புதன், 30 ஆகஸ்ட், 2017

ஆட்டுப் புழுக்கைகளின் அவதூறு அம்பலம்




அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே...!

பிஜெ தொடர்பான அந்த ஆடியோவை இவ்வளவு நாட்களாக நான் கேட்கவில்லை; அதில் ஆர்வமும் இல்லை.

இன்று கேட்டுப் பார்த்தேன்.... சிரிப்புதான் வந்தது. ஒரு நிமிடம் கேட்டவுடனே தெரிந்துவிட்டது... அட கூமுட்டைகளா... இதை வைத்துக்கொண்டா இவ்ளோ பேசுகிறீர்கள்..? எந்த அளவுக்கு முட்டாள்தனமான எடிட்டிங்..' என்று. இதுபற்றி எனக்கு தெரிந்ததை சொல்லலாம் என்று நினைக்கிறேன்.


யாரிடமாவது ஃபோனில் பேசி ரெக்கார்ட் செய்து கேட்டுப் பாருங்கள். உங்கள் குரல் நேரிடையான குரலாகவும் எதிர்முனையில் பேசுபவர் குரல் போனில் பேசுவது போன்ற [Telephony voice] வகையிலும் பதிவாகி இருக்கும். ஆனால் இங்கே இரு குரலும் நேரடியான குரலாக இருக்கிறது!

அதாவது இந்த ஆணும் பெண்ணும் எதிர் எதிரே இருந்து பேசுவதுபோல் இருக்கிறது. சம்பாஷணைகளும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. நடந்திருப்பது என்னவென்றால்... அந்த பெண் யாரிடமோ ஃபோனில் பேசி இருக்கிறது. அதை அந்த பெண்ணே பதிவு செய்திருக்கிறது. அந்த ஆடியோ பதிவை அதில் உள்ள ஆண் குரலை நீக்கிவிட்டு பிஜெ குரலில் யாரோ ஒரு குரல் வித்தை (மிமிக்ரி)க்காரனின் உதவியுடன் பதிவுசெய்து, அந்தந்த இடத்தில் சேர்த்திருப்பது தெளிவாக விளங்குகிறது. இது வெளிப்படையாக தெரியும் உண்மை!

இன்னும் தொழில் நுட்பட்டதோடு சொல்ல வேண்டுமானால்.......

சொல்கிறேன் புரிகிறதா என்று பாருங்கள்.... புரியாவிட்டால் கேளுங்கள்.

குரல் வித்தைக்காரன் திறமையாகதான் பேசி இருக்கிறான். இருந்தாலும் சில இடங்களில் காட்டிக் கொடுத்துவிடுகிறது. (மொத்தமும் காமமாக இருப்பதால் அவை எந்த இடங்கள் என்று சொல்ல விரும்பவில்லை). ஆனால் எடிட் செய்தவன் சொதப்பிட்டான். (நம்ம ஜின் சதாத் மாதரி சுத்த "ஜீரோ".)

அந்த ஒலிப்பதிவில் ஏகப்பட்ட ஓட்டைகள்.... கண்களாலேயே பார்க்க முடியும்!

இணையத்தில் ஆடியோ எடிட்டிங் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஏதாவது ஒன்றை டவுன்லோட் செய்துக் கொள்ளுங்கள் [Like ....Audacity, Power Editor, Wave Editor. Any of one]

அந்த ஆடியோ ஃபைல்ளை அந்த எடிட்டரில் ஓபன் செய்யுங்கள். ஒலியை அலையாக [Wave] காண்பீர்கள். அந்த அலையை 100 அல்லது 200 மடங்கு பெரிது படுத்திக்கொள்ளுங்கள். இப்போது Play செய்து கேளுங்கள்.... கவனமாக கேளுங்கள். பெண் குரலும் ஆண்குரலும் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக நிற்பதை பார்க்க முடியும்.

