|
இந்த பள்ளிவாசல் வீடாக மாறியது எப்போது? |
சென்ற வாரம் வேலூர் சைதாப்பேட்டை பள்ளிவாசலை விற்பதற்காக போர்டு மாட்டிய TNTJ திருட்டுத் தலைமையைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தோம். அதற்கு பதில் சொல்கிறோம் என்ற பெயரில் வேலூர் மாவட்ட நிர்வாகம் ஒரு உளறலை வெளியிட்டிருந்தது. அந்த உளறலுக்கு பதில் சொல்லவேண்டி இதனை எழுதுகிறோம்.
//வேலூர் பள்ளிவாசல் விவகாரம்
பாலியல் பேரவையின் பொய்களை பாரீர்//
தலைப்பிடும்போதே தடுமாற்றமா வேலூர் மாவட்ட நிர்வாகமே?
பொய் மூட்டைகளா! வேலூரில் விற்பனைக்கான அறிவிப்புப் பலகை மாட்டியிருப்பது பள்ளிவாசலா? வீடா? அதை முதலில் தெளிவாக சொல்லுங்கள் !
//மர்கஸை விற்று காசு பார்க்க விரும்புபவர்கள் பப்ளிக்காக விற்பனைக்கு என்று போர்டு மாட்டி செய்வார்களா?//
உண்மையில் பள்ளியை விற்கப் போவதாக பப்ளிக்காக விற்பனை போர்டு மாட்டினீர்களா? மர்கஸை விற்று காசு பார்க்க விரும்புவதால்தான் வீடு விற்பனைக்கு என்ற இந்த தில்லுமுல்லுத் தனமா?
உங்கள் 'மர்க்கஸ் விற்பனைக்கு' என்று போர்டு வைத்தீர்களா அல்லது 'வீடு விற்பனைக்கு' என்று போர்டு வைத்தீர்களா என்று எல்லோருக்கும் அப்பட்டமாக தெரிந்தும்கூட ஏன் இந்த பச்சைப் பொய்?
அத்துடன் பாலியல், பாலியல் என்று சொல்லி திசை திருப்பிவிட்டால் உங்கள் சமாத் திருட்டுத்தனமாக அபகரித்தவைப் பற்றி மக்கள் பாராமுகமாக இருந்துவிடுவார்கள் என்ற திட்டம்தானே உங்களைச் சார்ந்த தாத்தா சமாத்தின் (ததஜ) யுக்தி என்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்தீர்களோ வேலூர் 'தாத்தா ஜ' நிர்வாகமே ?
கள்ள மாடு சந்தை ஏறாது என்பார்கள். அதாவது, கள்ளன் திருடிய மாட்டை சந்தைக்கு கொண்டு வரமாட்டான். அதேபோலதான் இன்றைய ததஇஜ-வின் நிலையும் என்பதை அறிவுடையோர் உணர்ந்துவிட்டனர். ஆனால் ஆட்டு மந்தைகளுக்கு தலையை ஆட்டுவதைத் தவிர வேறென்ன தெரியும், பாவம்! அதனால்தான் பாலியல் என்ற ஒரு அவதூறான வார்த்தையை தன் தலைமை சொல்லிக் கொடுத்தபடி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்குதுங்க குருட்டு மந்தைங்க.
மக்கள் அள்ளிக் கொடுத்த பணங்களுக்கு கணக்கு காட்ட சொன்னால், கடிவாளம் போடப்பட்ட குதிரைக் குட்டிகளை தலைமைக்கு வரச்சொல்லி, மண்டையைக் கழுவி, பொய்க் கணக்கைக் காட்டி அனுப்பும் திருட்டு ததஇஜ, முறையான பதில் சொல்ல வழியின்றி தப்பித்துக் கொள்வதற்காக கையில் எடுக்கும் ஒரே ஆயுதம்தான் பாலியல் என்ற அவதூறு!
அதை நிரூபிக்க நாம் விட்ட சவாலை ஏற்று நேருக்கு நேர் வந்தால் அந்த ஆயுதம் வெறும் அட்டைக் கத்திதான் என்று உலகுக்கு தெரிந்துவிடும் என்பதால் இன்றுவரை புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருக்கும் திருட்டுத் தலைமையைத் தெளிவாக புரிந்துக் கொண்ட மக்கள் இனி ஒருகாலமும் நம்புவதாக இல்லை!
//தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள் மர்கஸில் நடைபெறத்துவங்கிய போது அருகாமையில் உள்ள எதிர்க் கொள்கையை சார்ந்த முஸ்லிம்கள் சிலர் மர்கஸை இழுத்து மூடும் வகையில் சில பிரச்சனைகளை உண்டு பண்ணினர்.//
அது என்ன எதிர்க் கொள்கையை சார்ந்த முஸ்லிம்கள்? 'சுன்னத் ஜமாஅத்தினர்' என்று துணிந்து சொல்ல வேண்டியதுதானே? எதிர்க் கொள்கையினரில் பலதரப்பும் இருக்கும்போது, சுன்னத் ஜமாஅத்தினர் என்று பெயர் சொல்லக்கூட இந்தளவு பயந்த தொடை நடுங்கிகளாக அல்லாஹ் உங்களை ஆக்கிவிட்டானே என்பதையாவது உணர்வீர்களா மந்தைகளே? அப்புறம் என்ன.. வாலிபால் விளையாட்டு இனி நீங்கள் விளையாடலாம்!
//விற்பனை செய்து மறு இடத்தில் வாங்கி கட்டுகின்றோம் என்ற உத்தரவாதத்தினால் தான் அரசு இயந்திரம் ஒத்துழைப்பு கொடுக்க முன் வந்தார்கள்.
அல்லாஹ்வின் அருளால் அதன் அடிப்படையில் தற்போது மர்கஸூக்கு போடப்பட்ட சீல் அகற்றப்பட்டு விற்பனைக்கு தயாராகி விட்டது.//
மர்கஸூக்கு போடப்பட்ட சீல் அகற்றப்பட்ட பிறகு 'மர்கஸ் விற்பனைக்கு' என்று குறிப்பிடாமல் 'வீடு விற்பனைக்கு' என்று குறிப்பிட்டிருப்பது ஏன்? பள்ளிவாசல் (மர்கஸ்) ஒரு வீடாக மாறியது எப்போது? மக்களிடம் வசூல் பண்ணும்போது மட்டும் அது பள்ளிவாசல், விற்று அதை கிரயமாக்கும்போது அது வீடாகிவிட்டதா? அது என்ன உங்கள் சமாத் தலைவர் வீடா? அல்லது மாநில கள்ளன்களின் வீடா?
சரி அதை விற்பனைக்கு தயாராக்குவதற்கு முன் அதற்கான அறிவிப்பை செய்து மக்களிடம் அனுமதியாவது வாங்கினீர்களா? அல்லது அந்த பள்ளிக்காக பெருந்தொகை கொடுத்த தனி ஒரு நபருக்காவது தகவல் கொடுத்தீர்களா ? உங்கள் கொள்ளைக்கார தலைமையின் ஆலோசனைப்படி அதை விற்றுவிட்டு அதையும் தலைமை வாயில் அள்ளிப் போட்டு ஏப்பம்விட வைப்பதற்குதானே இந்த ஏற்பாடு ?
//இதற்கு பிறகு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை. எனவே காலதாமதமின்றி மக்கள் தந்த நன்கொடையை பயனுள்ளதாக ஆக்கும் வகையில் அவ்விடத்தை விற்று விட்டு வேறொரு இடத்தை வாங்குவது என்ற முடிவை ஏற்று செயல்பாடுகள் துவங்கப்படட்டன.//
அந்த மர்கஸை விற்றுவிட்டு வேறொரு இடத்தை வாங்குவது என்று முடிவெடுத்திருப்பதாக நீங்கள் சொன்னாலும், உங்கள் திருட்டுத் தலைமை மீது நம்பிக்கை இழந்த மக்களும் அந்த இடத்தை வாங்கியதற்காக பொருளாதார பங்களிப்பு செய்துள்ளார்களா இல்லையா?
அதை விற்றுவிட்டால், ஊர் பணத்தை அள்ளி தன் வீட்டு உலையில் போட்டுக் கொள்ளும் "தாத்தா ஜ" வை இனியும் நம்பாத அந்த மக்களுக்கு அவர்கள் தந்த தொகையைத் திருப்பிக் கொடுக்க தயார் என்று சொல்லும் சூடு சொரணை உடையவர்களா நீங்கள்?
//பேரவையை துவங்கி ஓரிரு ஆண்டுகளைக்கூட நிறைவு செய்திடவில்லை. தனி நபர் வழிபாட்டை நோக்கியே அழைத்து செல்கின்றார். அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுத்து ஆட்டம் போடுகின்றார்.//
தனிநபர் வழிபாட்டை நோக்கி அழைத்து சென்றதற்கும் அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுத்ததற்கும் ஒன்றை ஆதாரமாக எடுத்துக்காட்டி நேரடி விவாதம் செய்ய உங்கள் தலைமைக்கு திராணி இருந்தால் அழைத்து வந்து நிரூபிக்கலாம்! அதை விட்டுவிட்டு முகநூலில் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி உங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள முயல வேண்டாம் வேலூர் மாவட்ட நிர்வாகமே !
//மக்கள் தந்த நன்கொடையில் அமையப்பெற்ற மர்கஸ் எவ்வித செயல்பாடுகளுமின்றி நீண்ட நெடுங்காலம் பூட்டப்பட்டிருப்பது சரியல்ல என்று அப்பகுதி கிளை மக்கள் கருதியதால்
ஒன்று மர்கஸை திறக்க உடனடி வழிவகை காண்பது அல்லது அவ்விடத்தை விற்று விட்டு அந்த தொகையில் வேறு இடத்தை வாங்கி அதில் செயல்பாடுகளை துவக்குவது.
இரண்டில் ஒன்றை விரைவாக செய்திட வேண்டும் அதுவே நன்கொடை தந்த மக்களின் நோக்கத்தை பூர்த்தி செய்வதாக அமையும் என்று கருதினர்//
//விற்பனை செய்து மறு இடத்தில் வாங்கி கட்டுகின்றோம் என்ற உத்தரவாதத்தினால் தான் அரசு இயந்திரம் ஒத்துழைப்பு கொடுக்க முன் வந்தார்கள்.
அல்லாஹ்வின் அருளால் அதன் அடிப்படையில் தற்போது மர்கஸூக்கு போடப்பட்ட சீல் அகற்றப்பட்டு விற்பனைக்கு தயாராகி விட்டது.//
//பாலியல் பேரவை தலைவர் சொல்வது போல முந்திய கால கட்டத்தில் விற்பனை செய்து கொள்ளலாம் என்று அரசு தரப்பில் அனுமதி தரப்படவில்லை.
அப்படி அரசு தரப்பில் சொல்லப்பட்டு இருந்தால் இப்போது வந்த முடிவை நோக்கியே வரும் நிலை ஏற்பட்டு இருக்கும்.//
2014 ஆம் ஆண்டு வாங்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு அரசால் சீல் வைக்கப்பட்ட பள்ளிவாசலை மீட்டெடுக்க ஐந்து வருடமாக போராடியப் பின், இனி போராடினால் பலன் கிடைக்காது என்பதால் பள்ளியை நாங்கள் விற்றுவிடுகிறோம் என்று சொல்லிவிட்டு அரசின் காலில் வீழ்ந்த ததஜ திருட்டுக் கும்பல், எங்களுக்கு பதில் கொடுக்கின்றேன் என்ற போர்வையில் உளறியவைகளில் சிலவற்றை மேலே குறிப்பிட்டுள்ளோம்.
நன்கொடை தந்த நல்ல மக்களின் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும், இதுபோல் முந்தைய காலகட்டத்தில் விற்றுக் கொள்கின்றீர்களா என்று அரசு கேட்கவில்லை, அப்படி கேட்டிருந்தால் அப்போதே விற்றிருப்போம் என்று வாயில் எச்சில் ஒழுக சொல்லி இருக்கின்றனர் இந்த வேலூர் நிர்வாகத்தினர் !
உண்மையில் அரசு தரப்பில் இதுபற்றிய பேச்சு வார்த்தை நடந்ததா இல்லையா?
அரசு தரப்பில் பேசப்பட்டது என்பதும் RI மற்றும் VAO முன்னிலையில் திமுகவின் கவுன்சிலர் முன்னா பாய் மூலம் முன்னாள் மாவட்டத் தலைவரிடம் பேசப்பட்டது என்னவெனில், இந்தப் பள்ளி இடத்தில் பிரச்சனை செய்யாமல் விட்டுக் கொடுத்துவிட்டால் அதனை நல்ல விலைக்கு விற்றுவிட ஏற்பாடு செய்கிறோம் என்று பேசப்பட்டது.
முன்னாள் மாவட்டத் தலைவராக நிஸாம் பாய் இருந்தபோது பொறுப்பில் இருந்த மாவட்ட நிர்வாகம் அதனை நிராகரித்து, "எங்கள் பள்ளி எங்களுக்கு பள்ளியாகவே வேண்டும்; இது ஒரு சாதாரண இடம் பற்றிய பிரச்சனை அல்ல, எங்கள் வாழ்வுரிமைப் பிரச்சனை; நாங்கள் எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது" என்று அரசின் வேண்டுகோளைத் தூக்கி எறிந்தனர் என்பதுவுமே உண்மை! பொய் சொல்வதற்கென்றே இன்று ஜமாஅத் நடத்தும் திருட்டுக் கூட்டத்திற்கு இது தெரியாதா? அல்லது மக்களுக்கு தெரியாது என்றும், தெரியக் கூடாது என்றும் நினைக்கிறார்களா?
