டிய 1999 மார்ச் 23 அன்று நடந்த சட்டசபை விவாதம் என்பது, அதற்கு சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி மாதம் தமிழக சிறைகளில், கோவை குண்டுவெடிப்பில் கைதான சிறைவாசிகளுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே நடந்த மோதலினால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்த விவாதம்.
சிறையில், போதைப்பொருட்கள், மதுபானங்கள், பயங்கர ஆயுதங்கள் பதுக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளால் சிறை அதிகாரிகள் உயிருக்கு ஆபத்து என்றெல்லாம் அன்றைக்கு பத்திரிக்கைகள் வழக்கம் போல வதந்திகளை வாந்தி எடுத்தன.
அதன் விளைவாக, அன்றைய சட்டமன்ற உறுப்பினர்களான வேலூர் சி.ஞானசேகரன் (த.மா.கா), திருப்பூர் கே.சுப்பராயன் (சி.பி.எம்), ஐ. கணேசன் (பா.ம.க.), சி.வேலாயுதம் (பா.ஜ.க.), பேராசிரியர் தீரன், டாக்டர் க. கிருஷ்ணசாமி, சு. திருநாவுக்கரசு, ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த விவாதத்தின் போது, சிறையில் கலகம் செய்தவர்களை குறிப்பிடும்போது, ‘தீவிரவாதிகள்’ என்ற வார்த்தையை முதன்முதலாக த.மா.கா. உறுப்பினர் சி.ஞானசேகரன் தான் 4 முறை குறிப்பிடுகிறார்.
அடுத்து பேசிய கே. சுப்பராயன், அல் உம்மா சிறைவாசிகளை நேரடியாக தீவிரவாதிகள் என்று குறிப்பிடவில்லை. 'முஸ்லிம் தீவிரவாதம்' என்று இத்தகைய சம்பவங்களை சுருக்கி விடக்கூடாது. இது உருவாவதற்கு காரணமே ‘இந்து தீவிரவாதம்’ தான் என்கிறார். மேலும், “இந்தியாவில் பயங்கரவாதம் ஜனசங்கம் தோன்றியதிலிருந்து இருக்கிறது” என்று கூறி, இந்துத்துவ இயக்கங்களை சாடுகிறார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பா.ம.க. உறுப்பினர் ஐ. கணேசன், பகிரங்கமாகவே குற்றம்சாட்டி ‘தீவிரவாதிகள்’ என்ற வார்த்தையை 6 தடவை பயன்படுத்துகிறார்.
இந்த விவாதத்தின் போது, முதல்வர் கலைஞர், சு.திருநாவுக்கரசு, டாக்டர். கிருஷ்ணசாமி, பேராசிரியர் தீரன் ஆகியோர் மட்டுமே சிறைவாசிகளை தீவிரவாதிகள் என்று நேரடியாக குறிப்பிடவில்லை.
இந்த விவாதத்தின் போது அவையில் இருந்த உறுப்பினர்களான ஜே. எம். ஹாரூன், நாகை தொகுதி எம்.ஜி.கே. நிஜாமுதீன் மற்றும் புவனகிரி தொகுதி ஏ.வி. அப்துன் நாசர் ஆகியோர் பேசுவதற்கு முற்பட்டபோது, அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று கூறி சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அனுமதி மறுத்து விடுகிறார். அவர்கள் என்ன பேச முற்பட்டார்கள் என்று அவைக் குறிப்பில் இல்லை.
ஒரு கட்டத்தில் புவனகிரி நாசர் குறுக்கே புகுந்து, "முஸ்லிம் தீவிரவாதிகள்” என்று குறிப்பிடுவதைத் தவிர்த்து, “தீவிரவாதிகள்” என்று மட்டும் குறிப்பிடும்படி கோரிக்கை வைக்கிறார். (இந்த இடத்தில், ‘முஸ்லிம் தீவிரவாதி’ என்று மதத்தை இணைப்பதைத் தான் நாசரும் ஆட்சேபிட்கிறார். ‘தீவிரவாதிகள்’ என்ற பொதுவான வார்த்தைப் பயன்பாட்டை அவர் எதிர்க்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.)
பா.ஜ.க. உறுப்பினர் சி.வேலாயுதம் தனது உரையில், மதத்தின் பெயரால் அதன் பின்னணியில் தவறுகள் நடக்கக்கூடாது. மதத் தலைவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார்களா? என்பதைக் கண்டறியவேண்டும் என்கிறார்.
அவருக்கு உடனடியாக பதில் கொடுத்த முதல்வர் கலைஞர், "மதத்தின் பின்னணி எதிலும் இருக்கக்கூடாது என்பது உறுப்பினர் வேலாயுதத்தின் வாதம்.” அப்படியெனில், "பாபர் மசூதி எந்த பின்னணியில் இடிக்கப்பட்டது?” என்று கேட்டு அவரை வாயடைக்கச் செய்கிறார்.
மேலும் அவர், "ஒருசிலர்தான் தொழுகை நடத்திய இடம் என்று சொல்கின்றார்கள். உண்மையிலேயே அது ஒரு பாழடைந்த, பாபர் கட்டிய ஒரு கட்டடம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அங்கு இராமர் விக்கிரகம் வைக்கப்பட்டிருந்தது." என்கிறார்.
