ஞாயிறு, 11 நவம்பர், 2018

திருவாரூர் மாவட்ட பேரவை நேரலை

தவ்ஹீத் பேரவை ,திருவாரூர் மாவட்டம(NTF) நடத்தும் தவ்ஹீத் சகோதரர்களுக்கு அன்பான அழைப்பு (முதல் அமர்வு) தவ்ஹீத் பேரவை ,திருவாரூர் மாவட்டம(NTF) நடத்தும் தவ்ஹீத் சகோதரர்களுக்கு அன்பான அழைப்பு (இரண்டாம் அமர்வு)

வெள்ளி, 19 அக்டோபர், 2018

இந்த வார ஜும்ஆ பயான் மன்னை ஹாஜா 19/10/2018

இன்ஷா அல்லாஹ் இந்த வார ஜும்ஆ 

இடம்   : மஸ்ஜிதுல் ஹிதாயா 
( மேலதெரு, சானாவயல், அதிராம்பட்டினம் ) 

உரை : மன்னை ஹாஜா 

தலைப்பு : சத்தியத்தின் நிழலில்

குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி உண்டு 

ஞாயிறு, 10 ஜூன், 2018

வெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..

வெளி நாடுகளில் வசிப்பவர்கள் அங்கே பிறைப் பார்த்த அடிப்படையில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு, ரமலான் முடிவதற்குள் தாயகம் திரும்பி வந்தால் நோன்பின் எண்ணிக்கை 31 ஆகிவிடுகிறது. இவர்கள் எவ்வாறு நோன்பு வைக்க வேண்டும்?

ஒருநாள் முன்னதாக பிறையைக் கண்டதால் ரமலான் நோன்பை ஆரம்பித்தவர்கள் ஒரு நோன்பு கூடுதலாக நோற்றுவிட்டு தாயகம் வரும்போது, அங்குள்ள நாள் கணக்கின்படி நோன்பை தொடர வேண்டும். அதாவது, தாயகத்துக்கு வந்துவிட்டால் ஏற்கனவே இருந்த பகுதியையோ, வெளி நாட்டையோ பின்பற்ற இயலாது.

ஏனெனில் குறிப்பிடப்பட்ட நேரம் மற்றும் நாட்களைக் கணக்கிட்டு நிறைவேற்றப்படும் அமல்களான தொழுகை, நோன்பு போன்ற காரியங்களை நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின்படியும், பிறைக் கண்ட நாளின் அடிப்படையிலும்தான் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டில் இருப்பவர் வேறொரு நாட்டின் நேரக் கணக்கைப் பின்பற்ற முடியாது. அதுபோன்று ஒரே நாட்டுக்குள் உள்ள தொலைதூர ஊர்களுக்கு மத்தியிலும் அதிக வித்தியாசமான நேரக் கணக்கு அமைந்திருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்படியானால், தங்கள் பகுதியில் முந்திய நாள் பிறைக் கண்டு ரமலானின் முதல் நோன்பை ஆரம்பித்தவர்கள், மறுநாள் ரமலானின் முதல் பிறையைக் கண்டு நோன்பை ஆரம்பித்த வேறொரு பகுதிக்கோ அல்லது நாட்டுக்கோ வந்து அங்கே தங்களின் நோன்பைத் தொடர்ந்த பிறகு, ரமலானின் இறுதியில் 30 நோன்பையும் அவர்கள் நிறைவேற்றிவிட்ட நிலையில் அந்தப் பகுதியில் பிறைக் காணாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


ஞாயிறு, 20 மே, 2018

"ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறுபவருக்கு...

"ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறுபவருக்கு எவ்வாறு மறுமொழி கூறவேண்டும்?

ஒருவர் நமக்கு ஏதேனும் ஒரு உதவி செய்தால் அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒரு சிறிய பிரார்த்தனையை இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது. ஒருவரை நாம் சந்திக்கும்போது முகமன் கூறுவதற்காக சொல்லக்கூடிய ஸலாம் என்பது எவ்வாறு ஒரு பிரார்த்தனையாக அமைகிறதோ அதேபோல, நமக்கு உதவி செய்தவருக்கு நாம் கூறும் வாசகமும் அவருக்கு ஒரு துஆவாக அமைந்துவிடுகிறது. அந்த பிரார்த்தனையின் மூலம் நாம் அவரின் உதவிக்கு நன்றி செலுத்தியவராகிவிடுகிறோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

حدثنا الحسين بن الحسن المروزي بمكة و إبراهيم بن سعد الجوهري قالا حدثنا الاحوص بن جواب عن سعير بن الخمس عن سليمان التيمي عن أبي عثمان النهدي عن أسمة بن زيد قال : قال رسول الله صلى الله عليه و سلم من صنع إليه معروف فقال لفاعله جزاك الله خيرا فقد أبلغ في الثناء

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கு (மற்றொருவரால்) நல்லுபகாரம் செய்யப்பட்டால் அவர் தனக்கு (நல்லுபகாரம்) செய்தவருக்கு "ஜஸாக்கல்லாஹு ஹைரா" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) என்று கூறினால், அவர் (உதவி செய்தவருக்கு) மிகச்சிறந்த நன்றியைச் செலுத்திவிட்டார்.

அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி)
நூல்: திர்மிதீ (2035)

 

உதவி செய்தவர்களுக்கு இவ்வாறு "ஜஸாக்கல்லாஹு ஹைரா" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) என்று நாம் கூறியவுடன் அதற்கு மறுமொழியாக,

- "பாரக்கல்லாஹு ஃபீக்கும்" (بارك الله فيكم)
- "வஇய்யாக" (وإياك)
- "வஜஸாக்கும்" (وجزاكم)
- "ஜமீஆ" (جميعا)
-  "வஜஸாக்குமுல்லாஹு பில்மிஸ்லி" (وجزاكم الله بالمثل)
- "அஹ்ஸனல்லாஹு இலைக்" (أحسن الله إليك)
- "ஜஸாக்கும் இய்யாஹு" (جزاكم اياه)

என்று பலவிதமான பதில்களைக் கூறும் வழக்கம் மக்களுக்கு மத்தியில் இன்று நடைமுறையில் காணப்படுகிறது. ஆனால் "ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறியவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு பதில் கூறியுள்ளார்களோ அதைத் தவிர வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி நாம் பதில் கூறுவது நிச்சயமான முறையில் "பித்அத்" ஆகும்.

"ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறியவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதற்கு சில நபிமொழிகள் ஆதாரங்களாக எடுத்து வைக்கப்படுகின்றன. அவற்றில் பல அறிவிப்புகள் பலஹீனமானவையாக உள்ளன. ஆனாலும் கீழுள்ள ஒரு அறிவிப்பு மட்டும் ஸஹீஹானதாக உள்ளது.