ஆண் அல்லது பெண் தொடர்ச்சியாக பேசும்போது இடையில் நிறுத்திவிட்டு பேசினால் அந்த இடத்திலும் ஒலி அலை [Wavelength] இருக்கும். ஆனால் அதன் உயரம் குறைவாக இருக்குமே தவிர சுத்தமாக [Wave] இல்லாமல் இருக்காது. ஆனால் இங்கே இடைவெளியில் சுத்தமாக அலை [Wave] இல்லவே இல்லை. எத்தனை பெரிதுபடுத்தி பார்த்தாலும்... ம்ஹும்.. [ You can find Zoom option in any editor]

சிறு பிள்ளைகள் பேப்பர் துண்டுகளைக் கிழித்து எச்சில் தொட்டு ஒட்டி வைத்திருக்குமே அதுபோல ஆண் குரல் அங்கங்கே ஒட்டி வைத்திருப்பதை உங்கள் கண்களாலே காணமுடியும்....! அடப் பாவிகளா.... கொஞ்சம் நஞ்சம் சேர்த்து வைத்த உங்கள் நன்மைகளையும் இழந்துவிட்டீர்களே....!

Cool Edit என்று ஒரு மென்பொருள் இருக்கிருக்கிறது. அதன்மூலம் நிறைய வித்தைகள் செய்யலாம். அந்த கூமுட்டைகள் வெளியிட்ட ஆடியோ எடிட்டிங்கில் என்னென்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். அப்பொழுதுதான் இது பொய்யான ஆடியோ என்பது விளங்கும்.

Cool Edit போன்ற அதிக Option உள்ள எடிட்டரை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஒருவர் குரலை வேறு தொனிக்கு மாற்ற தெரிந்திருக்க வேண்டும். அதாவது Graphic Equalizer பயன்படுத்தி ஒருவர் குரலை வடிவமைக்கலாம். [எதிரொலிப்பதுபோல, பழைய ரேடியோவில் பேசுவதுபோல, அல்லது போனில் பேசுவதுபோல, கிளி பேசுவதுபோல மாற்றலாம், அனுபவம் வேண்டும்.]

அப்படி இந்த ஆண் குரலையும் போனில் பேசுவதுபோல அதில் மாற்றி இருக்கவேண்டும். பிறகு பழைய ஆண் குரலை நீக்கிவிட்டு புதிய ஆண் குரலை வெட்டி வெட்டி சேர்க்கும்போது அதே அலை நீளத்தில் [Wavelength] சேர்க்கவேண்டும். இரு குரலும் இணையுமிடத்தில் வரும் இடைவெளியில் சிறிய [Hisss noice] சேர்க்க வேண்டும். அதையும் கவனமாக செய்யவேண்டும். ஒரு மைக்ரோ செகண்ட் கூட விடக்கூடாது. இல்லாவிட்டால் இப்படித்தான் வாக்கி டாக்கியில் பேசுவதுபோல் ஒருவர் பேசி முடித்ததும் அடுத்தவர் பேச்சு வரும். [இங்கே ஒரே நேரத்தில் இருவரும் பேசுவதுபோல் வரவே இல்லை என்பதை கவனியுங்கள்.]

ஆனால் ஒன்று.. எவ்வளவுதான் நுணுக்கமாக செய்தாலும் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். காரணம் சூனியக்காரன் எப்படி வந்தாலும் வெற்றி பெறமாட்டான்..... [அல்ஹம்துலில்லாஹ்]

எனவே பெண் குரலோடு புதிய ஆண் குரலை வெட்டி ஒட்டி இருப்பதும் நன்றாக புரிகிறது. அந்த ஆடியோ ஒரு தெளிவான அவதூறு என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

போங்கடா டேய்...! போய் பாவமன்னிப்பு கேளுங்கடா...!

குறிப்பு:

முதல் படத்தில் இணைப்புகளை காட்டியிருக்கிறேன். இரண்டாம் படத்தில் ஒருவரே பேசும்போது இடையில் நிறுத்தி பேசினால் ஒலி இல்லாவிட்டாலும் சிறு Wave இருக்கும் என்பதைக் காட்டியிருக்கிறேன். மூன்றாம் படத்தில் 500 மடங்கு பெரிதுபடுத்தி பார்த்தாலும் ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் இடையில் Wave சுத்தமாக இல்லை என்று காட்டியிருக்கிறேன்.

- S. H. Thajudeen (Adirai)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக