வியாழன், 1 ஜனவரி, 2015

பால்குடி சட்டம் குர்ஆனில் ஓதபட்டு வந்ததா ?

2876. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். 
Book : 17
இந்த முஸ்லீம் ஹதீஸ் சொல்வது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் இதற்கு விளக்கம் கொடுக்கிறேன் பேர்வழி என்று
அந்த ஹதீஸ் குர்ஆனில் ஓதபட்டு வந்தது என்று இருக்கிறதா எழுதபட்டு இருந்தது என்று இருக்கிறதா ? ஒரு ஹதீஸை குரான் என்று நினைத்து தவறாக ஓதி வந்துள்ளார்கள் என்று அர்ஹம் மௌலவி சொல்கிறார்
இதை ஹதீஸ் என்று ஏற்றுக்கொண்டால் இந்த ஹதீஸ் சொல்வது ரஸூலுல்லாஹ் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்தது
குரான் இன்றுள்ள நிலையில் எழுத்தில் தொகுக்கபட்டதோ உஸ்மான் (ரலி ) ஆட்சியில் ,,அவர்கள் கொல்லபட்ட பின்னும் உயிருடன் இருந்த அன்னை ஆயிஷா அவர்கள் தான் முன்பே ஒரு தவறான செய்தியை குரான் பெயரில் சொல்லி விட்டோம் அதை உடனே மக்களிடம் சொல்லி விட வேண்டும் என்ற எண்ணம் கூட வராதா ?
அன்னை ஆயிஷா (ரலி ) அவர்களை பொய்யராக சித்தரிக்கும் மௌலவி மார்களே சிந்தியுங்கள்
ஒரு தனிப்பட்ட மனிதரின் மீது தாங்கள் கொண்டுள்ள வெறுப்பு எங்கு போய் முட்டுகிறது என்பதை யோசியுங்கள்
குரான் மட்டுமே அல்லாஹ்வினால் பாதுகாக்க பட்ட வஹி 
ஹதீஸ்கள் மனிதர்களால் பாதுகாக்க பட்டவை அதில் தவறு இருக்கவே செய்யும் என்பதை மக்கள் மன்றத்தில் போட்டு உடையுங்கள்
2:42 وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.



பின்குறிப்பும் தொடரும் கேள்விகளும்:
இன்று என்னை சந்தித்த அர்ஹம் அவர்கள், 'ஒரு ஹதீஸை குர்ஆன் என்று நினைத்து தவறாக ஓதி வந்துள்ளார்கள் என்று நான் சொல்லவில்லை; அவர்கள் ஓதியது குர்ஆன்'தான்; ஆனால் பின்பு அது மாற்றப்பட்டுவிட்டது' என்று, தான் சொன்னதாக சொன்னார். அப்படியானால்,
► ஆரம்பத்தில் பத்து தடவைகளாக இருந்து, ஐந்து தடவைகளாக மாற்றப்பட்ட அந்த குர்ஆன் வசனம் எங்கே?
► இன்றுவரை அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள உஸ்மான் (ரலி) அவர்களின் குர்ஆன் பிரதியில் உட்பட, இப்போதுள்ள எந்த ஒரு குர்ஆனிலும் இதுபோன்ற ஒரு வசனம் கிடையாதே?
► மேலேயுள்ள ஹதீஸ்படி, நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை மக்களால் ஓதப்பட்டு வந்த மன்ஸூஹான‌ அந்த வசனத்தை, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னால் யார் மாற்ற முடியும்?
► மாற்றப்பட்ட அந்த சட்டத்தினை தெரியாத சிலர்தான் ஓதினார்கள் என்று சொல்வீர்களானால், நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை சில மக்கள் ஓதினார்கள் என்று அந்த ஹதீஸை அறிவிக்கும் ஆயிஷா(ரலி) அவர்களுக்கே இந்த விஷயம் தெரிந்திருக்கும்போது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதைக் கண்டித்து, ஓதாமல் தடுத்திருக்க மாட்டார்களா?
► அல்லது வஹீயுடன் தொடர்பில் இருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு, அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து, அதன்மூலம் அந்த மக்களைத் தடுத்து இருக்கமாட்டானா?
► அல்குர்ஆனை, தானே பாதுகாப்பதாக கூறும் அல்லாஹ்தஆலா, குர்ஆனில் இல்லாததை அல்லது மாற்றப்பட்டதை நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை குர்ஆனில் உள்ளதாக ஓதிக் கொண்டிருக்கும் வகையில் மக்களை விட்டுவிடுவானா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக