செவ்வாய், 20 ஜனவரி, 2015

2:102 வசனதுக்கான விளக்கம்

2:102 வசனதுக்கான விளக்கம் by Ahmed Jamshath Al Azhari

2:102 வசனதுக்கான நமது விளக்கம் (1)

(فَيَتَعَلَّمُون َمِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ)
எதை கொண்டு கணவன் மனைவியை பிரிக்க முடியுமோ அந்த ஒன்றை அவர்கள் இருவரிடமும் இருந்து கற்றுக்கொண்டார்கள்
இதில் "பிஹி" சூனியத்தை பார்த்து மீள்கிறது என்பது சூனிய நம்பிக்கையுடையோர் வாதம்.ஆனால் "பிஹி"சூனியத்தை பார்த்து மீள முடியாது என்பதே சரியான வாதம் ஆகும்."பிஹி" என்பதற்கு முன் மவ்சூளின் "மா" வந்துள்ளது.அந்த"மா" வை நோக்கி மீளுகின்ற ஒரு "மவ்சூல் பிஹி" அதற்கு அவசியம் ஆகிறது.எனவே மேலே கூறப்பட்ட "பிஹி" யை இரண்டு வசனத்துக்கு முன்னுள்ள சூனியத்துக்கு மீட்டவே முடியாது.
இனி அதற்கடுத்த வசனத்தில் வரும் "பிஹி"எதை பார்த்து மீள்கிறது என்றால் அதுவும் மூன்று வசனத்துக்கு முன்னுள்ள சூனியத்தை பார்த்து மீள்கிறது என்று கூறுகின்றனர்.
وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ
"அல்லாஹ்வின் அனுமதியைக்கொண்டே அன்று அவர்கள் அதன்மூலம் தீங்கும் செய்ய முடியாது"
இதில் வரும் "பிஹி" பல வசனங்களுக்கு முன்னுள்ள சூனியத்தை பார்த்து மீளவே முடியாது.அருகில் உள்ள பெயரையோ அல்லது அதற்கு ஒப்பான மவ்சூளையோ பார்த்தே மீள வேண்டும் முதலில்.அப்படி என்றால் அதற்கு அருகில் உள்ள அவர்கள் கற்றுக்கொண்ட ஒன்றான "ما" வை பார்த்தே அது மீள்கிறது.
கணவன் மனைவியை பிரிக்க கூடிய ஒன்றை கற்றுக்கொண்டார்கள் என்று வருவதில் சூனியம் என்று இல்லை.எதைக்கொண்டு பிரிக்க முடியுமோ அதை கற்றுகொண்டார்கள் என்றுதான் உள்ளது.மேலே கூறப்பட்ட சூனியம் மூலம்தான் கணவன் மனைவியை பிரிக்க முடியும் என்று இருந்தால் கணவன் மனைவியை பிரிக்கும் சூனியத்தை அவர்கள் கற்றுக்கொண்டார்கள் என்று வரவேண்டும்.அல்லது "ما" என்ற மவ்சூளுக்கு முன் வரும் யதஅள்ளமூன" என்ற வினைச்சொல்லின் அருகில் "ஹூ" என்ற பிரதிப்பெயர் மேலே கூறப்பட்ட சூனியத்தை பார்த்து மீள வேண்டும்.அப்படி மீண்டிருந்தால் "பயதஅள்ளமூனஹூ" என்று வந்திருக்க வேண்டும்.ஏனென்றால் மேலே இரண்டு வரிக்கு முன்பு கூறப்பட்ட சூனியத்தை பார்த்து மீள்வது இந்த முறையில்தான் இருக்க வேண்டும்.
ஆனால் 2: 102 ல் வசனமோ வந்திருக்கும் முறை வித்தியாசம்.மேலே இரண்டு வசனத்துக்கு முன் உள்ள சூனியத்தை பார்த்து மீள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத வகையில் அதன் இலக்கண வடிவமும் சொல் ஒழுங்குகளும் அமைந்துள்ளன.
கணிதப்பாடத்தை கற்றுக்கொடுத்தேன் என்று கூறிவிட்டு இரண்டு வரிக்கு பின்னால் ஏதோ ஒன்றை கற்றுக்கொடுத்தேன் என்று வரமுடியாது.
கணிதப்பாடத்தை கற்றுக்கொடுத்தேன் (அது கஷ்டம் என்பதால்) அவர்களுக்கு இலகுவான பிரயோசனம் உள்ள ஒன்றை கற்றுக்கொண்டார்கள் என்று கூறினால் சரியான வசன ஒழுங்காக இருக்கும்.
இனி சரியான மொழியாக்கம்.........
எதைக்கொண்டு கணவன் மனைவியை பிரிக்க முடியுமோ அந்த ஒன்றை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.(அவர்கள்)கற்றுக்கொண்ட அந்த ஒன்றின் மூலம் அல்லாஹ் நாடினாலே தவிர தீங்கு செய்ய முடியாது.
இவ்வாறு அர்த்தம் செய்தாலே அகீதாவுக்கு முரண் இல்லாமலும் சரியான கருத்தாக்கம் வரும் இலக்கண ரீதியாகவும் குர்ஆனின் போக்கிலும் சரியான அர்த்தம் வரும்.
இது அல்லாத இவர்கள் கொடுக்கும் சம்மந்தம் இல்லாத மொழியாக்கமும் விளக்கமும் இஸ்லாமிய அகீதாவுக்கும் முரண்படுவதோடு மட்டுமில்லாது குர்ஆனின் வசன நடைக்கும் அரபு இலக்கணத்துக்கும் முரணாகவே அமைகிறது.
2:102 வசனங்களுக்கான விளக்கம் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக