சகோதரர் மௌலவி பி .ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் நோன்பின் சட்டங்கள் என்னும் இந்நூல் www.onlinepj.com என்னும் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது
ஸஹர் உணவு
சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்டாயக் கடமையில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பெரிதும் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத்
(புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)