வருடா வருடம் ஜக்காத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்று பலஹதீஸ்கள் இருக்கு அவைகள் ஒவ்வொன்றிலும் குறைகள் இருக்கிறது விமர்சனங்கள இருக்கிறது
ஒரு பொருளுக்கு ஜக்காத கொடுத்து விட்டால் மீண்டும் கொடுக்க தேவை இல்லை என்று ஒரு பலகீனமான ஹதீசியாவது எடுத்து போட வேண்டியது தானே ஏன் பலகீனமானஹதீஸ் கூடவேண்டாம் ஒரு இட்டுக்கட்டபட்ட ஹதீசையாவது காட்டுங்கள்- அப்பாஸ் அலி
வருடாவருடம் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்று சொல்ல பட்டு இருக்கும் ஹதீஸ்கள் பலகீனமானவை என்பதை ஒப்புக்கொண்டு இந்த பேச்சை பேசினீர்களா? அல்லது என்ன பேசினோம் என்பதை அறியாமல் பேசினீர்களா ?
அவர்கள் காட்டிய ஹதீஸ்கள் பலகீனமானவை தான் அவையல்லாமல் சஹீஹான ஹதீஸ்களும் இருக்கின்றதே இந்த சஹீஹான ஹதீஸ்களுக்கு பதில் எங்கே என்று ஒரு ரிவாயத்தையாவது காட்டி இருக்கலாமே அப்பாஸ் சல்லி ந நா
============================== ============================== ====================
9.103. (முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.
9.104. தனது அடியார்களிடமிருந்து மன்னிப்பை அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களைப் பெற்றுக் கொள்கிறான் என்பதையும், அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
1460. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அல்லது எவனைத் தவிரவேறு இறைவன் இல்லையோ...அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிட பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனை(க் கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்" எனக் கூறினார்கள்.
அபூ தர்(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்து அவர்களுக்குப் பின் அபூ பக்ர்(ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாய் மாறினர். (அவர்களின் மீது போர் தொடுக்கப் போவதாக அபூ பக்ர் அறிவித்தார்கள்.) அப்போது உமர்(ரலி) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொல்லும் வரை மக்களுடன் போர் புரியும் படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொல்லும்வரை மக்களுடன் போர் புரியும் படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர, தன்னுடைய செல்வத்திற்கும் உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரின் (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறினார்களே!' எனக் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ருலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்iயும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் புரிந்தே தீருவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செலுத்திவந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் செலுத்த மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர் புரிவேன்' என்றார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் வழங்க மறுத்தவர்களின் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்) படி அபூ பக்ர்(ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுவே சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்துகொண்டேன்' என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில், (கயிறு என்பதற்க பதிலாக) 'ஒட்டகக் குட்டி' என வந்துள்ளது. அதுவே சரியானதாகும்.14
மேலே உள்ள வசனத்தில் அல்லாஹ் ஜக்காத் கொடுத்தால் பரிசுத்தமானவர்கள் ஆவார்கள் என்று சொல்கிறான் ஆமாம் சொல்கிறான் கொடுத்த பொருளுக்கே மீண்டும் கொடுக்க எங்கே சொல்கிறான் ?
காலம் முழுதும் குளித்தால் தானே சுத்தம் ஆக முடியும் ஆமாம் காலம் முழுதும் ஜக்காத் கொடுக்க வேண்டாம் என்று யார் சொல்லியது அப்பாஸ் ந நா ??
இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது ஜகாத் கொடுக்க வேண்டிய நிசாப் எல்லையை கடந்தவர் ஜகாத் கொடுத்து அவருடைய பாவங்களில் இருந்து தப்பித்து விடுவார் கொடுக்க வேண்டிய நிசாப் எல்லையை தொடாத மற்றவர்களுக்கு எப்படி பாவங்களை கழுவி சுத்தமாவார் என்பதை விளக்கி இருக்கலாமே அப்பாஸ்
ஒருவர் ஜக்காத் கொடுப்பதால் அவர் செய்யும் மற்ற பாவங்களில் இருந்து தப்பித்து விடுவாரா அல்லது சேர்க்க படும் செல்வம் பொருளுக்கான ஜக்காத் கொடுக்காமல் இருக்கும் பாவங்களில் இருந்து தப்பித்து விடுவார் என்று அல்லாஹ் சொல்கிரானா என்பதை சிந்திக்கவே மாட்டீர்களா ?
