சனி, 28 நவம்பர், 2015

வருடா வருடம் ஜக்காத் கொடுக்க வேண்டுமா ?

வருடா வருடம் ஜக்காத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்று பலஹதீஸ்கள் இருக்கு அவைகள் ஒவ்வொன்றிலும் குறைகள் இருக்கிறது விமர்சனங்கள இருக்கிறது

இவர்கள் இவை எல்லாம் பலகீனம் என்று அவர்களின் புத்தகத்திலேயே ஐம்பதுக்கு மேற்பட்ட பலகீனமான ஹதீஸ்களை போட்டுள்ளார்கள் இந்த பலகீனமான ஹதீஸிற்கு இத்தனை ரிவாயத் இருக்குதுல

ஒரு பொருளுக்கு ஜக்காத கொடுத்து விட்டால் மீண்டும் கொடுக்க தேவை இல்லை என்று ஒரு பலகீனமான ஹதீசியாவது எடுத்து போட வேண்டியது தானே ஏன் பலகீனமானஹதீஸ் கூடவேண்டாம் ஒரு இட்டுக்கட்டபட்ட ஹதீசையாவது காட்டுங்கள்- அப்பாஸ் அலி

வருடாவருடம் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்று சொல்ல பட்டு இருக்கும் ஹதீஸ்கள் பலகீனமானவை என்பதை ஒப்புக்கொண்டு இந்த பேச்சை பேசினீர்களாஅல்லது என்ன பேசினோம் என்பதை அறியாமல் பேசினீர்களா ?

அவர்கள் காட்டிய ஹதீஸ்கள் பலகீனமானவை தான் அவையல்லாமல் சஹீஹான ஹதீஸ்களும் இருக்கின்றதே இந்த சஹீஹான ஹதீஸ்களுக்கு பதில் எங்கே என்று ஒரு ரிவாயத்தையாவது காட்டி இருக்கலாமே அப்பாஸ் சல்லி ந நா
================================================================================
9.103. (முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்திபரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

9.104. தனது அடியார்களிடமிருந்து மன்னிப்பை அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான் என்பதையும்தர்மங்களைப் பெற்றுக் கொள்கிறான் என்பதையும்அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்நிகரற்ற அன்புடையோன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?

1460. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அல்லது எவனைத் தவிரவேறு இறைவன் இல்லையோ...அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோமாடோஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிட பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனை(க் கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்" எனக் கூறினார்கள்.
அபூ தர்(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்து அவர்களுக்குப் பின் அபூ பக்ர்(ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாய் மாறினர். (அவர்களின் மீது போர் தொடுக்கப் போவதாக அபூ பக்ர் அறிவித்தார்கள்.) அப்போது உமர்(ரலி) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்இறைத்தூதர்(ஸல்) அவர்கள்அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொல்லும் வரை மக்களுடன் போர் புரியும் படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொல்லும்வரை மக்களுடன் போர் புரியும் படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிரதன்னுடைய செல்வத்திற்கும் உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரின் (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறினார்களே!எனக் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ருலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்iயும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் புரிந்தே தீருவேன். ஏனெனில்ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செலுத்திவந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் செலுத்த மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர் புரிவேன்என்றார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் வழங்க மறுத்தவர்களின் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்) படி அபூ பக்ர்(ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுவே சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்துகொண்டேன்என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில், (கயிறு என்பதற்க பதிலாக) 'ஒட்டகக் குட்டிஎன வந்துள்ளது. அதுவே சரியானதாகும்.14

மேலே உள்ள வசனத்தில் அல்லாஹ் ஜக்காத் கொடுத்தால் பரிசுத்தமானவர்கள் ஆவார்கள் என்று சொல்கிறான் ஆமாம் சொல்கிறான் கொடுத்த பொருளுக்கே மீண்டும் கொடுக்க எங்கே சொல்கிறான் ?

காலம் முழுதும் குளித்தால் தானே சுத்தம் ஆக முடியும் ஆமாம் காலம் முழுதும் ஜக்காத் கொடுக்க வேண்டாம் என்று யார் சொல்லியது அப்பாஸ் ந நா ??
இதில்  இன்னொரு விஷயம்  இருக்கிறது ஜகாத் கொடுக்க வேண்டிய நிசாப் எல்லையை கடந்தவர் ஜகாத் கொடுத்து அவருடைய பாவங்களில் இருந்து தப்பித்து விடுவார் கொடுக்க வேண்டிய நிசாப் எல்லையை தொடாத மற்றவர்களுக்கு எப்படி பாவங்களை கழுவி சுத்தமாவார் என்பதை விளக்கி இருக்கலாமே அப்பாஸ்

ஒருவர் ஜக்காத் கொடுப்பதால் அவர் செய்யும் மற்ற பாவங்களில் இருந்து தப்பித்து விடுவாரா அல்லது சேர்க்க படும் செல்வம் பொருளுக்கான ஜக்காத் கொடுக்காமல் இருக்கும் பாவங்களில் இருந்து தப்பித்து விடுவார் என்று அல்லாஹ் சொல்கிரானா  என்பதை சிந்திக்கவே மாட்டீர்களா ?

ஜக்காத்  கொடுக்காவிட்டால்  மறுமையில்  ஆடு கொழுத்து போய் முட்டும் உலகத்தில் பத்து கிலோ இருந்தால் மறுமையில் முப்பது கிலோ இருக்கும் (வஹி  எங்கே  இருந்து வந்துச்சோ )

ஜக்காத்  கொடுக்காவிட்டால் அவர்களுடன் போர் தொடுப்பேன் என்று அபூபக்கர் சித்திக் கூறினார்கள் என்ற இரு ஹதீஸ்களை கூறினார்

ஜக்காத் கொடுக்க வேண்டாம் என்று யார் சொன்னது ஏன் இந்த ஹதீஸை இங்கு  கூறினார் ஏனெனில் பொதுவாக ஜக்காத கொடுப்பதை பற்றி அல்லாஹ் வலியுறுத்தியதை இங்கு அவர் பேச வில்லை தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடு தவறு என்று தான் பேசினார் அப்படி இருக்க தவ்ஹீத் ஜமாஅத் ஜகாத் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தால் மட்டுமே இந்த ஹதீஸ் அவர் எடுத்து வைக்க மூகாந்திரம் இருக்கிறது

அதில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் அவர் தவ்ஹீத் ஜமாத்தில் இருக்கும் போதே இதை எல்லாம் ஆய்வு செய்து விட்டாராம் அப்போவே இந்த நிலைப்பாடு  தவறு என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்

ஆனால் அதைவிட முக்கியமான சூனிய விஷயத்தில் வெளியாகி விட்டாராம் ஆனால் வெளியாகும்போது சூனிய விஷயம் தான் நான் வெளியேறுவதற்கு காரணம் ஹதீஸை மறுக்கிறார்கள் மற்றபடி அவர்கள் கொள்கை தான் எனது கொள்கை என்று அறிக்கை விடுவாராம்

===============================================================================

1452. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் பற்றிக் கேட்டதற்குவர்கள், 'உமக்கு என்ன கேடு? (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலைமை மிகவும் கடுமையானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவாஅவற்றிக்கு ஸகாத் கொடுத்து வருகிறீரா?' எனக் கேட்டார்கள். அவர், 'ஆம் என்றதும் நபி(ஸல்) அவர்கள், 'கடல்களுக்குப்பால் சென்று வேலை செய்வீராக! நிச்சயமாக அல்லாஹ் உம்முடைய உழைப்பின் ஊதியத்தைக் குறைத்துவிடமாட்டான்" எனக் கூறினார்கள்.
Book : 24

இந்த  ஹதீஸில் ஒட்டகத்திற்கு ஜக்காத்தை கொடுத்து வருகின்றீர்களா என்று கேட்டார்கள் கொடுத்து  விட்டீர்களா  என்று கேட்க வில்லை அதனால் வருடா  வருடம் ஜக்காத்  கொடுக்க வேண்டும் என்று அவர வைக்கும் அடுத்த வாதம்

"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை" என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர்நூல்: தாரகுத்ணிபைஹகி.

ஹஜ்ரத் அஸ்மா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்நானும் எனது சிறிய தாயரும் நபி(ஸல்) அவர்களின் திருசமுகத்திற்கு சென்றோம். எங்கள் கையில் தங்க காப்புகளை அணிந்திருந்தோம்அதனை கண்ட அருமை நாயகம்(ஸல்) அவர்கள் 'இதற்கு ஜகாத்தை நிறை வேற்றினீர்களா?' என விசாரித்தார்கள் நாம் இல்லை என பதிலளித்தோம் உடனே நபி(ஸல்) அவர்கள் அல்லா உங்களுக்கு நெருப்பிலான தங்க காப்புகளை அணிவிப்பான் என்று நீங்கள் அஞ்சவில்லையாஇதனுடைய ஜகாத்தை நிறைவேற்றுங்கள் என்று அருள் மொழிந்தார்கள்.(தர்கீப்)

தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு வகை நகையை அணிந்திருந்தேன்,அல்லாவின் தூதர்(ஸல்) அவர்கள் ''இதுவும் புதையல் ஆகுமாஎனக் கேட்டேன்அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அதனுடைய ஜகாத் செலுத்தப்பட்டிருந்தால் அது புதையல் ஆகாதுஎன்று கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். .(அபுதாவுத்,தாரகுத்னி)

இப்னு ஹஸம்நானும் எனது சிறியதாயாரும் தங்கக்காப்புகள் அணிந்து கொண்டு நபிபெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.அப்போது இதற்கு ஸகாத் கொடுத்து விட்டீர்களா எனக்கேட்டார்கள். இல்லை என்றோம்.நரக நெருப்பை உங்கள் கரங்களில் அல்லாஹ் அணிவிப்பதைப்பற்றி உங்களுக்கு அச்சமாக இல்லையாஇதற்கான ஸகாத்தைச் செலுத்திவிடுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி)ஆதாரம்: அஹ்மத்

நான் வெள்ளி மோதிரங்கள் அணிந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டனர். இதற்குரிய ஜகாததைச்செலுத்திவிட்டாயாஏன்று கேட்டனர். இல்லையென்றேன்.அவ்வாறாயின் இதுவே உன்னை நரகிற்சேர்க்கப்போதுமானதாகும். என்று ஏந்தல் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி)ஆதாரம்: அபூதாவூதுதாரகுத்னீபைஹகீ

தங்கம் மற்றும் வெள்ளி உரிமையாளர்கள் அவற்றிலிருந்து அவற்றிற்குண்டான ஜகாதை நிறைவேற்றாத நிலையில் மறுமை நாள் வந்து விடும் பொழுது அவருக்காக அவை நெருப்பு பாளங்களாக ஆக்கப்பட்டு பின்னர் அவற்றை நரக நெருப்பில் பழுக்க காய்ச்சி அவற்றால அவரில் விலாபுறம்அவரின் நெற்றிஅவரின் முதுகு ஆகியவற்றின் சூடுப் போடப்படும் சூடு தணிந்து குளிர்ந்து விடும் போதல்லாம் ஐம்பாதியாரம் ஆண்டுகளாக இருக்கும் அந்த ஒரு நாளில் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழுங்கப்படும் வரை அவருக்கு அவை மீட்டப்படும்.அதன் பின்னர் அவருடைய வழியை சுவனத்தின் பாலோ அல்லது நரக்கத்தின் பாலோ காட்டபடும் என நபி(ஸல்) அவர்கள் அருளியதாக அபுஹீரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்லிம் ஹதிஸின் சுருக்கம்)

கியாமத் நாள் வரை ஜகாத் தராமல் இருக்கும் நிலையில் என்றால்... அது 'ஒரு முறை'தான்இல்லையேல்... 'போன வருஷம் நிறைவேற்றி இருந்தாலும் இந்த வருஷம் நிறைவேற்றாத நிலையில்என வந்திருக்கும்


அம்ரு இப்னு ஷுஅய்ப் (ரழி) அறிவிக்கிறார்கள். ஒரு பெண்மணி யமன் நாட்டிலிருந்து நபி அவர்களிடத்தில் வந்தார். அவருடன் அவரின் மகளும் இருந்தார். அவரின் மகளின் கையில் தங்கத்தினாலான இரு வளையல்கள் இருந்தன. அப்போது நபியவர்கள் அப்பெண்ணை நோக்கி நீர் இதற்குரிய ஸகாத்தைகொடுத்து விட்டீரா?’ என வினவினார்கள். அதற்கவர் இல்லை’ என பதிலளிக்கநபியவர்கள் அல்லாஹ் நெருப்பினாலான ஒரு காப்பை அணிவிப்பது உனக்கு சந்தோஷத்தை அளிக்கின்றதா?’ என வினவினார்கள். அதற்கவர் இரு காப்புக்களையும் கழற்றி நபியவர்களிடத்தில் கொடுத்து விட்டு இந்த இரண்டும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரியதாகும்’ எனக் கூறினார். (அபூதாவூத் 2:95)

போன வருஷம் கொடுத்திட்டாயா..... இந்த வருஷம் இன்னும் கொடுக்கலையா... எப்போ குடுக்க இருக்கிறாய்... போன்ற சம்பாஷனைகளே இடம்பெறவில்லை... என்பதை கவனிக்கவும்


ஆயிஷா  (ரலி )அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி(ஸல்) அவர்கள் வருகை தந்த சமயம் என்னுடைய கையில் வெள்ளி வளையல்கள் இருப்பதை கண்டார்கள் 
''இவை என்ன?'' என்பதை விசாரித்தார்கள் அதற்கு அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் தங்களுக்கு வேண்டி என்னை அலங்கரித்து கொள்வதற்க்காக நான் இவைகளை செய்வித்து அணிந்துள்ளேன் என்று பதிலளித்தார்கள்அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்குண்டான ஜக்காத்தை நிறைவேற்று(வதற்கு இப்போது தயாராக இருக்)கின்றாயாஎன்று கேட்டதற்கு நான் 'இல்லைஎன்றேன் உடனே நபி(ஸல்) அவர்கள் உனக்கு நரக நெருப்பிற்கு இதுவே போதுமானதாகும் என எச்சரித்தார்கள் (தர்கீப்,
அபூ தாவூத்தாரகுத்ணிஹாகிம்)
 1565 حدثنا محمد بن إدريس الرازي حدثنا عمرو بن الربيع بن طارق  - ص 96 - حدثنا يحيى بن أيوب عن عبيد الله بن أبي جعفر أن محمد بن عمرو بن عطاء أخبره عن عبد الله بن شداد بن الهاد أنه قال  دخلنا على عائشة زوج النبي صلى الله عليه وسلم فقالت دخل علي رسول الله صلى الله عليه وسلم فرأى في يدي فتخات من ورق فقال ما هذا يا عائشة فقلت صنعتهن أتزين لك يا رسول الله قال أتؤدين زكاتهن قلت لا أو ما شاء الله قال هو حسبك من النار. رواه ابو داود

அட   ஆமாம் 
أَتُعْطِين  என்ற வார்த்தை தான் இதுலும் வருது அப்பாஸ் அலி சொல்வது சரி தான் என்று ஏற்று கொள்ளலாம் என்று பார்த்தால் அங்கும் இடிக்குதே ஆய்வாளா
 
இந்த ஹதீஸில் இப்படி 'நிறைவேற்றுகின்றாயா?' ன்று வருவதை வைத்து 'வருஷா வருஷம் நிறைவேற்றுகின்றாயா?' என்று சிலர் புரிகின்றனர். அதற்கு முகாந்திரமே இல்லை. காரணம்.. ஆயிஷா ரலி அவர்கள் யாரோ ஒருவர் இல்லை. நபியவர்களின் மனைவி. நபி ஸல் அவர்கள்அன்றுதான் அந்த நகையை புதுசா பார்க்கிறார்கள் என்பதை ஹதீஸில் அறியலாம்.<<<


அப்பாஸ் அலியும் புதிதாக அணிந்த நகை என்றே கூறுகிறார் புதிதாக அணிந்த நகைக்கு ஜக்காத் கொடுத்து வருகின்றாயா என்று ரசூலுல்லாஹ் எப்படி கேட்டு இருப்பார்கள் என்று சிந்திக்க வேண்டாமா ?
أَتُعْطِين என்ற அந்த அரபி வார்த்தை வருங்காலத்தையும் குறிக்கும்,நிகழ் காலத்தையும் குறிக்கும்,
சில சமயங்களில் கடந்த காலத்தில் நடந்த விஷயத்தை குறிப்பிடும்போது நிகழ்காலத்தில் குறிப்பிடும் வார்த்தையை உபயோகப்படுத்துவோம். உ ம் : நபி (ஸல் ) சொன்னார்கள் என்பதைநபி (ஸல் ) சொல்கிறார்கள் என்று குறிப்பிடுவோம்.அந்த வழக்கம் அரபு மொழியிலும் உண்டு  என்பதை அறிந்தால் நீங்கள்  வைக்கும்  வாதம் தவிடுபொடி ஆகி விடுமே அப்பாஸ் அலி َ



ஆக ரசூலுல்லாஹ் கொடுத்து வருகிறாயா என்று கேட்க வில்லை கொடுத்தாயா(கொடுப்பாயா ) என்று தான் கேட்டு இருக்கிறார்கள் என்பதை புரியவும் 

அப்பாஸ் அலி குறிப்பிட்ட  மேலே சொன்ன ஹதீஸில்  ஒட்டகத்திற்கு ஜகாத்  கொடுத்து வருகின்றாயா  என்று  கேட்ட ரசூலுல்லாஹ் நகைகளுக்கு  ஏன் அவ்வாறு  கூற வில்லை என்பதை கொஞ்சம் சிந்திக்கவும்
ஜக்காத் கொடுக்கப்பட்டு விட்ட ஒட்டகம் இனவிருத்தி  செய்யும்  பால் கறக்கும் அந்த பாலின் மூலம் வருமானம் வரும் இனவிருத்தியின் மூலம் ஒட்டகங்கள் பெருகும் எனவே தொடர்ந்து அந்த பெருகிய ஒட்டகத்திற்கும் வருமானம் வரும் பாலுக்கு தொடர்ந்து ஜக்காத் கொடுத்து வர வேண்டும் என்பது விளங்க வில்லையா பண்டிதரே

கால்நடைகளுக்கான் ஜகாத் கொடுத்து வருகிறீர்களா என்ற ஹதீஸில் விளக்கப்பட இன்னொரு விஷயம் உண்டு அதை நான் சொல்வதை  விட அதிரை தாருத் தவ்ஹீதின் ஸ்தாபகர் ஜெமீல் காக்காவின்  கூற்றை உங்களுக்கு பதிலாக தருகிறேன் பார்த்து கொள்ளவும்

அடுத்த படியாக புஹாரி  1454 ஆவது ஹதீசுக்கு நான் பதில் சொல்வதை விட ஜெமீல் காக்காவே பதில் சொல்லி விட்டார் அதையும் இங்கு பதிகிறேன்

//
கால்நடைகள் ஒவ்வொரு தடவை குட்டி போடும்போதும் முன்னர் ஸகாத் செலுத்திவிட்டவற்றைச் சேர்த்துக் கணக்குப் பார்க்க வேண்டும். இதுவும் ஆண்டுக்கு ஒருமுறை எனக் கணக்கிடவியலாது.

கால்நடைகள், குட்டிகளை ஈன்றெடுக்கும்போது அவற்றின் கணக்கீட்டை(நிஸாபை)த் தாண்டிவிட்டால் ஸகாத் கடமையாகிவிடும் - மிஷ்காத் 1796.

ஒவ்வொரு முறையும் பழையவற்றைச் சேர்த்துக் கொள்ளத் தக்க ஸகாத், கால்நடைகளுக்கு மட்டுமே உரியது. கால்நடைகளுக்குத் தனிப் பட்டியல் உண்டு. //
குறிப்பு:
இங்கு "மிஷ்காத்" என்பது இமாம் தப்ரீஸீ (ரஹ்) தொகுத்து, இமாம் முஹம்மது நாஸிருத்தீன் அல்-அல்பானீ (ரஹ்) அடிக்குறிப்புகள் இட்ட தாருல் ஃபிக்ரின் வெளியீடான ஹதீஸுத் தொகுப்பைக் குறிக்கும்.
புகாரி 7338 ஹதீஸை கூறி உஸ்மான் ரலி அவர்கள் மிம்பரில் உரை நிகழ்த்தினார்கள் அதில் அடுத்த  வருடம் இதே நாள் ஜக்காத் வசூல் பண்ண வருவேன் என்றார்கள் இதிலேயே தெரிய வில்லையா வருடா வருடம் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்று ஒரு வாதம்
  படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.(அல்குரான் 6:141)

அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஜகாத்)தை வழங்கி விடுங்கள். (அல்குர்ஆன் 6:141)

அறுவடை நாளில் அதற்குறிய ஜக்காத்தை தந்து விடுங்கள்...//  இதில்... அறுத்த உடனா?? 6 மாதம் கழித்தா?? 1 வருடம் கழித்தா??
சம்பளம் வாங்கும் ஒருவர் வாங்கிய அன்றே அதாவது அறுவடை செய்த அன்றே ஜக்காத் கொடுக்க வேண்டுமா அல்லது ஒரு வருடம் கழித்தா ??

உஸ்மான் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் ஒரு வருடம் கழித்து வந்து ஜகாத் வாங்குவேன் என்று சொன்னால் ஒரு வருடம் கழித்து தான் ஜகாத் என்று புரிவீர்களா அல்லது அவர்கள் அதற்கு ஒரு காலத்தை ஏற்படுத்தி கொண்டு போய் வசூல் செய்ய அரசாங்கத்தில் ஒரு இலக்கு நிர்ணயித்தார்களா என்பதை கூட யோசிக்க மாட்டீர்களா ??

அல்லாஹ் அறுவடை செய்த அன்றே ஜகாத் வழங்க சொல்கிறானே இந்த அல்லாஹ்வின் வார்த்தையை என்ன செய்ய போகிறீர்கள் ???

ஜெமீல் காக்கா உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசை

எப்படி  காக்கா பொறுமையாக அந்த மேடையில் அமர்ந்து இருந்தீர்கள் ??

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

பாத்தில் (பொய், அசத்தியம்) உண்மையாவதற்கு அல்லாஹ் நாடுவானா?

”பாத்தில் (பொய், அசத்தியம்) உண்மையாவதற்கு அல்லாஹ் நாடுவானா?
சூனிக்கலையை ”பாத்தில்” (பொய், அசத்தியம். வீண்) என்று பல்வேறு வசனங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (117) فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ (118) فَغُلِبُوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ
117. "உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.
118. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.
119. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.
(அல்குர்ஆன் 7 : 117)
இவ்வசனத்தில் ”வீணாயின” என்று மொழிபெயர்பிற்கு மூலத்தில் ”பதல” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது ”பாத்தில்” என்பதற்குரிய வினைச் சொல்லாகும். ”பாத்த்தில்” என்றால் (பொய், அசத்தியம்) என்று பொருளாகும்.
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَى مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ (81) وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ
81. அவர்கள் (தங்கள் வித்தையைப்) போட்ட போது "நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்கச் செய்வதில்லை'' என்று மூஸா கூறினார்.
82. குற்றவாளிகள் வெறுத்த போதும் அல்லாஹ் தனது கட்டளைகளைக்கொண்டு உண்மையை நிலைநாட்டுவான்
(அல்குர்ஆன் 10 : 81. 82)
81 வது வசனத்தில் ”அல்லாஹ் அதை ஒழிப்பான்” என்பதற்குரிய அரபி மூலத்தில் ”இன்னல்லாஹ ஸயுப்புதிலுஹூ” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இந்த ”யுப்திலு” என்ற சொல்லும் ”பாத்தில்” (பொய், அசத்தியம், வீண்) என்பற்குரிய வருங்கால வினைச் சொல்லாகும்.
மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து சூனியம் என்பது ”பாத்தில்” என்பது தெளிவாகிறது.
ஒருவிசயம் ”பாத்தில்” (பொய், அசத்தியம்) என்றால் அது உண்மையாவதற்கு அல்லாஹ் கடுகளவு கூட நாடமாட்டான். அது உண்மையன்று நிரூபிப்பதற்குரிய கடுகளவு சான்றைக் கூட அல்லாஹ் வைக்கமாட்டான்.
அசத்தியவாதிகள் தவறான நம்பிக்கையால் அதை உண்மை என்று நம்பினால் கூட அவர்களால் போட்டிக்கு வந்து அதை உண்மை என்று நிரூபிக்க முடியாது.
சத்தியாவதிகளோடு போட்டியிட்டு அதை உண்மை என்று காட்ட முடியாது.
”பாத்தில்” ஆன விசயங்களை அல்லாஹ் அழிப்பான் என்றே திருமறையின் பல்வேறு வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.
وَيُرِيدُ اللَّهُ أَنْ يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ (7) لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ (8)
அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலைநாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான் . குற்றவாளிகள் வெறுத்த போதும் உண்மையை நிலைநாட்டி, பொய்யை அழித்திட அவன் நாடுகிறான்.
(அல்குர்ஆன் 8 : 7, 8)
மேற்கண்ட வசனத்தில் ”பொய்யை” (பாத்தில்) அல்லாஹ் அழித்திட நாடுகிறான் என்று கூறுகிறான்.
சூனியத்தின் மூலம் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்று ஒருவன் 2 : 102 வது வசனத்திற்கு பொருள் செய்தால் அவன் அல்லாஹ் பொய்யை உண்மையாக்கிட நாடுகிறான் என்றே நம்புகிறான். அவ்வாறு நம்புவது இவ்வசனத்த்திற்கு எதிரானதாகும்.
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
. "உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக!
(அல்குர்ஆன் 17 : 81)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் ”பொய்” (பாத்தில்) அழியக் கூடியது என்று கூறுகிறான்.
ஆனால் சூனியத்திற்கு அல்லாஹ் நாடுவான் என்ற ஒருவன் நம்பினால் அல்லாஹ் ”பாத்திலை” அழிக்கிவில்லை. மாறாக வாழவைக்கிறான் என்றே நம்புகிறான்.
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
(அல்குர்ஆன் 21 : 18)
وَيَمْحُ اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمَاتِهِ
அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால் உண்மையை நிலைக்கச் செய்கிறான்.
(அல்குர்ஆன் 42 : 24)
அல்லாஹ் ”பாத்தில்” பொய்யை அழிப்பதாக மேற்கண்ட 42 : 24 வது வசனத்தில் கூறுகிறான். சூனியம் என்பது பொய் ஆகும். எனவே அல்லாஹ் அதை அழிப்பான் என்றே ஒரு முஃமின் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
சூனியத்தின் மூலம் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்பது மேற்கண்ட இறைக்கட்டளைக்கு எதிரானதாகும்.
மேலும் ”பாத்தில் (வீண்) ஆன விசயங்களை நம்பிக்கை கொள்வது கூடாது என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான்.
وَالَّذِينَ آمَنُوا بِالْبَاطِلِ وَكَفَرُوا بِاللَّهِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ
வீணானதை நம்பி அல்லாஹ்வை மறுப்போரே நட்டமடைந்தவர்கள் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 29 : 52)
சூனியம் என்பது ”பாத்தில்” (வீணாணது) என்று அல்லாஹ் கூறிய பிறகு அதன் மூலம் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பிக்கை கொள்வது நம்மை மறுமையில் நட்டத்தில் தள்ளவிடும் என்பதை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும.
தனது கட்டளைகள் மூலம் இறைவன் உண்மையை மட்டுமே உறுதிப்படுத்துவான்.
சூனியம் என்பது ”பாத்தில்” (பொய், அசத்தியம், வீண்) என்பதற்குரிய சான்றுகளை நாம் முன்னர் கண்டோம்.
يُرِيدُ اللَّهُ أَنْ يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ
அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலைநாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 8 : 7)
وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ
குற்றவாளிகள் வெறுத்த போதும் அல்லாஹ் தனது கட்டளைகளைக்கொண்டு உண்மையை நிலைநாட்டுவான்.
(அல்குர்ஆன் 10 : 82)
இது மூஸா சூனியக்காரர்களை நோக்கி கூறிய வார்த்தையாகும்.
وَيَمْحُ اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمَاتِهِ
அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால் உண்மையை நிலைக்கச் செய்கிறான்
(அல்குர்ஆன் 42 : 24)
அல்லாஹ் உண்மை நிலைபெறத்தான் நாடுவானே தவிர பாத்தில் நிலைபெற நாடமாட்டான்.
பாத்திலை உண்மைப் படுத்த முடியாது என்பதின் பொருளில் போட்டியிட்டு உண்மைப் படுத்துவதே.


சகோ  அப்துல் நாசரின்  கட்டுரை


Abdulnaser Misc ஷைத்தான் அல்லாஹ்வைப் போன்று பாதிப்பு ஏற்படுத்த முடியுமா?

{நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

(அல்குர்ஆன் 7 : 27)
மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.து 
(அல்குர்ஆன் 114)
மேற்கண்ட வசனங்களில் ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தான் மறைந்து கொண்டு மனித மனங்களில் தீய எண்ணங்களைப் போடுவதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். 
ஷைத்தான் எவ்வித புறச்சாதனமும் இன்றி எங்கோ இருந்து கொண்டு மனித உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகின்றான் என்றும் அது போன்றுதான் சூனியத்தினால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்றும் சூனியத்தை உண்மை நம்பிக்கை கொண்டவர்கள் வாதிக்கின்றனர். 
ஆனால் இவர்களின் வாதம் மிகவும் தவறானதாகும். 
ஷைத்தானை நாம் கண்ணால் காணமுடியாது என்பது தானே தவிர அவனால் எங்கோ இருந்து கொண்டு புறச்சாதனம் இல்லாமல் நம்முடைய உள்ளத்தில் தீய எண்ணங்களைப் போட முடியாது. 

ஷைத்தான் நம்முடைய உள்ளத்தில் தீய எண்ணங்களைப் போடுவதற்கு புறச்சாதனத்தின் மூலம்தான் முடியும் என்பதை இந்த ஆக்கத்தின் இறுதியில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஷைத்தான் நமக்கருகில் வந்தால்தான் அவனால் நம்மில் தீய எண்ணங்களைப் போட முடியும். நம்மை விட்டும் வெகு தொலைவில் இருந்து கொண்டு அவனால் தீய எண்ணங்களைப் போட முடியாது. 
இதற்கு நபிமொழிகளில் ஏராளமான சான்றுகள் இருந்தாலும் விளங்கிக் கொள்வதற்காக ஒரு சில சான்றுகளை நாம் காண்போம்.


Abdulnaser Misc அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகை
க்கு இகாமத் சொல்லப் பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார் என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங் களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (608)
ஷைத்தானுக்கு எங்கோ இருந்து கொண்டு நம்முடைய உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போட முடியுமென்றால் வெருண்டோடும் ஷைத்தான் இகாமத் சொல்லி முடிக்கப்பட்டவுடன் நமக்கருகில் வந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்த வேண்டியதில்லை. 
இதிலிருந்தே ஷைத்தானால் எங்கோ இருந்து கொண்டு நமது உள்ளத்தில் தீய எண்ணங்களைப் போட முடியாது. அவன் நமக்கு மிக அருகில் வந்துதான் தீய எண்ணங்களைப் போட முடியும் என்பதை தெளிவாக நாம் விளங்கிக் கொள்ளலாம். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கின்றது. ஆகவே, நீ தூங்கிக் கொண்டேயிரு' என்று போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகின்றான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதி காலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் உளூ செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுது விட்டால் முடிச்சுகள் முழு வதுமாக அவிழ்ந்து விடுகின்றது. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மன நிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (3269)

Abdulnaser Misc ஷைத்தான் நமக்கருகில் வந்துதான் மூன்று முடிச்சுகளைப் போடுகின்றான். எங்கோ இருந்து கொண்டு அவன் முடிச்சிட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

Abdulnaser Misc ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்! என்றார்கள். என் அறை உசாம
ாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்! எனக் கூறினார்கள். அவ்விருவரும் சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்)-அல்லாஹ்வின் தூதரே! என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன் என்று தெளிவுபடுத்தினார்கள்.
நூல் : புகாரி (2038)

நம்முடைய உடலில் இரத்தம் ஓடும் இடங்களில் ஷைத்தான் ஓடுகிறான் என்றால் அவனால் எங்கோ இருந்து கொண்டு நம்முடைய உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போட முடியாது என்பதை மேற்கண்ட ஆதாரத்திலிருந்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

ஸஹாபாக்களைப் பின்பற்றலாமா?

ஸஹாபாக்களைப் பின்பற்றலாமா?

ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஏதும் இல்லை என்பதைத் தக்க சான்றுகளுடன் கண்டோம்.
இதற்கு மறுப்பு கூற முடியாதவர்கள், "நபிவழியில் ஆதாரம் இல்லாவிட்டாலும் சில நபித் தோழர்களின் கூற்றும் செயல் விளக்கமும் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றன'' என்று வாதிடுகின்றனர்.
முஸ்லிம்கள் வஹீயை (இறைச் செய்தியை) மட்டுமே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பதையும், வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த அபிப்ராயமாகக் கூறியதை, செய்ததைக் கூட மார்க்கமாகச் செய்ய வேண்யதில்லை என்பதையும் விளங்காத காரணத்தால் நபித் தோழர்களின் கூற்றை ஏற்க வேண்டும் என்று கூறி இஸ்லாத்தின் மூல ஆதாரத்தை மாற்றி அமைக்கின்றனர்.
வஹீ இல்லாமல் தேனை நபி (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதையும், வஹீ இல்லாமல் மகரந்தச் சேர்க்கையை மறுத்ததையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொல், செயலைக் கூட வஹீ என்றும் வஹீ இல்லாதது என்றும் பிரித்துக் காட்டிய பின்னரும், வஹீயைப் பெறாத நபித் தோழர்களின் கூற்றைப் பின்பற்ற வேண்டும் என்று சிலர் வாதிடுவது நமக்கு வியப்பாக இருக்கின்றது.
குர்ஆன் கூறுவது
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
(அல்குர்ஆன் 7:3)
என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 2:38)
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!
(அல்குர்ஆன் 6:106)
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். 
(அல்குர்ஆன்  24:51)
"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!'' என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
 (அல்குர்ஆன் 24:54)
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங் களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 3:31)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 8:46)
இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
(அல்குர்ஆன் 6:153)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண் பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.
 (அல்குர்ஆன் 4:59)
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
(அல்குர்ஆன் 33:36)
எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
 (அல்குர்ஆன் 5:3)
இந்த வசனங்கள் யாவும் இறைச் செய்தியை, குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இவ்வாறு நாம் கூறும் போது ஸஹாபாக்களை மதிக்காத, திட்டுகின்ற கூட்டம் என்று நமக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகின்றார்கள்.
நபித்தோழர்களின் சிறப்பு
 மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3673
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல்: புகாரி 2651
அல்லாஹ்வும் தன் திருமறையில் நபித்தோழர்களைப் புகழ்ந்து கூறுகின்றான்.
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன் 9:100)
இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.
(அல்குர்ஆன் 9:117)
உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள்.
(அல்குர்ஆன் 57:10)
இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுத்ததில்லை. நபித்தோழர்களின் சிறப்புகளைச் சீண்டிப் பார்க்கும் ஷியாக்களையும் அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவளிக்கும் இயக்கங்களையும் அடையாளம் காட்டி அவர்களது முகத்திரையைக் கிழிக்காமல் நாம் விட்டதில்லை.
ஆனால் அதே சமயம் இத்தனை சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.
இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை.
மு சில நபித் தோழர்களின் கருத்துக்களும் செயல்களும் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக இருந்துள்ளன.
மு பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.
மு குர்ஆன், ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.
என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே தான் குர்ஆனையும் நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.
குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. பல்வேறு விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்து கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மை நிலையாகும்.
தமத்துஃ ஹஜ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் இதைத் தடுத்துள்ளார்கள்.
நான் உஸ்மான் (ர-) உடனும், அலீ (ர-) உடனும் ஹஜ் செய்துள்ளேன்.  உஸ்மான் (ர-) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள்.  இதைக் கண்ட அலீ (ர-) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, "லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு, "நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்-ற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம்
நூல் : புகாரி 1563
ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ர-) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார்.  அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், "உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!'' என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ர-), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார்.  அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்'' என்றார்.  அப்போது இப்னு உமர் (ர-), "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்'' என்று விடையளித்தார்.
அறிவிப்பவர் : ஸா-ம்
நூல் : திர்மிதீ (753)
தமத்துஃ ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குக் கூட, நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய மிகப் பெரிய நபித் தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது. இது ஏன்?
குளிப்பு எப்போது கடமை?
நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?'' என்று கேட்டேன்.  அதற்கு "மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.  பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ர-)
நூல் : புகாரி 293
உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும்.  பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.
"பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-)
நூல்கள் : முஸ்-ம் 526, திர்மிதீ 102
இவ்வாறு மாற்றிய விஷயம் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள், இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமையில்லை என்று கூறியுள்ளார்கள்.
ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கு, அவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டு, தொழுகைக்கு உளூச் செய்வது போன்று செய்ய வேண்டும். இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)
நூல்: புகாரி 179, 292
 மாற்றப்பட்ட இந்தச் சட்டம் உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?
குளிப்புக்காக தயம்மம்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)யிடம், "அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். "தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), "நபி (ஸல்) அவர்கள், "தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது' என்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?'' என்று கேட்டார். அதற்கு, "(இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) பதில் கூறினார்.
"அம்மார் அறிவிப்பதை விட்டு விடுங்கள். "தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்' என்ற இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?'' என்று அபூமூஸா (ரலி) கேட்டார். அதற்கு, "இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள்'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தாம் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலேயே சொல்லி விட்டார்கள்.
அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா
நூல்: 346, 347
குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.
தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யுங்கள் என்ற தெளிவான அனுமதி குர்ஆனில் இருந்தும், அது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டும், சொந்த ஊகத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கின்றார்கள். இது எதைக் காட்டுகின்றது?
கொள்ளை நோய்
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், ஷாம் நாட்டிற்குப் போகலாமா? என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.
அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல நான் கேட்டேன்'' என்று கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி  5279
கொள்ளை நோய் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி நபித் தோழர்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பவர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனால்  உமர் (ரலி)க்கும், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோரில் பெரும்பாலானவர்களுக்கும் நீண்ட காலமாக தெரியாமல் இருந்துள்ளதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.
அனுமதி கோருதல்
உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். உமர் (ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனேஅபூமூஸா (ரலி) திரும்பி விட்டார். அலுவலை முடித்த உமர் (ரலி), "அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதியளியுங்கள்'' என்றார்கள். "அவர் திரும்பிச் சென்று விட்டார்'' என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி), அபூமூஸா (ரலி)யை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றீர் என்று கேட்ட போது), "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்'' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், "இதற்குரிய சான்றை என்னிடம் நீர் கொண்டு வாரும்'' என்று கூறினார்கள்.
உடனே அபூமூஸா (ரலி) அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், "நம்மில் இளையவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் சாட்சி சொல்ல மாட்டார்கள்'' என்று கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)யை உமர் (ரலி)யிடம் அபூமூஸா (ரலி) அழைத்துச் சென்றார். (அபூஸயீத் அல்குத்ரீ சாட்சி கூறியதும்) உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதா? நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கடைவீதிகளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது போலும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபைத் பின் உஸாமா, நூல்: புகாரி 2062, 6245
வியாபாரத்தில் கவனம் செலுத்தியதால் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி தமக்குத் தெரியாமல் ஆகி விட்டது என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் அனைத்தையும் முக்கியமான நபித் தோழர்கள் கூட அறியாமல் இருந்தனர் என்பதும், அதற்கான காரணமும் இங்கே விளக்கப்படுகிறது.
நபிகள் நாயகத்தின் மரணம்
(நபி-ஸல் அவர்கள் இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்து விட்டு) அபூபக்ர் (ரலி) வெளியே வந்தார். அப்போது உமர் (ரலி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், அவரை உட்காருமாறு கூறினார். உமர் (ரலி) உட்கார மறுத்ததும், மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே, அபூபக்ர் (ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே மக்கள் உமர் (ரலி)யிடமிருந்து அபூபக்ர் (ரலி)யிடம் திரும்பினர்.
அப்போது அபூபக்ர் (ரலி), "உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன். மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)'' என்று கூறினார்.
அல்லாஹ்வின் மீதாணையாக, அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதையவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1242,3670
நபி (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர். குர்ஆனில் உள்ள ஒரு விஷயம், நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்ததை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் சுட்டிக் காட்டியதால் நபித் தோழர்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர். இது போன்று சுட்டிக் காட்டப்படாத எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன.
முத்தலாக்
நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ர-) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ர-) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது.  உமர் (ர-) அவர்கள், "நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர்.  அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?)'' என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-)
நூல் : முஸ்-ம் 2689
முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர்.
இன்னும் சில...
மு தொழுகையில் ருகூவின் போது கைகளைத் தொடைகளுக்கு இடையில் வைக்க வேண்டும் என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்தது. பின்னர் இரு கைகளால் முட்டுக் கால்களைப் பிடிக்க வேண்டும் என்று மாற்றப்பட்டது. அனைத்து ஸஹாபாக்களுக்கும் தெரிந்த, அன்றாடக் கடமைகளில் ஒன்றான இந்தச் சட்டம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. தாமும் ருகூவில் கைகளை முட்டுக் கால்களுக்கு இடையில் வைத்ததோடு, அடுத்தவரையும் அவ்வாறு செய்யத் தூண்டுகின்றார்கள்.
(பார்க்க முஸ்லிம் 831)
மு ஒரு மாதம் 2 மாதம் என்று குறுகிய காலம் ஒப்பந்தம் செய்து திருமணம் முடிக்கும் வாடகை மனைவி முறை கைபர் போரின் போது தடுக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். ஆனால் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை இது தடுக்கப்படவில்லை என்று கூறிக் கொண்டிருந்தனர்.
(பார்க்க புகாரி 4518)
மு மைமூனா (ரலி) தம்மை நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தனர் என்ற செய்தியை மறுத்துள்ள போதும், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது தான் மணம் முடித்தார்கள் என்று மைமூனாவின் சகோதரி மகன் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.
(பார்க்க புகாரி 1837)
மு நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.
(பார்க்க புகாரி 1128, 1177)
மு இப்னு உமர் (ரலி) அவர்களும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று கூறும் செய்தி புகாரி 1175ல் உள்ளது.
மு குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.
மு நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.
இப்படி எண்ணற்ற சான்றுகள் ஹதீஸ் நூற்களில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தச் செய்திகள் எதைக் காட்டுகின்றன?
நபித்தோழர்களும் மனிதர்கள் தான், அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை இந்தச் செய்திகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, "நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டு, "முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்'' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.
அப்போது நான், "என் இறைவா, என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, "இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், "நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 4740, 6524
குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும், நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.
திருக்குர்ஆனும், நபிவழியும் அல்லாத வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்பதை நாம் இன்றைக்குச் சொல்லவில்லை. 20 வருடங்களுக்கு மேலாக இதைத் தான் நாம் கூறி வருகிறோம். ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதை நிலை நாட்டுவதற்காக இந்த நிலைபாட்டை நாம் எடுக்கவில்லை. 
ஆனால் குர்ஆன், ஹதீஸைத் தவிர வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்று கூறி வந்தவர்கள் கூட ஜகாத் விஷயத்தில் குர்ஆன், ஹதீஸில் தங்களுக்கு ஆதாரமில்லாததால் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற புதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்துள்ளனர்.
இறுதியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை ஒன்றை மட்டும் கூறி முடித்துக் கொள்கிறோம்.
மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன்.  அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள்.  1. அல்லாஹ்வின் வேதம்                  2.  அவனது தூதரின் வழிமுறை என்று நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர-)
நூல்: ஹாகிம் 318

திங்கள், 27 ஜூலை, 2015

குஸைமா சம்பவமும் – புரிந்து கொள்ளப்படாத அடிப்படைகளும்.

குஸைமா சம்பவமும் – புரிந்து கொள்ளப்படாத அடிப்படைகளும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்த்த்தில் அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார். உடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்றார்கள். நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்கவில்லை என்றார். இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன் என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார். அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று சாட்சி கூறுகிறேன் என்றார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குஸைமாவிடம் நீ எப்படி சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்கு சமமாக ஆக்கினார்கள்.

நூல்: அபூதாவூத் (3130), அஹ்மத் (20878)
நபியவர்களுக்காக கண்ணால் காணாத ஒன்றை கண்டதாக குஸைமா (ரலி) சாட்சி கூறினார் என்று வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது, குர்ஆனுக்கு எதிரானது. இதனை ஏற்றுக் கொள்வது கூடாது என்று நாம் மக்களுக்கு மத்தியில் எடுத்து வைத்தோம்.
இதற்கு பதில் சொல்லப் போகிறோம் என்று கிளம்பியவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளை அறியாமல் உளறல்களையே பதிலாக பதிவு செய்வதைப் பார்க்கிறோம்.
உண்மையில் நபியை நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நபி சொன்னார்களோ அதற்கு மாற்றமாக நாம் நம்பிக்கை கொண்டால் அதுவும் வழிகேடுதான்.
நாம் நபியை எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக போதித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதன்தான். யூகம் என்பது சரியாகவும் இருக்கும், தவறாகவும் இருக்கும். என்றாலும் அல்லாஹ் கூறினான் என்று நான் உங்களுக்குச் சொன்னால் அதில் நான் ஒரு போதும் பொய்யாகக் கூறவே மாட்டேன்.
இப்னு மாஜா (2461)
நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததைவைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம்அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள்.ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்கமாட்டேன்'' என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் (4711)
"நான்ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக்கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே'' என்றுசொன்னார்கள்.
(நூல்: முஸ்லிம் 4712)
நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடு கின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும் போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்;
(புகாரி 401)
”நபியவர்கள் வஹியாக கூறும் விசயத்தில் ஒரு போதும் பொய்யாகக் கூறவே மாட்டார்கள்.
”நபியவர்கள் வஹியாக கூறும் விசயத்தில் ஒரு போதும் பொய்யாகக் கூறவே மாட்டார்கள்.
அதே நேரத்தில் நபி யூகமாக கூறும் விசயத்தில் அவர்களை அறியாமல் தவறாகவும் கூறுவார்கள்” . மனிதன் என்ற அடிப்படையில் இறைத்தூதருக்கும் தவறுகள் ஏற்படும்.
இதுதான் மேற்கண்ட நபி மொழிகள் நபியைப் பற்றி நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நமக்கு போதிக்கும் அடிப்படை .
நபி யூகமாகச் சொன்னால் அது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.
யூகம் என்றால் என்ன?
சந்தேகத்திற்கிடமில்லாமல் உறுதியான சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்படாத அனைத்துமே யூகம்தான்.
சந்தேகத்திற்கிடமில்லாமல் உறுதியான சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்படாத அனைத்துமே யூகம்தான்.

குஸைமா சம்பவத்தில் ”நீ எனக்கு விற்று விட்டாய்” என்று இறைத்தூதர் கூறியிருந்தாலும் அது நபியின் யூகம்தான். ஏனெனில் அந்த வார்த்தை இறைச் செய்தியின் மூலம் நபி கூறிய வார்த்தைகள் அல்ல.
மேலும் அவ்வாறு நபி கூறியதை கண்ணால் கண்ட சாட்சிகளும் கிடையாது.
நம் உயிரினும் மேலான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மறதியின் காரணமாக தான் மறந்து செய்ததைக் கூட சரியாகச் செய்த்தாக எண்ணியுள்ளார்கள்.
ஒரு தடவை நான்கு ரக்அத் தொழுகையை இரண்டாக தொழுகை நடத்திவிடுகிறார்கள்.
அப்போது துல்யதைன் (ரலி) அவர்கள் எழுந்து
"தொழுகை(யின் ரக்அத் ஏதேனும்) குறைக்கப்பட்டுவிட்டதா, அல்லாஹ்வின் தூதரே! அல்லது தாங்கள்தாம் மறந்துவிட்டீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"இவற்றில் எதுவுமே நடக்கவில்லை''
என்று நபி கூறினார்கள்
(முஸ்லிம் 1001 ஹதீஸின் கருத்து)
மற்றொரு அறிவிப்பில் ”துல்யதைன்” அவர்கள் சுட்டிக்காட்டிய நேரத்தில்
”தொழுகை சுருக்கப்படவுமில்லை நான் மறக்கவுமில்லை”
என்ற நபி கூறியதாக வந்துள்ளது. (நஸாயீ 1213)
பிறகு மக்கள் ”நீங்கள் மறந்து விட்டீர்கள்” என்று கூறிய பிறகுதான் நபி ஏற்றுக் கொள்கிறார்கள்.
இங்கே நாம் சிந்திக்க வேண்டிய விசயம். உத்தம தூதர் (ஸல்) ஒரு போதும் பொய் கூற மாட்டார்கள். ஆனால் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுகின்ற மறதி மற்றும் கவனக் குறைவினால் அவர்களும் தவறாகச் செய்வார்கள். தவறாகச் செய்து விட்டு சரியாகத்தான் செய்தேன் என்றும் கூறுவார்கள்.
மறதியினால் ஒருவருக்கு இவ்வாறு ஏற்பட்டால் அவர் பொய்யரும் கிடையாது? அல்லாஹ்விடத்தில் குற்றம் பிடிக்கப்படவும் மாட்டார்?
நபியவர்கள் நான்கை இரண்டாக தொழவைத்துவிட்டு நான்குதான் வைத்தேன் என்றார்கள். பார்த்த சாட்சிகள் தவறைச் சுட்டிக்காட்டியதினால் நபி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்கள் உண்மையாளர் என்பதற்கு இது அற்புதச் சான்று
ஆனால் குஸைமா சம்பவத்தில் அந்தக் கிராமவாசியிடம் ”நீ எனக்கு விற்று விட்டாய்” என்று நபி கூறுகிறார். இது உண்மையில் நடந்தும் இருக்கலாம். அல்லது புரிந்து கொள்வதில் ஏற்பட்ட பிழையாகவும் இருக்கலாம்.
இதனைப் கண்களால் பார்த்த சாட்சி யாருமே கிடையாது.
இப்போது நபி கூறுவது உண்மைதான்? அவர்கள் மறதியினால் கூட பிழையாக கூறவே மாட்டார்கள் என்று யாராவது வாதிக்க இயலுமா?
அப்படி வாதிட்டால் அது குர்ஆன் , மற்றும் நபிவழியின் அடிப்படையில் சரியான நம்பிக்கையா? இணைவைப்பு நம்பிக்கையா?
குறிப்பிட்ட செய்தியில் ”நபியவர்களுக்கும் கிராமாவாசிக்கும் மத்தியில் நடந்த வார்த்தைப் பரிமாற்றங்களில் சுற்றியிருந்த நபித்தோழர்களும் ”நபி பொய் கூறமாட்டார்” என்று சொன்னார்களே தவிர ”கிராமவாசி நபிக்கு விற்று விட்டார்” என்று எந்த நபித்தோழருமே சாட்சி சொல்லவில்லை.
என்ன காரணம் ”காணாத ஒன்றைக் கண்டதாகக் கூறுவது பொய்சாட்சி. பொய்சாட்சி பாவங்களிளெல்லாம் மாபெரும் பாவம், நிரந்தர நரகத்திற்குரிய பாவம் என்பதை அனைத்து நபித்தோழர்களும் விளங்கியிருந்தார்கள். இதன் காரணமாகத்தான் ”நபி பொய் கூற மாட்டார் ” என்று கூறிய நபித்தோழர்கள் ”அதனை கண்ணால் கண்டதாக சாட்சி கூறவில்லை.
நபி (ஸல்) அவர்கள் மார்க்க விடயத்தில் அல்லாஹ்விடம் இருந்து பெற்றுக் கூறுவதினால் அதில் ஒரு போதும் பிழையே ஏற்படாது. ஆனால் உலக விடயத்தில் மனிதப் பலவீனங்கள் அவர்களிடமும் ஏற்படும். இதுதான் நபி போதித்த அடிப்படை
இந்த அடிப்படைக்கு மாற்றமாக உலக விடயத்திலும் நபியிடம் தவறே ஏற்படாது என்று வாதிப்பது நம்புவது நபி போதித்த அடிப்படைக்கு எதிரானதாகும்.
இந்த தவறான அடிப்படையைத்தான் குஸைமா தொடர்பான செய்தியை நியாயப்படுத்தும் அறைகுறைகள் பதிலாகக் கூறுகின்றனர்.
நபியவர்கள் கூறுவது உண்மைதான் என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பது மட்டுமே இவர்களின் பதிலாக உள்ளது.
ஆனால் நபியவர்கள் உண்மையை மட்டும் தான் கூறுவார்கள். ஒரு போதும் பொய்யே கூறமாட்டார்கள். என்றாலும் மனிதன் என்ற அடிப்படையில் நபியிடமும் பிழைகள் ஏற்படும். எனவே இந்தச் சம்பவத்தில் கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லாத காரணத்தினால் இறைவனைத் தவிர உண்மை நிலையை யாரும் அறியமுடியாது. எனவே உண்மையை முடிவு செய்யும் அதிகாரத்தை நாம் கையில் எடுப்பது கூடாது என்கிறோம்.
நபியவர்கள் குதிரையை தனதாக்கிக் கொள்வதற்காக குஸைமாவின் சாட்சியை இரண்டு சாட்சியாக ஆக்கவில்லை. மாறாக தான் உண்மையாளர் என்று நிரூபிப்பதற்காகவே அப்படிச் செய்தார்கள் என்றும் வாதிக்கின்றனர்.
கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளில் சாட்சி என்பதே ஒரு பொருள் யாருக்கு என்று தீர்மானிப்பதற்குத்தான்.
எது எப்படி என்றாலும் கண்ணால் காணாத ஒன்றை சாட்சியாகக் கூறலாமா?
கண்ணில் காணாத ஒன்றை கண்ணால் கண்டதாக சாட்சி கூறுவது அழித்தொழிக்கும் பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்) என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்) என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா? என்றேன் (
(புகாரி (5976)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட் டார்கள்' அல்லது அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது'. அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்) என்று கூறிவிட்டு, பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். பொய் பேசுவது' அல்லது பொய் சாட்சியம்' (மிகப் பெரும் பாவமாகும்) என்று சொன்னார்கள்
(புகாரி 5977)
அபூஉமாமா அல்ஹாரிஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்'' என்று கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!'' என்று பதிலளித்தார்கள்
முஸ்லிம் (5977)
பொய்சாட்சி மூலம் பிறர் பொருளை தனதாக்குவது மிகப் பெரும் பாவம் என்றுரைத்த இறைத்தூதர் அந்த பொய்சாட்சியை கூறியவரின் சாட்சியை இரண்டு சாட்சிகளுக்கு நிகராக ஆக்குவார்களா? இவ்வளவு பெரும் பாவத்தை ஒரு நபித்தோழர் செய்வாரா?
இறைத்தூதர் காட்டிய இறைச்செய்திக்கு மாற்றமாக இறைத்தூதர் நடந்தார் என்று நபிமீது இட்டுக்கட்டி இந்தச் செய்தியை நியாயப்படுத்தப்போகிறீர்களா?
அல்லது நபியையும், நபித்தோழரையும் இழிவு படுத்தும் இந்தச் செய்தி இட்டுக்கப்பட்டது என்றுரைத்து ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறீர்களா?
அல்லாஹ் போதுமானவன்.




Abdul naser misc