வெள்ளி, 11 செப்டம்பர், 2015

பாத்தில் (பொய், அசத்தியம்) உண்மையாவதற்கு அல்லாஹ் நாடுவானா?

”பாத்தில் (பொய், அசத்தியம்) உண்மையாவதற்கு அல்லாஹ் நாடுவானா?
சூனிக்கலையை ”பாத்தில்” (பொய், அசத்தியம். வீண்) என்று பல்வேறு வசனங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (117) فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ (118) فَغُلِبُوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ
117. "உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.
118. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.
119. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.
(அல்குர்ஆன் 7 : 117)
இவ்வசனத்தில் ”வீணாயின” என்று மொழிபெயர்பிற்கு மூலத்தில் ”பதல” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது ”பாத்தில்” என்பதற்குரிய வினைச் சொல்லாகும். ”பாத்த்தில்” என்றால் (பொய், அசத்தியம்) என்று பொருளாகும்.
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَى مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ (81) وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ
81. அவர்கள் (தங்கள் வித்தையைப்) போட்ட போது "நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்கச் செய்வதில்லை'' என்று மூஸா கூறினார்.
82. குற்றவாளிகள் வெறுத்த போதும் அல்லாஹ் தனது கட்டளைகளைக்கொண்டு உண்மையை நிலைநாட்டுவான்
(அல்குர்ஆன் 10 : 81. 82)
81 வது வசனத்தில் ”அல்லாஹ் அதை ஒழிப்பான்” என்பதற்குரிய அரபி மூலத்தில் ”இன்னல்லாஹ ஸயுப்புதிலுஹூ” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இந்த ”யுப்திலு” என்ற சொல்லும் ”பாத்தில்” (பொய், அசத்தியம், வீண்) என்பற்குரிய வருங்கால வினைச் சொல்லாகும்.
மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து சூனியம் என்பது ”பாத்தில்” என்பது தெளிவாகிறது.
ஒருவிசயம் ”பாத்தில்” (பொய், அசத்தியம்) என்றால் அது உண்மையாவதற்கு அல்லாஹ் கடுகளவு கூட நாடமாட்டான். அது உண்மையன்று நிரூபிப்பதற்குரிய கடுகளவு சான்றைக் கூட அல்லாஹ் வைக்கமாட்டான்.
அசத்தியவாதிகள் தவறான நம்பிக்கையால் அதை உண்மை என்று நம்பினால் கூட அவர்களால் போட்டிக்கு வந்து அதை உண்மை என்று நிரூபிக்க முடியாது.
சத்தியாவதிகளோடு போட்டியிட்டு அதை உண்மை என்று காட்ட முடியாது.
”பாத்தில்” ஆன விசயங்களை அல்லாஹ் அழிப்பான் என்றே திருமறையின் பல்வேறு வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.
وَيُرِيدُ اللَّهُ أَنْ يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ (7) لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ (8)
அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலைநாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான் . குற்றவாளிகள் வெறுத்த போதும் உண்மையை நிலைநாட்டி, பொய்யை அழித்திட அவன் நாடுகிறான்.
(அல்குர்ஆன் 8 : 7, 8)
மேற்கண்ட வசனத்தில் ”பொய்யை” (பாத்தில்) அல்லாஹ் அழித்திட நாடுகிறான் என்று கூறுகிறான்.
சூனியத்தின் மூலம் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்று ஒருவன் 2 : 102 வது வசனத்திற்கு பொருள் செய்தால் அவன் அல்லாஹ் பொய்யை உண்மையாக்கிட நாடுகிறான் என்றே நம்புகிறான். அவ்வாறு நம்புவது இவ்வசனத்த்திற்கு எதிரானதாகும்.
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
. "உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக!
(அல்குர்ஆன் 17 : 81)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் ”பொய்” (பாத்தில்) அழியக் கூடியது என்று கூறுகிறான்.
ஆனால் சூனியத்திற்கு அல்லாஹ் நாடுவான் என்ற ஒருவன் நம்பினால் அல்லாஹ் ”பாத்திலை” அழிக்கிவில்லை. மாறாக வாழவைக்கிறான் என்றே நம்புகிறான்.
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
(அல்குர்ஆன் 21 : 18)
وَيَمْحُ اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمَاتِهِ
அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால் உண்மையை நிலைக்கச் செய்கிறான்.
(அல்குர்ஆன் 42 : 24)
அல்லாஹ் ”பாத்தில்” பொய்யை அழிப்பதாக மேற்கண்ட 42 : 24 வது வசனத்தில் கூறுகிறான். சூனியம் என்பது பொய் ஆகும். எனவே அல்லாஹ் அதை அழிப்பான் என்றே ஒரு முஃமின் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
சூனியத்தின் மூலம் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்பது மேற்கண்ட இறைக்கட்டளைக்கு எதிரானதாகும்.
மேலும் ”பாத்தில் (வீண்) ஆன விசயங்களை நம்பிக்கை கொள்வது கூடாது என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான்.
وَالَّذِينَ آمَنُوا بِالْبَاطِلِ وَكَفَرُوا بِاللَّهِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ
வீணானதை நம்பி அல்லாஹ்வை மறுப்போரே நட்டமடைந்தவர்கள் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 29 : 52)
சூனியம் என்பது ”பாத்தில்” (வீணாணது) என்று அல்லாஹ் கூறிய பிறகு அதன் மூலம் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பிக்கை கொள்வது நம்மை மறுமையில் நட்டத்தில் தள்ளவிடும் என்பதை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும.
தனது கட்டளைகள் மூலம் இறைவன் உண்மையை மட்டுமே உறுதிப்படுத்துவான்.
சூனியம் என்பது ”பாத்தில்” (பொய், அசத்தியம், வீண்) என்பதற்குரிய சான்றுகளை நாம் முன்னர் கண்டோம்.
يُرِيدُ اللَّهُ أَنْ يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ
அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலைநாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 8 : 7)
وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ
குற்றவாளிகள் வெறுத்த போதும் அல்லாஹ் தனது கட்டளைகளைக்கொண்டு உண்மையை நிலைநாட்டுவான்.
(அல்குர்ஆன் 10 : 82)
இது மூஸா சூனியக்காரர்களை நோக்கி கூறிய வார்த்தையாகும்.
وَيَمْحُ اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمَاتِهِ
அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால் உண்மையை நிலைக்கச் செய்கிறான்
(அல்குர்ஆன் 42 : 24)
அல்லாஹ் உண்மை நிலைபெறத்தான் நாடுவானே தவிர பாத்தில் நிலைபெற நாடமாட்டான்.
பாத்திலை உண்மைப் படுத்த முடியாது என்பதின் பொருளில் போட்டியிட்டு உண்மைப் படுத்துவதே.