ஜக்காத் கொடுக்காவிட்டால் மறுமையில் ஆடு கொழுத்து போய் முட்டும் உலகத்தில் பத்து கிலோ இருந்தால் மறுமையில் முப்பது கிலோ இருக்கும் (வஹி எங்கே இருந்து வந்துச்சோ )
ஜக்காத் கொடுக்காவிட்டால் அவர்களுடன் போர் தொடுப்பேன் என்று அபூபக்கர் சித்திக் கூறினார்கள் என்ற இரு ஹதீஸ்களை கூறினார்
ஜக்காத் கொடுக்க வேண்டாம் என்று யார் சொன்னது ஏன் இந்த ஹதீஸை இங்கு கூறினார் ஏனெனில் பொதுவாக ஜக்காத கொடுப்பதை பற்றி அல்லாஹ் வலியுறுத்தியதை இங்கு அவர் பேச வில்லை தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடு தவறு என்று தான் பேசினார் அப்படி இருக்க தவ்ஹீத் ஜமாஅத் ஜகாத் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தால் மட்டுமே இந்த ஹதீஸ் அவர் எடுத்து வைக்க மூகாந்திரம் இருக்கிறது
அதில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் அவர் தவ்ஹீத் ஜமாத்தில் இருக்கும் போதே இதை எல்லாம் ஆய்வு செய்து விட்டாராம் அப்போவே இந்த நிலைப்பாடு தவறு என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்
ஆனால் அதைவிட முக்கியமான சூனிய விஷயத்தில் வெளியாகி விட்டாராம் ஆனால் வெளியாகும்போது சூனிய விஷயம் தான் நான் வெளியேறுவதற்கு காரணம் ஹதீஸை மறுக்கிறார்கள் மற்றபடி அவர்கள் கொள்கை தான் எனது கொள்கை என்று அறிக்கை விடுவாராம்
============================== ============================== ===================
1452. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் பற்றிக் கேட்டதற்குவர்கள், 'உமக்கு என்ன கேடு? (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலைமை மிகவும் கடுமையானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றிக்கு ஸகாத் கொடுத்து வருகிறீரா?' எனக் கேட்டார்கள். அவர், 'ஆம் என்றதும் நபி(ஸல்) அவர்கள், 'கடல்களுக்குப்பால் சென்று வேலை செய்வீராக! நிச்சயமாக அல்லாஹ் உம்முடைய உழைப்பின் ஊதியத்தைக் குறைத்துவிடமாட்டான்" எனக் கூறினார்கள்.
Book : 24
இந்த ஹதீஸில் ஒட்டகத்திற்கு ஜக்காத்தை கொடுத்து வருகின்றீர்களா என்று கேட்டார்கள் கொடுத்து விட்டீர்களா என்று கேட்க வில்லை அதனால் வருடா வருடம் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்று அவர வைக்கும் அடுத்த வாதம்
"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை" என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி.
ஹஜ்ரத் அஸ்மா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நானும் எனது சிறிய தாயரும் நபி(ஸல்) அவர்களின் திருசமுகத்திற்கு சென்றோம். எங்கள் கையில் தங்க காப்புகளை அணிந்திருந்தோம், அதனை கண்ட அருமை நாயகம்(ஸல்) அவர்கள் 'இதற்கு ஜகாத்தை நிறை வேற்றினீர்களா?' என விசாரித்தார்கள் நாம் இல்லை என பதிலளித்தோம் உடனே நபி(ஸல்) அவர்கள் அல்லா உங்களுக்கு நெருப்பிலான தங்க காப்புகளை அணிவிப்பான் என்று நீங்கள் அஞ்சவில்லையா? இதனுடைய ஜகாத்தை நிறைவேற்றுங்கள் என்று அருள் மொழிந்தார்கள்.(தர்கீப்)
தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு வகை நகையை அணிந்திருந்தேன்,அல்லாவின் தூதர்(ஸல்) அவர்கள் ''இதுவும் புதையல் ஆகுமா? எனக் கேட்டேன், அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அதனுடைய ஜகாத் செலுத்தப்பட்டிருந்தால் அது புதையல் ஆகாது' என்று கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். .(அபுதாவுத்,தாரகுத்னி)
இப்னு ஹஸம்நானும் எனது சிறியதாயாரும் தங்கக்காப்புகள் அணிந்து கொண்டு நபிபெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.அப்போது இதற்கு ஸகாத் கொடுத்து விட்டீர்களா ? எனக்கேட்டார்கள். இல்லை என்றோம்.நரக நெருப்பை உங்கள் கரங்களில் அல்லாஹ் அணிவிப்பதைப்பற்றி உங்களுக்கு அச்சமாக இல்லையா? இதற்கான ஸகாத்தைச் செலுத்திவிடுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அஹ்மத்
நான் வெள்ளி மோதிரங்கள் அணிந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டனர். இதற்குரிய ஜகாததைச்செலுத்திவிட்டாயா? ஏன்று கேட்டனர். இல்லையென்றேன்.அவ்வாறாயின் இதுவே உன்னை நரகிற்சேர்க்கப்போதுமானதாகும். என்று ஏந்தல் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அபூதாவூது, தாரகுத்னீ, பைஹகீ
தங்கம் மற்றும் வெள்ளி உரிமையாளர்கள் அவற்றிலிருந்து அவற்றிற்குண்டான ஜகாதை நிறைவேற்றாத நிலையில் மறுமை நாள் வந்து விடும் பொழுது அவருக்காக அவை நெருப்பு பாளங்களாக ஆக்கப்பட்டு பின்னர் அவற்றை நரக நெருப்பில் பழுக்க காய்ச்சி அவற்றால அவரில் விலாபுறம், அவரின் நெற்றி, அவரின் முதுகு ஆகியவற்றின் சூடுப் போடப்படும் சூடு தணிந்து குளிர்ந்து விடும் போதல்லாம் ஐம்பாதியாரம் ஆண்டுகளாக இருக்கும் அந்த ஒரு நாளில் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழுங்கப்படும் வரை அவருக்கு அவை மீட்டப்படும்.அதன் பின்னர் அவருடைய வழியை சுவனத்தின் பாலோ அல்லது நரக்கத்தின் பாலோ காட்டபடும் என நபி(ஸல்) அவர்கள் அருளியதாக அபுஹீரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்லிம் ஹதிஸின் சுருக்கம்)
கியாமத் நாள் வரை ஜகாத் தராமல் இருக்கும் நிலையில் என்றால்... அது 'ஒரு முறை'தான், இல்லையேல்... 'போன வருஷம் நிறைவேற்றி இருந்தாலும் இந்த வருஷம் நிறைவேற்றாத நிலையில்' என வந்திருக்கும்
அம்ரு இப்னு ஷுஅய்ப் (ரழி) அறிவிக்கிறார்கள். ‘ஒரு பெண்மணி யமன் நாட்டிலிருந்து நபி அவர்களிடத்தில் வந்தார். அவருடன் அவரின் மகளும் இருந்தார். அவரின் மகளின் கையில் தங்கத்தினாலான இரு வளையல்கள் இருந்தன. அப்போது நபியவர்கள் அப்பெண்ணை நோக்கி ‘நீர் இதற்குரிய ஸகாத்தைகொடுத்து விட்டீரா?’ என வினவினார்கள். அதற்கவர் ‘இல்லை’ என பதிலளிக்க, நபியவர்கள் ‘அல்லாஹ் நெருப்பினாலான ஒரு காப்பை அணிவிப்பது உனக்கு சந்தோஷத்தை அளிக்கின்றதா?’ என வினவினார்கள். அதற்கவர் இரு காப்புக்களையும் கழற்றி நபியவர்களிடத்தில் கொடுத்து விட்டு ‘இந்த இரண்டும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரியதாகும்’ எனக் கூறினார். (அபூதாவூத் 2:95)
போன வருஷம் கொடுத்திட்டாயா..... இந்த வருஷம் இன்னும் கொடுக்கலையா... எப்போ குடுக்க இருக்கிறாய்... போன்ற சம்பாஷனைகளே இடம்பெறவில்லை... என்பதை கவனிக்கவும்
ஆயிஷா (ரலி )அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி(ஸல்) அவர்கள் வருகை தந்த சமயம் என்னுடைய கையில் வெள்ளி வளையல்கள் இருப்பதை கண்டார்கள் ''இவை என்ன?'' என்பதை விசாரித்தார்கள் அதற்கு அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் தங்களுக்கு வேண்டி என்னை அலங்கரித்து கொள்வதற்க்காக நான் இவைகளை செய்வித்து அணிந்துள்ளேன் என்று பதிலளித்தார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்குண்டான ஜக்காத்தை நிறைவேற்று(வதற்கு இப்போது தயாராக இருக்)கின்றாயா? என்று கேட்டதற்கு நான் 'இல்லை' என்றேன் உடனே நபி(ஸல்) அவர்கள் உனக்கு நரக நெருப்பிற்கு இதுவே போதுமானதாகும் என எச்சரித்தார்கள் (தர்கீப்,