அதற்குப் பதிலளித்த,மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி, "பாபர் எழுப்பிய அந்த மண்டபம் பாழடைந்து கிடக்கிறது. அங்கே புதர்களும் மண்டிக் கிடக்கின்றன, பாம்புகளும் தேள்களும் ஊர்கின்றன. அதனால் மக்களுக்கு அபாயம் என்ற கருத்திலா அந்த இடம் இடிக்கப்பட்டது. இல்லை. இது முஸ்லிம்களுடைய புனித இடமாகக் கருதப்படுகிறது. இசுலாமியர்களுடைய பேரரசராக விளங்கிய பாபரால் கட்டப்பட்டது என்பதற்காக, அந்தக் காரணத்திற்காக இடிக்கப்பட்டதேயல்லாமல் அது பாழடைந்த கட்டடம் என்பதற்காக இடிக்கப்படவில்லை. பாழடைந்த கட்டடம் என்பதற்காக இடிக்கப்பட்டால், இப்போதுள்ள பாரதிய ஜனதாவின் ஆட்சி அதைப் புதிய கட்டடமாகக் கட்டித் தரலாமே? ஏன் இன்னும் அதற்கான முயற்சி தொடங்கப்படவில்லை?" என்று கேட்கிறார்.
சி.பி.எம். உறுப்பினர் கே. சுப்பராயன், இது ஒரு சமூகப் பிரச்சனை, இதற்கு அரசியல் ரீதியான தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்.
அவருக்குப் பதிலளித்த முதல்வர் கலைஞர், “அந்தத் தீர்வை உங்கள் கட்சி சார்பாக எனக்கு எழுதி அனுப்புங்கள். நான் யோசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “இந்த தீர்வை கூட மாநில அரசு எடுக்க முடியாது. அது அயோத்தியிலிருந்து ஆரம்பம் ஆக வேண்டும்” என்று கூறி, இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டி கொடுப்பதன் மூலம் தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பதை அவையில் சூசகமாக முன்வைக்கிறார்.
இறுதியாக அனைத்துக்கும் பதில் அளித்த சம்பந்தப்பட்ட சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா, பத்திரிகைகளில் வந்தவை மிகைப்படுத்தப்பட்டவை என்று கூறி, சிறைகளில் நடந்த உண்மை நிகழ்வுகளை புள்ளிவிபரங்களுடன் பட்டியலிடுகிறார்.
அப்போது, “அல் உம்மாவை சேர்ந்தவர்கள் 262 பேர்,
ஜிஹாத் கமிட்டியினர் 6 பேர், தமுமுக வை சேர்ந்தவர்கள் 8 பேர், பிற இயக்கத்தினர் 27 பேர். ஆகமொத்தம் 303 ‘முஸ்லிம் தீவிரவாதிகள்’ சிறைக்கைதிகளாக உள்ளனர்” என்று கூறுகிறார். (புவனகிரி நாசரின் ஆட்சேபனையைக் கூட அவர் கண்டு கொள்ளவில்லை)
ஆலடி அருணா தனது பதிலுரையில், மூன்று முறை ‘முஸ்லிம் தீவிரவாதிகள்’ என்றும் 14 முறை ‘தீவிரவாதிகள்’ என்றும் பயன்படுத்தி இருக்கிறார்.
ஆக இந்த விவாதத்திலிருந்து முஸ்லிம் சிறைவாசிகள் தீவிரவாதிகளாகத் தான் பெரும்பாலும் பார்க்கப்பட்டார்கள் என்பது ‘உள்ளங்கை நெல்லி’யாக தெரிகிறது.
சமஉ முஸ்தபா முன்வைத்த ஆதாரத்தின்படி, திமுக மட்டுமல்ல, த.மா.கா, பா.ம.க. உறுப்பினர்களும் முஸ்லிம் சிறைவாசிகளை தீவிரவாதிகள் என்றே குறிப்பிட்டு பேசி இருக்கிறார்கள்.
இப்போது நாம் முஸ்தபாவிடம், அவர் எதை ஆதாரமாகக் கொண்டு சட்டசபையில் குதித்தாரோ, அதிலிருந்து தான் நாம் கேள்வியை முன்வைக்கிறோம்.
சட்ட அமைச்சர் ஆலடி அருணா, த.மா.கா. சி.ஞானசேகரன், பா.ம.க. ஐ. கணேசன் ஆகியோர் முஸ்லிம் சிறை வாசிகளை ‘தீவிரவாதிகள்’ என்று அழைத்திருக்கும்போது, மற்ற கட்சிகளை கண்டுகொள்ளாமல், திமுக மீது மட்டும் பாய்ந்து பிராண்டியது நேர்மையான செயலா?
நான் முந்தைய தொடரில் குறிப்பிட்டதைப் போல இது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். திமுகவுக்கு எதிராக முஸ்லிம்களைத் திசைத் திருப்பும் ஈனச் செயல்.
( சமஉ முஸ்தபா பேசியதற்கான நமது எதிர் விமர்சனம் இத்துடன் முடிகிறது. அடுத்து காங்கிரஸ்,அ.தி.மு.க. தி.மு.க.வை நோக்கிய நமது விமர்சன பார்வை தொடரும் இன்ஷாஅல்லாஹ்)
குறிப்பு: 1999 மார்ச் 23 சட்டசபை விவாத அவைக் குறிப்பை முழுமையாக படிக்க விரும்பவோர், கமெண்ட் பாக்ஸில் உள்ள Link ஐ கிளிக் செய்து, Record - Date ஐ தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது என்னைத் தொடர்பு கொண்டாலும் PDF File ஐ நான் வாட்சப்பில் அனுப்பி வைக்கிறேன்.


https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0XfScSz5CvygP2weHaTQQKe3ryAtP6ENUhCVjtHo7QAaora52aZmjVBDuwumfyZH7l&id=100009858432834

தமிழக முஸ்லீம் பாலம் 2

 மதுரை மக்கள் அவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் வரை, அவர் யாரென்றே அறியப்படாத வி.எம்.எஸ். முஸ்தபா, தனது அரசியல் பயணத்தைத் த.மு.மு.க. விலிருந்து தொடங்கியதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சட்டசபையில் பேசத் தொடங்கினார்.

தமுமுக திருவல்லிக்கேணி கிளையில் அவர் பயணித்த ஆரம்ப காலத்தில் அவர் சமுதாய உணர்வு உள்ளவராகத் தான் இருந்திருப்பார் என்று அவர் மீது நாம் நல்லெண்ணம் கொள்வோம்.
அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்துச் சென்ற பிற அரசியல் கட்சியில் சேர்ந்து கொண்டு சமுதாயத்திற்காக என்ன செய்தார் என்ற கேள்வியைப் பலரும் பொது வெளியில் எழுப்புவதையும் பார்க்க முடிகிறது.
திமுகவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான போராட்டங்களை, கண்டன கூட்டங்களை நாம் நடத்தி இருக்கிறோம்! எத்தனையோ கைதுகளை நாம் சந்தித்து இருக்கிறோம். அந்த சமயத்தில் இவரது பங்களிப்பு என்ன என்ற கேள்வியும் பரவலாக உள்ளது.
இவருக்கு எம்.எல்.ஏ. என்ற வானாளாவிய அதிகாரப் பதவியை வாரி வழங்கிய வள்ளல், இவரது ஆதர்ஷ நாயகன் வெற்றி வேந்தர் விஜய், திமுக மற்றும் அதிமுக அரசால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது, என்ன எதிர்வினையாற்றினார் என்பதையாவது இந்த சமுதாயத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்.
நாம் அறிந்தவரை தனது நடிப்புத் தொழில் நலனுக்காக நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு அந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் சரணடைந்து தான் கிடந்தார்.
சட்டசபையில் தீவிரவாதியாக சித்தரிப்பதைக் காட்டிலும் வெகுஜன மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான ஊடகம் சினிமா என்பது உலகறிந்த உண்மை.
அந்த சினிமா மூலம் சாமானிய முஸ்லிம்களை சிலிப்பர் செல்லாக, தமிழ் நாட்டில் குண்டுவைக்கும் தீவிரவாதிகளாக சித்தரித்த நடிகர் விஜய், இன்றளவும் முஸ்லிம் சமுதாயத்திடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லையே! விஜய்யிடம் மன்னிப்புக்கான கோரிக்கையாவது இவர் வைத்தாரா?
‘பீஸ்ட்’ படத்தின் கதைக்களம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதால் விஜயை விமர்சித்த இவர், தவெக வில் ஐக்கியமானது எதன் அடிப்படையில்?
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த விஜய் தனது செயலுக்கு மனம் வருந்தி முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பதாலா?
அல்லது அதற்குப் பரிகாரமாக, முஸ்லிம்கள் மீது விழுந்துள்ள தீவிரவாத பார்வையைத் தகர்க்கும் வகையில், முஸ்லிம்களின் வயிற்றில் பால் வார்க்கும் வண்ணம், நமது சமுதாய நலன் சார்ந்த பிரச்சனைகளை கதைக் களமாக முன்வைத்து ஒரு சிறந்த படத்தைத் தந்து விட்டார் என்பதாலா?
தேர்தலில் போட்டியிடப் போகிறோமே! முஸ்லிம் வாக்குகளைப் பெற வேண்டுமே! என்ற அச்சமோ தயக்கமோ கொஞ்சம் கூட இல்லாமல், ஆணவமும் அலட்சியமும் தலைக்கு ஏறி, இறுதியாக வெளிவந்த ஜனநாயகன் படத்திலும் கூட முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்தாரே! அதற்காகவாவது விஜய்யிடம் விளக்கம் கேட்டிருப்பாரா?
முஸ்லிம்களின் உணர்வுகளை குறி பார்த்து சீறிப் பாய்ந்த விஜய்யின் ‘துப்பாக்கி’க்கு எதிராக எல்லா முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று திரண்டதே! அப்போது இந்த முஸ்தபாவும் விஜய்யை எதிர்த்திருப்பாரே? அந்த எதிர்ப்பு எப்படி ஆதரவாக மாறியது? சமுதாய நலனை விட அரசியல் சுய லாப கணக்குத்தானே?
“உனது படங்களில் எனது சமுதாயத்தை நீ எப்படி வேண்டுமானாலும் கேவலப்படுத்திக்கொள்! தீவிரவாதியாகவோ, தேச துரோகியாகவோ சித்தரித்துக்கொள்! ஆனால் எனக்கு யாருமே தர முடியாத எம்.எல்.ஏ. என்னும் சொர்க்கப் பதவியை (?) நீ வழங்கி இருக்கிறாய் அல்லவா! அதற்கு ஈடு இணை உண்டா? அதற்காகவே, தீயசக்தி என்று நீ வர்ணிக்கும் தி.மு.க.வை மட்டும் குறிவைத்து, 28 ஆண்டுகளுக்கு முன் எங்களை தீவிரவாதிகள் என பேசியதை இப்போது மடைமாற்றி முஸ்லிம்களை நம் பக்கம் திருப்பிவிடுகிறேன்.”
என்ற ரீதியிலான அவரது சட்டசபை பேச்சும் நடவடிக்கையும் நயவஞ்சகத்தின் அடையாளம் இல்லையா?.
(இன்ஷாஅல்லாஹ் அடுத்த தொடரில்…”முஸ்லிம் சிறைவாசிகளுக்கு 'தீவிரவாதி' பட்டம் சூட்டியவர்கள் யார்?”)

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02FuTkHdoByYGH1VL54eQ9oHeuQzUVMjYVoj8QeZrh2Sh8Ke7uXmE1vBsgPU4wwtvHl&id=100009858432834

தமிழக முஸ்லீம் பாகம் 1

 அன்பான சகோதரர்களே!

எனது முந்தைய பதிவில், சட்டசபையில் பேசிய தவெக சமஉ வி.எம்.எஸ். முஸ்தபாவின் அபத்தமான உரையை ஒட்டி ஒரு விரிவான கட்டுரைத் தொடரை வெளியிடுவதாக குறிப்பிட்டிருந்தேன்.
அதன் அடிப்படையில், கடந்த காலங்களில் இஸ்லாமிய சமுதாயம் சந்தித்த கசப்பான சம்பவங்களை வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவனும் அல்ல; எந்தக் கட்சியிலும் உறுப்பினராகவும் இல்லை என்பதால் இயன்றவரை பக்க சார்பின்றி இன்ஷாஅல்லாஹ் எழுத எண்ணி இருக்கிறேன்.
இந்தக் கட்டுரைத் தொடரில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., போன்ற பிரதான கட்சிகள் முஸ்லிம்களுக்கு என்னென்ன கொடுமைகள் இழைத்தன. அதற்கு நாம் எப்படி எதிர்வினையாற்றினோம். பிற்காலத்தில் அவர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள். அதைத் தொடர்ந்து நமது நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம்,
மேலும் ‘தீவிரவாதம்- தீவிரவாதிகள்’ போன்ற வார்த்தைகள் முஸ்லிம்களை நோக்கி அரசியல் கட்சியினரால் தமிழ்நாட்டில் எப்போது எதனால் பயன்படுத்தப்பட்டது? போன்ற கேள்விகளுக்கும் இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடரில் பதில் கிடைக்கும்.
இந்தக் கட்டுரைத் தொடரை முழுமையாக படித்தால் மட்டுமே இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் மீதான நமது பார்வை தெளிவாக விளங்கும். ஒரு பகுதியை மட்டும் படித்தால், ஒரு சாராருக்குச் சாதகமாகவும், மற்றொரு சாராருக்குப் பாதகமாகவும் தோன்றும். எனவே தொடர்ந்து முழுமையாக படித்துவிட்டு கருத்துகள் பதிவிட்டால் அது ஆரோக்கியமாக இருக்கும்.
அநாகரீகமான, கேலி கிண்டல் செய்யும் பின்னூட்டங்களைத் தவிர்க்கவும். அதனால் எந்தப் பயனும் இருக்காது. கருத்துச் செறிவான பின்னூட்டங்கள் பலருக்கும் பயன் அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தக் கட்டுரைக்குக் காரணமாகவும், தூண்டுகோளாகவும் இருப்பது வி.எம்.எஸ். முஸ்தபாவின் சட்டமன்ற உரை என்பதால், முதலில் அவரை குறித்த விமர்சன பார்வையையும், சில கேள்விகளையும் முன்வைத்து தொடங்குகிறேன்.
தலைப்பு:
“முஸ்தபாவின் முனை மழுங்கிப் போன ஆயுதம்!”
சென்ற 25/08/2026 அன்று சட்டசபை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதார் பதுருதீன் எனும் வி.எம்.எஸ். முஸ்தபா உரையாற்றினார்.
27 ஆண்டுகளுக்கு முந்தைய திமுக ஆட்சியில் தமிழக சட்டசபையில் நடந்த ஒரு விவாத நிகழ்வில் பல கட்சிகளின் உறுப்பினர்களால் பேசப்பட்ட உரைத் தொகுப்பை ஆதாரமாகக் கொண்டு பேச முற்பட்டவர், உணர்ச்சிப் பிழம்பான ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
அவர் மேற்கோள்காட்டிய 23/03/1999 சட்டசபை அவைக் குறிப்பில், ‘முஸ்லிம் தீவிரவாதிகள்’ என்று 5 முறை கூறப்பட்டிருந்ததாம்!
"நான் பாதிக்கப்பட்டேன்…!” “நான் நசுக்கப்பட்டேன்…!” என்று உணர்ச்சிப் பொங்க குதித்ததைப் பார்த்தோம்.
அவர் ஆதாரமாகக் காட்டிய அவைக் குறிப்பு பக்கம் 182 முதல் 203 வரை உள்ள 22 பக்கங்களில் 5 முறை அல்ல, ஏறத்தாழ 30 முறை ‘தீவிரவாதிகள்’ என்ற வார்த்தைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அந்த அவைக் குறிப்பின் முழு விபரமும் பின்னால் குறிப்பிடுகிறேன்.)
22 பக்க உரையையும் அவர் முழுமையாக படித்துப் பார்த்து அதன் சாராம்சத்தைப் புரிந்து, உள்ளது உள்ளபடி அவர் பேசாமல், நுனிப்புல் மேய்ந்திருக்கிறார்.
அவரது கட்சி அவருக்குக் கொடுத்த அசைன்மென்ட்டை தலைமேல் ஏற்று, திமுக மீதான கண்மூடித்தனமான வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் மட்டுமே உமிழ்ந்து இருக்கிறார்.
கடுகளவு நேர்மையோ, நியாயமோ இல்லாமல் விஜய் மீதான விசுவாசத்தை மட்டுமே வெளிப்படுத்த முனைந்துள்ளார்.
சட்டசபையில் எதையாவது பேசி பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். திமுகவை டேமேஜ் செய்ய வேண்டும். முதல்வர் ஜோசப் விஜயை வரம்பு மீறி வானளாவ புகழ்ந்து பேசி அவரை குளிர்விக்க வேண்டும் அதன் மூலம் (அடுத்த புரமோசனுக்காக) முதல்வரின் குட் புக்கில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே அவர் பேசி இருக்கிறார் என்பதும் தெளிவாக புரிகிறது.
அவர் நேர்மையானவராக இருந்திருந்தால், சபாநாயகர் அவருக்கு அளித்த நேரத்தைப் பயன்படுத்தி, 23/03/1999 அவைக் குறிப்பு முழுவதையும் கூட படித்திருக்க முடியும். அல்லது குறைந்தபட்சம் அவரது உரைக்கு ஆதாரமாக காட்டிய தரவின் முழு விபரங்களின் சாராம்சத்தையாவது பேசி இருக்க வேண்டும்.
அல்லது சட்டசபை வளாகத்தில் பத்திரிகையாளர்களிடமாவது அதை முழுமையாக விளக்கி, யாரெல்லாம் முஸ்லிம் கைதிகளை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டார்கள் என்பதைச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவரது நோக்கம் அதுவல்ல என்பது தெளிவாக வெளிப்பட்டது.
அப்படி செய்திருந்தால் திமுகவை மட்டும் இலக்கு வைத்து குற்றவாளி ஆக்க முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளையும் மக்கள் மத்தியில் குற்றவாளியாக்க நேரிடும் என்பதால் லாவகமாக அதைத் தவிர்த்திருக்கிறார். இது அவரது நேர்மையற்ற சந்தர்ப்பவாத மற்றும் பக்கவாத அரசியலுக்கான ஆதாரம்.
(தொடர்ச்சி அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்)

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02SNETiRTvA3nGTCnv23dQCmQALrV8Aod81NbdRPE3fi24k1n8tZuwuTCiMysGMqFLl&id=100009858432834

வெள்ளி, 27 மார்ச், 2026

இஸ்லாத்தின் பார்வையில் உறைவிடம் பாகம் 1

 

இஸ்லாத்தின் பார்வையில் உறைவிடம் பாகம் 1

மனித வாழ்வில் வீட்டின் அவசியம்இஸ்லாமின் பார்வை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
எல்லாப் புகழும் அனைத்துலகங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியது. அவரைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் எவருமில்லை என்றும், முஹம்மத் அவர்கள் அவருடைய அடியாரும் தூதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறோம்.

முன்னதாக ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் பார்வையில் உணவு என்ற தலைப்பில் சில உரைகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் உடை, நகை, அலங்காரம் போன்ற மனித வாழ்க்கையின் அத்தியாவசிய அம்சங்களை இஸ்லாம் எவ்வாறு வழிநடத்துகிறது என்பதைப் பார்த்தோம்.

அதே வரிசையில் மனித வாழ்வின் இன்னொரு முக்கியத் தேவையான உறைவிடம்வீடு பற்றியும் இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஒரு கருத்து

சிலர் இஸ்லாமிய அடிப்படைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல்,
பெரிய வீடுகள் கட்டக் கூடாது”,
ஒரு வீட்டிற்கு மேல் வைத்திருக்கக் கூடாது”,
வீட்டை வாடகைக்கு விடக் கூடாது

என்று பல கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டுகிறார்கள். அதாவது:

ஒரு முஸ்லிம் செய்வதற்கெல்லாம் கூலி கிடைக்கும்; ஆனால் கட்டடம் கட்டுவதற்காக செலவிடும் பணத்திற்கு பயன் இல்லை

என்று ஒரு கருத்தை ஸஹீஹ் புஹாரிஹதீஸ் எண் 5672 எனச் சொல்லி பரப்புகின்றனர்.

ஆனால் இந்த செய்தியை ஆராய்ந்தால், அது நபிகள் நாயகம்அவர்கள் கூறிய ஹதீஸ் அல்ல என்பது தெளிவாகிறது.

அது கப்பாப் இப்னு அரத்  (ரலி) அவர்களின் தனிப்பட்ட கருத்தாக பதிவாகியுள்ளது.

அதனால், ஒரு செய்தி புகாரியில் இருப்பதால் மட்டும் அது நபிகள் நாயகம்கூறியதாகக் கருத முடியாது. அது நபியின் சொல்லா? அல்லது ஒரு சஹாபியின் கருத்தா? என்பதை ஆராய்ந்து அறிதல் அவசியம்.


வீடுஅல்லாஹ்வின் அருட்கொடை

திருக்குர்ஆன் வீட்டை ஒரு அருட்கொடையாக குறிப்பிடுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:
وَاذۡكُرُوۡۤا اِذۡ جَعَلَـكُمۡ خُلَفَآءَ مِنۡۢ بَعۡدِ عَادٍ وَّبَوَّاَكُمۡ فِى الۡاَرۡضِ تَـتَّخِذُوۡنَ مِنۡ سُهُوۡلِهَا قُصُوۡرًا وَّتَـنۡحِتُوۡنَ الۡجِبَالَ بُيُوۡتًا​ ۚ فَاذۡكُرُوۡۤا اٰ لَۤاءَ اللّٰهِ وَلَا تَعۡثَوۡا فِى الۡاَرۡضِ مُفۡسِدِيۡنَ‏

ஆது சமூகத்திற்குப் பிறகு உங்களை பூமியில் வாரிசுகளாக ஆக்கி, அதில் உங்களை குடியமரச் செய்தான். நீங்கள் சமவெளிகளில் அரண்மனைகளை கட்டிக் கொள்கிறீர்கள்; மலைகளை வெட்டி வீடுகளை உருவாக்குகிறீர்கள். ஆகையால் அல்லாஹ்வின் அருள்களை நினைவுகூருங்கள்.”

ஆதாரம்: அல் குர்ஆன் சூரா அல்-அஃராஃப் (7:74)

இந்த வசனம் ஒரு முக்கிய உண்மையை உணர்த்துகிறது.
வீடுகள், கட்டிடங்கள், மாளிகைகள் ஆகியவை மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அருள்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.


மாளிகைகளும் அல்லாஹ்வின் அருள்

நபிகள் நாயகம்அவர்களை எதிர்த்தவர்கள்,

இவர் என்ன தூதர்? நம்மைப் போலவே உணவு உண்ணுகிறார்; சந்தைகளில் நடமாடுகிறார்

என்று கேலி செய்தனர். மேலும்,

இவருக்கு ஒரு புதையல் கிடைக்க வேண்டாமா? பெரிய தோட்டங்களும் இல்லையா?”

என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அல்லாஹ் கூறுகிறான்:

 

تَبٰـرَكَ الَّذِىۡۤ اِنۡ شَآءَ جَعَلَ لَكَ خَيۡرًا مِّنۡ ذٰ لِكَ جَنّٰتٍ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ ۙ وَيَجۡعَلْ لَّكَ قُصُوۡرًا‏

அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக ஏற்படுத்துவான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மாளிகைகளையும் ஏற்படுத்துவான்.

 ஆதாரம்: சூரா அல்-புர்கான் (25:10)

இந்த வசனம் ஒரு உண்மையை தெளிவாகச் சொல்கிறது.
மாளிகைகள் அல்லது பெரிய வீடுகள் ஒரு கெட்ட விஷயமாக இருந்தால், அதை அல்லாஹ் தனது தூதருக்குக் கொடுப்பதாகச் சொல்ல மாட்டான்.

அதனால், வீடு அமைத்தல் அல்லது நல்ல வீட்டில் வாழ்தல் இஸ்லாமில் குற்றமாக அல்ல; அது அல்லாஹ்வின் அருளாகக் கருதப்படுகிறது.


வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டன

இன்னொரு முக்கியமான நிகழ்வை குர்ஆன் எடுத்துக்காட்டுகிறது.

மூஸா (அலை) அவர்கள் காலத்தில், பனீ இஸ்ராயீல் மக்கள் பிரவுனின் அடிமைகளாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு உரிமையும், சுதந்திரமும் இல்லை.

அல்லாஹ் அவர்களை விடுவித்தபின், அவர்களுக்கு முதலில் கொடுக்கப்பட்ட கட்டளை என்ன?

(10:87)

وَاَوۡحَيۡنَاۤ اِلَىٰ مُوۡسٰى وَاَخِيۡهِ اَنۡ تَبَوَّاٰ لِقَوۡمِكُمَا بِمِصۡرَ بُيُوۡتًا وَّاجۡعَلُوۡا بُيُوۡتَكُمۡ قِبۡلَةً وَّاَقِيۡمُوا الصَّلٰوةَ​ ؕ وَبَشِّرِ الۡمُؤۡمِنِيۡنَ‏

"இருவரும், உங்கள் சமுதாயத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்! உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர்நோக்கும் வகையில் ஆக்குங்கள்!216 தொழுகையை நிலை நாட்டுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!'' என்று மூஸாவுக்கும், அவரது சகோதரருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம்.

ஆதாரம்: Qur'an – சூரா யூனுஸ் (10:87)

இதன் மூலம் ஒரு முக்கிய உண்மை விளங்குகிறது:
மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்று வீடு என்பதே.

அல்லாஹ் ஒரு நபிக்கு வஹி மூலம் மக்களுக்காக வீடுகளை அமைக்கச் சொன்னான் என்றால், அது மனித வாழ்க்கையில் வீடு எவ்வளவு அவசியமானது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.


வீடுஅல்லாஹ் அருளிய அமைதியின் நிலையம்

ஒரு மனிதன் வாழ்க்கையில் வீடு என்பது சாதாரண தேவையாக மட்டும் அல்ல; அது அமைதி, பாதுகாப்பு மற்றும் குடும்ப உறவுகள் மலர்கின்ற இடமாகும். ஒருவன் வாடகை வீட்டிலோ அல்லது தற்காலிக வசிப்பிடங்களிலோ வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதுவே வாழ்க்கையின் இறுதி இலக்கு என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. தனக்கும் குடும்பத்திற்கும் ஒரு நிலையான வீடு அமைத்துக் கொள்ள முயற்சி செய்வதும், அதற்காக உழைப்பதும் மனிதனின் இயல்பான முயற்சியாகும்.

இதைத் தடுக்க அல்லாஹ் எங்கும் கூறவில்லை; மாறாக வீடு மனிதனுக்கு ஒரு அருளாக வழங்கப்பட்டிருப்பதை குர்ஆன் வலியுறுத்துகிறது.


வீடுகளில் அல்லாஹ் அமைதியை வைத்தான்

அல்லாஹ் மனித வாழ்க்கையின் உண்மையை அழகாக விளக்கி கூறுகிறான்:

(10:87)

وَاَوۡحَيۡنَاۤ اِلَىٰ مُوۡسٰى وَاَخِيۡهِ اَنۡ تَبَوَّاٰ لِقَوۡمِكُمَا بِمِصۡرَ بُيُوۡتًا وَّاجۡعَلُوۡا بُيُوۡتَكُمۡ قِبۡلَةً وَّاَقِيۡمُوا الصَّلٰوةَ​ ؕ وَبَشِّرِ الۡمُؤۡمِنِيۡنَ‏

"இருவரும், உங்கள் சமுதாயத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்! உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர்நோக்கும் வகையில் ஆக்குங்கள்!216 தொழுகையை நிலை நாட்டுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!'' என்று மூஸாவுக்கும், அவரது சகோதரருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம்..”


குர்ஆன், சூரா அந்நஹ்ல் 16:80

மனிதன் வெளியுலகில் எவ்வளவு வேலைகள் செய்தாலும், எவ்வளவு இடங்களில் சுற்றித் திரிந்தாலும், நாள் முடிவில் அவன் திரும்பிச் செல்வது தனது வீட்டிற்கே. அங்கே தான் அவனுக்கு உண்மையான நிம்மதி கிடைக்கிறது.

மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்இவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அன்பும் பரிவும் வீட்டில்தான் உருவாகின்றன. வெளியில் கிடைக்காத அந்த தனிமையும் சாந்தியையும் அல்லாஹ் வீட்டின் மூலம் மனிதனுக்குத் தந்திருக்கிறான்.


அல்லாஹ் மனிதனுக்கு தங்கும் இடங்களை ஏற்படுத்தினான்

அதே சூராவில் அல்லாஹ் மேலும் கூறுகிறான்:

அல்லாஹ் தன் படைப்புகளில் இருந்து உங்களுக்கு நிழல்களையும், மலைகளில் தங்கும் இடங்களையும் ஏற்படுத்தினான்.”
குர்ஆன், சூரா அந்நஹ்ல் 16:81

மலைகளில் உள்ள குகைகள், கோட்டைகள், பாதுகாப்பான இடங்கள்இவை அனைத்தும் மனிதன் தங்குவதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய அருள்களாகும்.

இவ்வாறு மனிதனுக்கு பாதுகாப்பான தங்கும் இடம் அவசியம் என்பதை குர்ஆன் பல வழிகளில் எடுத்துரைக்கிறது.


வீடு அனுமதிக்கப்பட்ட அருள்ஆனால் முன்னுரிமை அல்லாஹ்வுக்கே

அல்லாஹ் உலக வாழ்க்கையில் மனிதன் விரும்பும் பல விஷயங்களைப் பற்றி பேசும் போது வீடுகளையும் குறிப்பிடுகிறான்:

قُلۡ اِنۡ كَانَ اٰبَآؤُكُمۡ وَاَبۡنَآؤُكُمۡ وَاِخۡوَانُكُمۡ وَاَزۡوَاجُكُمۡ وَعَشِيۡرَتُكُمۡ وَ اَمۡوَالُ ۨاقۡتَرَفۡتُمُوۡهَا وَتِجَارَةٌ تَخۡشَوۡنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرۡضَوۡنَهَاۤ اَحَبَّ اِلَيۡكُمۡ مِّنَ اللّٰهِ وَرَسُوۡلِهٖ وَ جِهَادٍ فِىۡ سَبِيۡلِهٖ فَتَرَ بَّصُوۡا حَتّٰى يَاۡتِىَ اللّٰهُ بِاَمۡرِهٖ​ ؕ وَاللّٰهُ لَا يَهۡدِى الۡقَوۡمَ الۡفٰسِقِيۡنَ‏

உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் துணைவியர்கள், உங்கள் குடும்பத்தினர், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள், நஷ்டமாகிவிடுமோ என்று அஞ்சும் உங்கள் வியாபாரங்கள், நீங்கள் விரும்பும் குடியிருப்புகள்இவை அனைத்தும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட உங்களுக்கு மிகவும் பிரியமானதாக இருந்தால், அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்குங்கள்.”
குர்ஆன், சூரா அத்தௌபா 9:24

இந்த வசனம் ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகிறது.
வீடு வைத்திருப்பது தவறு அல்ல; செல்வம், குடும்பம், உறவுகள்இவை அனைத்தும் மனிதனுக்கு அனுமதிக்கப்பட்டவை.

ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது:
அல்லாஹ்வையும் அவன் தூதரையும் விட இவை முக்கியமானதாக மாறக் கூடாது.

அதாவது,

·         தந்தை சொன்னதால் ஹராம் செயல் செய்யக்கூடாது

·         பிள்ளைகள் கேட்டதால் தவறு செய்யக்கூடாது

·         செல்வம் அல்லது வீடு காரணமாக மார்க்கத்தை விட்டுவிடக்கூடாது

அல்லாஹ் மற்றும் அவன் தூதர்முதன்மை; மற்றவை அனைத்தும் அதற்கு கீழான இடத்தில் இருக்க வேண்டும்.


சுலைமான் நபியின் மாளிகைசெல்வமும் மார்க்கமும்

அல்லாஹ் சில நபிமார்களுக்கு மிகுந்த செல்வமும் அதிகாரமும் கொடுத்தான். அதில் சிறந்த உதாரணம் சுலைமான் நபி (அலைஹிஸ்ஸலாம்).

அவரது அரண்மனை குறித்து குர்ஆன் கூறுகிறது:

قِيۡلَ لَهَا ادۡخُلِى الصَّرۡحَ​ ۚ فَلَمَّا رَاَتۡهُ حَسِبَـتۡهُ لُـجَّةً وَّكَشَفَتۡ عَنۡ سَاقَيۡهَا ​ؕ قَالَ اِنَّهٗ صَرۡحٌ مُّمَرَّدٌ مِّنۡ قَوَارِيۡرَ ۙ​قَالَتۡ رَبِّ اِنِّىۡ ظَلَمۡتُ نَـفۡسِىۡ وَ اَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمٰنَ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَ

அவளிடம்அரண்மனைக்குள் நுழைஎன்று கூறப்பட்டது. அதை அவள் பார்த்தபோது அது நீர் என நினைத்து தனது ஆடையை உயர்த்தினாள். (அப்போது) அவர் கூறினார்: ‘இது கண்ணாடியால் செதுக்கப்பட்ட ஒரு தரை.’ ”
குர்ஆன், சூரா அந்நம்ல் 27:44

அந்த அரண்மனையின் தரை கண்ணாடி போல பொலிவுடன் இருந்ததால், வந்த ராணி அதை தண்ணீரென நினைத்தாள். இது அந்த காலத்தில் இருந்த அதிசயமான அரண்மனை வசதிகளை வெளிப்படுத்துகிறது.

இதில் இருந்து ஒரு உண்மை புரிகிறது:
ஒரு இறைத்தூதரான சுலைமான் நபிக்கு அல்லாஹ் செல்வமும் அழகான மாளிகையும் கொடுத்திருந்தான்.

அதனால் செல்வமும் வீடும் இருப்பது தவறு அல்ல; அவை அல்லாஹ்வின் அருளாகவே இருக்கலாம்.


ஒரு மாளிகையின் உதாரணம்நபியின் பணிக்கு ஒப்பீடு

நபிகள் நாயகம்ஒரு ஹதீஸில் கூறுகிறார்கள்:

ஒரு முறை தூக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவில் இருந்தபோது, இரண்டு மலக்குகள் பேசிக் கொண்டதை கேட்டேன். அவர்கள் கூறினர்:

ஒரு மனிதன் ஒரு பெரிய வீட்டை கட்டி அதில் விருந்து ஏற்பாடு செய்து மக்களை அழைக்க தூதரை அனுப்பினான். யார் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு வந்தார்களோ அவர்கள் விருந்தைப் பெற்றார்கள்; வராதவர்கள் அதை இழந்தார்கள்.”

பின்னர் நபிகள் நாயகம்விளக்கினார்கள்:

·         அந்த வீட்டின் உதாரணம் சொர்க்கம்

·         அழைப்பவர் அல்லாஹ்

·         அழைப்பை அறிவிப்பவர் முஹம்மது

ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் 7281

இந்த ஹதீஸில் கூட ஒரு மாளிகை கட்டி விருந்து கொடுப்பது நல்ல செயலுக்கான உதாரணமாகக் கூறப்படுகிறது.


மனிதனுக்கான மூன்று பெரிய பாக்கியங்கள்

நபிகள் நாயகம்மேலும் கூறுகிறார்கள்:

மனிதனுக்கு கிடைக்கும் பாக்கியங்களில் மூன்று முக்கியமானவை:
நல்ல (சாலிஹான) மனைவி,
நல்ல வீடு,
நல்ல வாகனம்.”

ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் 1445
மேலும் இதே கருத்து திர்மிதி மற்றும் இப்னு ஹிப்பான் போன்ற ஹதீஸ் நூல்களிலும் வந்துள்ளது.

மற்றொரு அறிவிப்பில்:

விசாலமான வீடு (பரந்த, வசதியான வீடு)

என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் நாம் புரிவது
ஒரு மனிதனுக்கு நல்ல வீடு கிடைப்பது அல்லாஹ்வின் பெரிய அருள்களில் ஒன்றாகும்.


நபிஅவர்களுக்கும் வீடுகள் இருந்தன

நபிகள் நாயகம்அவர்களே வீட்டில் வாழ்ந்தார்கள்.

மதீனாவில் பள்ளிவாசலுக்கு அருகில்:

·         அவர்களுக்கான வீடும்

·         ஒவ்வொரு மனைவிக்கும் தனித் தனி வீடுகளும்

இருந்தன.

வீடு இல்லாத ஏழை ஸஹாபாக்கள் திண்ணை தோழர்கள் எனப் பள்ளிவாசலில் தங்கியிருந்தார்கள். அது வீடு வைக்கக்கூடாது என்பதற்காக அல்ல; அவர்களுக்கு வசதி இல்லாததால்.

இதனால் ஒரு உண்மை தெளிவாகிறது:

வீடு வைத்திருப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல; மாறாக அது மனித வாழ்க்கையின் இயல்பான மற்றும் வரவேற்கத்தக்க ஒரு அருளாகும்.


இவ்வாறு வீடு குறித்து குர்ஆன் மற்றும் ஹதீஸில் பல வழிகாட்டுதல்கள் உள்ளன.
அவற்றைப் பற்றி மேலும் அறிய வேண்டிய பல சட்டங்களும் வழிமுறைகளும் உள்ளன; அவை பின்னர் தொடர்ச்சியாக விரிவாக பார்க்கலாம்