சகோ  அப்துல் நாசரின்  கட்டுரை


Abdulnaser Misc ஷைத்தான் அல்லாஹ்வைப் போன்று பாதிப்பு ஏற்படுத்த முடியுமா?

{நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

(அல்குர்ஆன் 7 : 27)
மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.து 
(அல்குர்ஆன் 114)
மேற்கண்ட வசனங்களில் ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தான் மறைந்து கொண்டு மனித மனங்களில் தீய எண்ணங்களைப் போடுவதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். 
ஷைத்தான் எவ்வித புறச்சாதனமும் இன்றி எங்கோ இருந்து கொண்டு மனித உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகின்றான் என்றும் அது போன்றுதான் சூனியத்தினால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்றும் சூனியத்தை உண்மை நம்பிக்கை கொண்டவர்கள் வாதிக்கின்றனர். 
ஆனால் இவர்களின் வாதம் மிகவும் தவறானதாகும். 
ஷைத்தானை நாம் கண்ணால் காணமுடியாது என்பது தானே தவிர அவனால் எங்கோ இருந்து கொண்டு புறச்சாதனம் இல்லாமல் நம்முடைய உள்ளத்தில் தீய எண்ணங்களைப் போட முடியாது. 

ஷைத்தான் நம்முடைய உள்ளத்தில் தீய எண்ணங்களைப் போடுவதற்கு புறச்சாதனத்தின் மூலம்தான் முடியும் என்பதை இந்த ஆக்கத்தின் இறுதியில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஷைத்தான் நமக்கருகில் வந்தால்தான் அவனால் நம்மில் தீய எண்ணங்களைப் போட முடியும். நம்மை விட்டும் வெகு தொலைவில் இருந்து கொண்டு அவனால் தீய எண்ணங்களைப் போட முடியாது. 
இதற்கு நபிமொழிகளில் ஏராளமான சான்றுகள் இருந்தாலும் விளங்கிக் கொள்வதற்காக ஒரு சில சான்றுகளை நாம் காண்போம்.


Abdulnaser Misc அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகை
க்கு இகாமத் சொல்லப் பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார் என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங் களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (608)
ஷைத்தானுக்கு எங்கோ இருந்து கொண்டு நம்முடைய உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போட முடியுமென்றால் வெருண்டோடும் ஷைத்தான் இகாமத் சொல்லி முடிக்கப்பட்டவுடன் நமக்கருகில் வந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்த வேண்டியதில்லை. 
இதிலிருந்தே ஷைத்தானால் எங்கோ இருந்து கொண்டு நமது உள்ளத்தில் தீய எண்ணங்களைப் போட முடியாது. அவன் நமக்கு மிக அருகில் வந்துதான் தீய எண்ணங்களைப் போட முடியும் என்பதை தெளிவாக நாம் விளங்கிக் கொள்ளலாம். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கின்றது. ஆகவே, நீ தூங்கிக் கொண்டேயிரு' என்று போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகின்றான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதி காலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் உளூ செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுது விட்டால் முடிச்சுகள் முழு வதுமாக அவிழ்ந்து விடுகின்றது. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மன நிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (3269)

Abdulnaser Misc ஷைத்தான் நமக்கருகில் வந்துதான் மூன்று முடிச்சுகளைப் போடுகின்றான். எங்கோ இருந்து கொண்டு அவன் முடிச்சிட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

Abdulnaser Misc ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்! என்றார்கள். என் அறை உசாம
ாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்! எனக் கூறினார்கள். அவ்விருவரும் சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்)-அல்லாஹ்வின் தூதரே! என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன் என்று தெளிவுபடுத்தினார்கள்.
நூல் : புகாரி (2038)

நம்முடைய உடலில் இரத்தம் ஓடும் இடங்களில் ஷைத்தான் ஓடுகிறான் என்றால் அவனால் எங்கோ இருந்து கொண்டு நம்முடைய உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போட முடியாது என்பதை மேற்கண்ட ஆதாரத்திலிருந்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.