அபூ தாவூத், தாரகுத்ணி, ஹாகிம்)
1565 حدثنا محمد بن إدريس الرازي حدثنا عمرو بن الربيع بن طارق - ص 96 - حدثنا يحيى بن أيوب عن عبيد الله بن أبي جعفر أن محمد بن عمرو بن عطاء أخبره عن عبد الله بن شداد بن الهاد أنه قال دخلنا على عائشة زوج النبي صلى الله عليه وسلم فقالت دخل علي رسول الله صلى الله عليه وسلم فرأى في يدي فتخات من ورق فقال ما هذا يا عائشة فقلت صنعتهن أتزين لك يا رسول الله قال أتؤدين زكاتهن قلت لا أو ما شاء الله قال هو حسبك من النار. رواه ابو داود
அட ஆமாம் أَتُعْطِين என்ற வார்த்தை தான் இதுலும் வருது அப்பாஸ் அலி சொல்வது சரி தான் என்று ஏற்று கொள்ளலாம் என்று பார்த்தால் அங்கும் இடிக்குதே ஆய்வாளா
இந்த ஹதீஸில் இப்படி 'நிறைவேற்றுகின்றாயா?' எ ன்று வருவதை வைத்து 'வருஷா வருஷம் நிறைவேற்றுகின்றாயா?' என்று சிலர் புரிகின்றனர். அதற்கு முகாந்திரமே இல்லை. காரணம்.. ஆயிஷா ரலி அவர்கள் யாரோ ஒருவர் இல்லை. நபியவர்களின் மனைவி. நபி ஸல் அவர்கள், அன்றுதான் அந்த நகையை புதுசா பார்க்கிறார்கள் என்பதை ஹதீஸில் அறியலாம்.<<<
அப்பாஸ் அலியும் புதிதாக அணிந்த நகை என்றே கூறுகிறார் புதிதாக அணிந்த நகைக்கு ஜக்காத் கொடுத்து வருகின்றாயா என்று ரசூலுல்லாஹ் எப்படி கேட்டு இருப்பார்கள் என்று சிந்திக்க வேண்டாமா ?
أَتُعْطِين என்ற அந்த அரபி வார்த்தை வருங்காலத்தையும் குறிக்கும்,நிகழ் காலத்தையும் குறிக்கும்,
சில சமயங்களில் கடந்த காலத்தில் நடந்த விஷயத்தை குறிப்பிடும்போது நிகழ்காலத்தில் குறிப்பிடும் வார்த்தையை உபயோகப்படுத்துவோம். உ ம் : நபி (ஸல் ) சொன்னார்கள் என்பதை, நபி (ஸல் ) சொல்கிறார்கள் என்று குறிப்பிடுவோம்.அந்த வழக்கம் அரபு மொழியிலும் உண்டு என்பதை அறிந்தால் நீங்கள் வைக்கும் வாதம் தவிடுபொடி ஆகி விடுமே அப்பாஸ் அலி َ
ஆக ரசூலுல்லாஹ் கொடுத்து வருகிறாயா என்று கேட்க வில்லை கொடுத்தாயா(கொடுப்பாயா ) என்று தான் கேட்டு இருக்கிறார்கள் என்பதை புரியவும்
அப்பாஸ் அலி குறிப்பிட்ட மேலே சொன்ன ஹதீஸில் ஒட்டகத்திற்கு ஜகாத் கொடுத்து வருகின்றாயா என்று கேட்ட ரசூலுல்லாஹ் நகைகளுக்கு ஏன் அவ்வாறு கூற வில்லை என்பதை கொஞ்சம் சிந்திக்கவும்
ஜக்காத் கொடுக்கப்பட்டு விட்ட ஒட்டகம் இனவிருத்தி செய்யும் பால் கறக்கும் அந்த பாலின் மூலம் வருமானம் வரும் இனவிருத்தியின் மூலம் ஒட்டகங்கள் பெருகும் எனவே தொடர்ந்து அந்த பெருகிய ஒட்டகத்திற்கும் வருமானம் வரும் பாலுக்கு தொடர்ந்து ஜக்காத் கொடுத்து வர வேண்டும் என்பது விளங்க வில்லையா பண்டிதரே
கால்நடைகளுக்கான் ஜகாத் கொடுத்து வருகிறீர்களா என்ற ஹதீஸில் விளக்கப்பட இன்னொரு விஷயம் உண்டு அதை நான் சொல்வதை விட அதிரை தாருத் தவ்ஹீதின் ஸ்தாபகர் ஜெமீல் காக்காவின் கூற்றை உங்களுக்கு பதிலாக தருகிறேன் பார்த்து கொள்ளவும்
அடுத்த படியாக புஹாரி 1454 ஆவது ஹதீசுக்கு நான் பதில் சொல்வதை விட ஜெமீல் காக்காவே பதில் சொல்லி விட்டார் அதையும் இங்கு பதிகிறேன்
//கால்நடைகள் ஒவ்வொரு தடவை குட்டி போடும்போதும் முன்னர் ஸகாத் செலுத்திவிட்டவற்றைச் சேர்த்துக் கணக்குப் பார்க்க வேண்டும். இதுவும் ஆண்டுக்கு ஒருமுறை எனக் கணக்கிடவியலாது.