அதாவது, பள்ளியில் தொழ அனுமதிக்க முடியாது என்பது அரசின் நிலை. எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்பது முன்னாள் ததஜவின் நிலை.
ஆனால் இப்போது, 'ஐயா சாமி..! பள்ளிவாசலைக் கொடுங்கள், அதில் நாங்கள் தொழுகை நடத்தாமல் விற்றுவிட்டு வேறு எங்காவது போய்க் கொள்கிறோம்' என்று அரசிடம் பிச்சை எடுத்துவிட்டு வந்த நீங்கள், பள்ளி இருந்த அந்த இடம் இப்படிப்பட்ட சூழலில் மாட்டிக்கொண்டு இருப்பதால் அதனை விற்கப் போகிறோம் என்ற தகவலை பணம் கொடுத்த மக்களுக்கு, குறைந்தபட்சம்.. ஆறு லட்சம் ரூபாய் கொடுத்த நபரிடமாவது தெரிவிக்க முயல வேண்டாமா?
இவை அனைத்தையும் விட்டுவிட்டு வீடு விற்பனைக்கு என்று போட்டு வைத்து விட்டால் எல்லாம் முடிந்துவிடுமா? நமது உரிமைப் பிரச்சனை என்ன ஆனது என்பதை சிந்திக்க மாட்டீர்களா?
//பார்த்தீர்களா? பள்ளிவாசல் இடத்தை விற்கப் போகிறார்கள். அந்த காசை தின்று தீர்க்க பார்க்கிறார்கள் என்கின்றார்.
முறையற்ற வருமானத்தால் தன் குடும்பத்தை வளப்படுத்தி கொண்டது போலவே,//
முறையற்ற வருமானத்தால் தன் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டதாக போகிற போக்கில் பெரியதொரு குற்றச்சாட்டை இவர்கள் சுமத்தி இருக்கிறார்கள். இவர்களில் ஹலாலான முறையில் பிறந்த யார் வேண்டுமானாலும் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க முன்வர வேண்டும். அப்படி நிரூபிக்க முடியாதவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! இப்படியான அவதூறுகளை அள்ளித் தெளிப்பவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களை கண்டிக்கும் கடமையை அலட்சியப்படுத்தியும் ஆதரவு கொடுத்தும் கடந்து செல்பவர்களும் அல்லாஹ்வுக்கு பயந்துக் கொள்ளுங்கள்!
//வேறொரு பகுதியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ் அமைந்து
விட்டால் தங்கள் பேரவையின் பாலியல் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று அஞ்சிகின்றார்களோ.?//
திருப்பூரில் M.S. சுலைமான் பேசும்போது அல்லாஹ்வின் அச்சமின்றி இதேபோன்ற வார்த்தையை சொல்லி ஆரம்பித்து வைத்த இந்த அவதூறின் விளைவால் இன்று மாவட்ட நிர்வாகத்தினரும் இந்த வார்த்தையைப் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.
சரி, நாங்கள் விபச்சாரம் செய்ய எப்போது உங்கள் குடும்பத்தினரை அனுப்பி வைத்தீர்கள்? எந்த தேதியில் யாரை, யாருடன் அனுப்பி வைத்தீர்கள்? என்ற விபரங்களையும் இத்துடன் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏனெனில் உங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்த உங்களுக்குதான் யார், யாருடன் விபச்சாரம் செய்தனர் என்ற விபரம் சரியாக தெரியும். அதனால் அந்த விபரத்தை சொல்லுங்கள் என்று நாங்கள் பொறுப்பை உங்களிடம் இவ்வாறு ஒப்படைக்கலாம். ஆனாலும் உங்கள் குடும்பத்து பெண்களின் மானத்தை நாங்கள் பெரிதாக எண்ணுவதால் இந்த கேள்வியை கேட்பதைத் தவிர்க்கிறோம்.
//ஓரிடத்திலுள்ள மர்கஸ் இடத்தை விற்று அந்த தொகையில் வேறொரு இடத்தில் மர்கஸ் பயன்பட இடம் வாங்கும் சூழல் உருவானால் அதன் காரண காரியத்தை கண்டறிந்து ஒப்புதல் வழங்குவது நிர்வாக வழி முறையில் ஒன்றாகும்.
ஒரு இடத்தில் பிரச்சனை ஏற்படும் போது அவ்விடத்தை விற்று விட்டு வேறொரு இடத்தில் மர்கஸ் வாங்கும் நிலை இன்றளவும் பல மாவட்டத்தில் நடை முறையில் உள்ளதாகும்.
குறிப்பாக பேரவையின் தலைவர் பொறுப்பு வகித்த காலத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் ஜமாஅத்திற்கென்று உள்ள ஓரிடத்தை குறிப்பிட்ட காரணத்திற்காக விற்று விட்டு அந்த தொகையில் வேறொரு இடம் வாங்கப்பட்டது. அந்த இடம் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
அதே கோவையில் சாரமேடு பகுதியிலும் இவ்வாறே மர்கஸ் இடத்தை விற்று விட்டு வேறொரு பகுதியில் இடம் வாங்கப்பட்டு இப்போது மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.//
கோவை குனியமுத்தூர் மற்றும் சாரமேடு பகுதியில் முன்பு இடத்தை விற்று இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆம், குனியமுத்தூரில் விற்றுவிட்டு வேறு இடத்தில் வாங்கியது உண்மை! ஆனால் அரசு நம்மை தொழ அனுமதிக்க முடியாது என்று தடுத்ததால் வேறு இடத்திற்கு போனோமா அல்லது இடம் அது சின்ன இடமாக இருந்ததாலும் வேறு இடம் பெரிய இடம் கிடைத்ததாலும் இடம் மாற்றினோமா? சொல்லுங்கள் பார்ப்போம்.
சாரமேடு பகுதியில் பள்ளி கட்டுவதற்கு வாங்கப்பட்ட இடத்தில் கிணறு இருந்ததால் அந்த இடத்தில் கட்ட முடியாது என்று இடத்தை மாற்றினோமா அல்லது அரசு நம்மை தொழ அனுமதிக்க முடியாது என்று தடுத்ததால் வேறு இடத்திற்கு போனோமா?
இந்த காரணமும் அந்த காரணமும் ஒன்றுபோல மக்கள் மத்தியில் சித்தரித்து, குறிப்பிட்ட காரணம் என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி கடந்து சென்றால் உங்களின் பொய் உண்மையாகிவிடுமா?
எத்தனை நாட்களுக்குதான் இப்படி மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?
//மர்கஸ் விற்பனையை விமர்சனம் செய்யும் இந்த பொய்யர்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே இன்னும் பல ஆண்டுகள் உருண்டோட வேண்டும் என்று விரும்புகின்றார்களா ?//
//பூட்டப்பட்ட நிலையிலேயே பல ஆண்டுகள் கழிவது மட்டும் பாபர் மசூதிக்கு ஒப்பானது இல்லையா?//
//ஒன்று தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸை பூட்டியே கிடக்க முயற்சிப்பது அல்லது தவ்ஹீத் ஜமாஅத் மீது பொய்களை பரப்பி வெறுப்பை தீர்த்துக் கொள்வது. இதை தாண்டி இந்த பேரவைக்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.//
தாத்தாசாவின் வேதம் ஓதும் சாத்தான்களே! பள்ளியைப் பூட்டுவதைப் பற்றி பேச உங்களுக்கு என்னங்கய்யா அருகதை இருக்கிறது?
இப்போது பள்ளியை விற்று மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்காதே என்று சொல்கிறோமா அல்லது பள்ளியைத் திறக்காதே என்று சொல்கிறோமா? எப்படியெல்லாம் திசைத் திருப்பப் பார்க்கிறீர்கள்?
கோயில்பட்டியிலும் துளசியா பட்டிணத்திலும் தொழுகை நடந்துக் கொண்டிருந்த பள்ளிகளைப் பூட்டிவைத்தது யார்? அதற்காக அந்த ஊர் மக்களை நீதிமன்றத்துக்கு அலைய வைத்தது யார்? கோவில்பட்டி பள்ளி பூட்டப்பட்ட நிலையிலேயே பல ஆண்டுகள் கழிவதற்கு நீங்கள்தான் முயற்சிக்கிறீர்கள்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுத்து, பூட்டப்பட்ட துளசியாப்பட்டிண பள்ளிவாசலை நீதிமன்றத்தின் மூலம் திறக்க வைத்து அல்லாஹ் ததஜவை சிறுமைப்படுத்திவிட்டான்! ஒவ்வொன்றிலும் சிறுமைப்படுத்திக் கொண்டே இருக்கிறான்!
உங்கள் திருட்டுத்தனங்கள் மூலம் உங்கள் மாஃபியாக் கும்பலை இன்னும் சிறுமைப்படுத்துவான் இன்ஷா அல்லாஹ்.