வெள்ளி, 28 டிசம்பர், 2012

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலக ஜும்மா உரை 28.12.12(வீடியோ)

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலக ஜும்மா உரை 28.12.12

தலைப்பு :அடக்குமுறை
உரை :சகோதரர் யூசுஃப்

 

தலைமை ஜும்மா உரை 28.12.12 from Jahir on Vimeo.

வியாழன், 27 டிசம்பர், 2012

மலாக்கா கிளை பயான்

மலாக்கா கிளை பயான்

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் மலாக்கா கிளையில் 25.12.2012 அன்று காலை தாஜ் ரெஸ்டோரென்டில் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மலாக்கா கிளை செயலாளர் தம்ரின் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மண்டல பேச்சாளர் சகோ.யாசர் அரபாத் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பிறகு tntj பொது செயலாளர் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 

தொழுகை from Adiraitntj on Vimeo.

அழைப்பு பணி from Adiraitntj on Vimeo.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

நோன்பு நோற்க வேண்டிய நாட்கள்


நோன்பு நோற்க வேண்டிய நாட்கள்

இஸ்லாமிய மார்க்கத்தில் மாதம் என்பது 29 நாட்களாகவும் சில வேளை 30 நாட்களாகவும் அமையும். இதை அறியாத சிலர் மாதம் 29 நாட்களில் முடியும் போது ஒரு நோன்பு விடுபட்டு விட்டதாக நினைக்கின்றனர்.
நினைப்பது மட்டுமின்றி விடுபட்டதாகக் கருதி அந்த ஒரு நோன்பைக் களாச் செய்யும் வழக்கமும் சிலரிடம் உள்ளது. ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. 29 நாட்களில் மாதம் நிறைவடைந்தாலும் 30 நாட்களில் நிறைவடைந்தாலும் ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் வழங்குவான். முப்பது நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்தால் 30 நாட்கள் நோன்பு பிடியுங்கள் என்று கூறியிருப்பான். எனவே இந்த அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். நன்மை என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலைக்குப் போய்விடக் கூடாது.

திங்கள், 30 ஜூலை, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 9

அதிரை தவ்ஹீத் பள்ளியின் ரமளான் தொடர் உரை 9

சனி, 28 ஜூலை, 2012

ஸஹர் உணவு

சகோதரர் மௌலவி பி .ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் நோன்பின் சட்டங்கள் என்னும் இந்நூல் www.onlinepj.com என்னும் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

ஸஹர் உணவு


சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்டாயக் கடமையில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பெரிதும் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

வியாழன், 26 ஜூலை, 2012

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்


4. மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்

சகோதரர் மௌலவி பி .ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் நோன்பின் சட்டங்கள் என்னும் இந்நூல் www.onlinepj.com என்னும் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் நோன்பை விட்டு விடச் சலுகை பெற்றுள்ளனர். சலுகை மட்டுமின்றி மாதவிடாய் நேரத்தில் நோன்பைக் கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்றும், விடுபடும் நோன்பை வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்


நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்



சகோதரர் மௌலவி பி .ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் நோன்பின் சட்டங்கள் என்னும் இந்நூல் www.onlinepj.com என்னும் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது


நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?
வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1945

புதன், 25 ஜூலை, 2012

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை


நோன்பு
நோன்பு நோற்பது கட்டாயக் கடமை
சகோதரர் மௌலவி பி .ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் நோன்பின் சட்டங்கள் என்னும் இந்நூல் www.onlinepj.com என்னும் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 2:184

நோன்பின் சட்டங்கள்



நோன்பின் சட்டங்கள்
சகோதரர் மௌலவி பி .ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் நோன்பின் சட்டங்கள் என்னும் இந்நூல் www.onlinepj.com என்னும் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

 இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயம் இக்கடமையை நிறைவேற்றி வந்தாலும் பலர் நோன்பின் சட்டங்களை முழுமையாக அறியாதவர்களாக உள்ளதை நாம் காண்கிறோம். நோன்பை முறித்து விடக் கூடிய காரியங்களைச் செய்து விட்டு, நோன்பாளிகளாகத் தங்களைப் பற்றி நினைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு தொடர் உரை

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு தொடர்  உரை
மௌலவி P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் 



அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் உரை

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் உரை ( காணொளி )