கால்நடைகளுக்கான் ஜகாத் கொடுத்து வருகிறீர்களா என்ற ஹதீஸில் விளக்கப்பட இன்னொரு விஷயம் உண்டு அதை நான் சொல்வதை விட அதிரை தாருத் தவ்ஹீதின் ஸ்தாபகர் ஜெமீல் காக்காவின் கூற்றை உங்களுக்கு பதிலாக தருகிறேன் பார்த்து கொள்ளவும்
அடுத்த படியாக புஹாரி 1454 ஆவது ஹதீசுக்கு நான் பதில் சொல்வதை விட ஜெமீல் காக்காவே பதில் சொல்லி விட்டார் அதையும் இங்கு பதிகிறேன்
//கால்நடைகள் ஒவ்வொரு தடவை குட்டி போடும்போதும் முன்னர் ஸகாத் செலுத்திவிட்டவற்றைச் சேர்த்துக் கணக்குப் பார்க்க வேண்டும். இதுவும் ஆண்டுக்கு ஒருமுறை எனக் கணக்கிடவியலாது.
கால்நடைகள், குட்டிகளை ஈன்றெடுக்கும்போது அவற்றின் கணக்கீட்டை(நிஸாபை)த் தாண்டிவிட்டால் ஸகாத் கடமையாகிவிடும் - மிஷ்காத் 1796.
ஒவ்வொரு முறையும் பழையவற்றைச் சேர்த்துக் கொள்ளத் தக்க ஸகாத், கால்நடைகளுக்கு மட்டுமே உரியது. கால்நடைகளுக்குத் தனிப் பட்டியல் உண்டு. //
குறிப்பு:
இங்கு "மிஷ்காத்" என்பது இமாம் தப்ரீஸீ (ரஹ்) தொகுத்து, இமாம் முஹம்மது நாஸிருத்தீன் அல்-அல்பானீ (ரஹ்) அடிக்குறிப்புகள் இட்ட தாருல் ஃபிக்ரின் வெளியீடான ஹதீஸுத் தொகுப்பைக் குறிக்கும்.
புகாரி 7338 ஹதீஸை கூறி உஸ்மான் ரலி அவர்கள் மிம்பரில் உரை நிகழ்த்தினார்கள் அதில் அடுத்த வருடம் இதே நாள் ஜக்காத் வசூல் பண்ண வருவேன் என்றார்கள் இதிலேயே தெரிய வில்லையா வருடா வருடம் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்று ஒரு வாதம்
படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.(அல்குரான் 6:141)
அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஜகாத்)தை வழங்கி விடுங்கள். (அல்குர்ஆன் 6:141)
அறுவடை நாளில் அதற்குறிய ஜக்காத்தை தந்து விடுங்கள்...// இதில்... அறுத்த உடனா?? 6 மாதம் கழித்தா?? 1 வருடம் கழித்தா??
சம்பளம் வாங்கும் ஒருவர் வாங்கிய அன்றே அதாவது அறுவடை செய்த அன்றே ஜக்காத் கொடுக்க வேண்டுமா அல்லது ஒரு வருடம் கழித்தா ??
உஸ்மான் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் ஒரு வருடம் கழித்து வந்து ஜகாத் வாங்குவேன் என்று சொன்னால் ஒரு வருடம் கழித்து தான் ஜகாத் என்று புரிவீர்களா அல்லது அவர்கள் அதற்கு ஒரு காலத்தை ஏற்படுத்தி கொண்டு போய் வசூல் செய்ய அரசாங்கத்தில் ஒரு இலக்கு நிர்ணயித்தார்களா என்பதை கூட யோசிக்க மாட்டீர்களா ??
அல்லாஹ் அறுவடை செய்த அன்றே ஜகாத் வழங்க சொல்கிறானே இந்த அல்லாஹ்வின் வார்த்தையை என்ன செய்ய போகிறீர்கள் ???
ஜெமீல் காக்கா உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசை
எப்படி காக்கா பொறுமையாக அந்த மேடையில் அமர்ந்து இருந்தீர்கள் ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக