சனி, 3 ஜனவரி, 2015

உள்ளங்கள் ஒத்துக்கொள்ளுமானால்

அஸ்ஸலாமு  அலைக்கும்

ஒரு ஹதீஸை அது ரசூலுல்லாஹ் சொல்லி இருப்பார்களா மாட்டார்களா என்று கேட்ட உடன் விளங்கும்  இதை சொல்லி இருப்பார்களா என்று சந்தேகம் வரும்  அது பற்றி ரசூலுல்லாஹ் சொல்லிய ஹதீஸ்




நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால், அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.
அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

வியாழன், 1 ஜனவரி, 2015

பால்குடி உறவுகள் மணந்தால்

பால்குடி உறவுகள் தெரியாமல் மணந்தால்


நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்ச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். (புஹாரி 88)



மஸ்ஸத்  என்ற அரபி வார்த்தைக்கு உறிஞ்சி குடித்தல் என்பது தான் அர்த்தம்  ஆனால்  மார்பில் வாய் வைத்து என்று சொல்ல முடியாது கறந்து டீ (தேநீர் ) போட்டு குடிக்கலாம் என்று கூறும்  அர்ஹம் மௌலவி  போன்றவர்களிடம்  கேட்கப்பட வேண்டிய கேள்வி

ஒரு கணவன் ,மனைவியை பிரிக்க நினைக்கும் ஒருவர்  உங்கள் இருவருக்கும் நான் டீ  போட்டு கொடுத்தேன் அதை நீங்கள் குடித்தீர்கள்  ஐந்து தடவைக்கு மேல் நான் உங்களுக்கு பால் டீ கொடுத்து விட்டேன் அதனால் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ கூடாது என்று சொன்னால்  மேலே உள்ள ஹதீஸின் படி இருவரும் விவாகரத்து செய்ய வேண்டுமா ?

அர்ஷின் நிழல் யாருக்கு ?


அஸ்ஸலாமு அலைக்கும்
நிழலே இல்லாத நாளில் தன் அர்ஷின் நிழலில் 7 பிரிவினருக்கு நிழல் அளிப்பான்
அந்த 7 பிரிவினர் அல்லாத வேறு யாருக்கும் நிழல் அளிப்பான் என்று ஹதீஸ் இருக்குதா?



ஸஹீஹ் முஸ்லிம் 1869. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர். 5. தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை(த் தவறுசெய்ய) அழைத்தபோதும் "நான் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்" என்று கூறியவர். 6. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து, அல்லது அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்" என்று இடம்பெற்றுள்ளது.



அபுல்யசர் (ரலி) அவர்கள் கூறியதாக‌, உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான். (முஸ்லிம் 5736)

நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி

அபூகதாதா(ரலி) விடம் ஒருவர் கடன்பட்டிருந்தார். கடனைக் கேட்டு அவரிடம் அவர்கள் செல்லும்போது, அவர் ஒளிந்து கொள்வார். 

ஒருநாள் (அவ்வாறு) வந்தபோது ஒரு சிறுவன் வெளியே வந்தான். அவனிடம் அவரைப் பற்றி விசாரித்தபோது "ஆம்; வீட்டில் 'ஹஸீரா' (இறைச்சியும் மாவும் கலந்த சூப்) சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்" என்று சொன்னான். உடனே அபூகதாதா (ரலி) "இன்னாரே! வெளியே வந்துவிடும். நீர் அங்குதான் இருக்கிறீர் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது" என்று சொன்னார்கள். அவர் வெளியே வந்ததும், "நீர் என்னை விட்டும் ஒளியக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். "என்னிடம் (ஒன்றும்) இல்லை. நான் கஷ்டப்படுகிறேன்" என்று சொன்னார். 

இதைக் கேட்ட அபூகதாதா(ரலி) அழுதார்கள். பிறகு "யார் கடன்பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மது இப்னு கஃஅப் அல்குரளி
நூல்: அஹ்மத் (21574, 22023)

குர்ஆனுக்கு முரண் - சகுனம்


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்““ 
அபசகுனம் என்பது (எதிலாவது இருக்கமுடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில் தான் (இருக்க முடியும்). 
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
புகாரி (5093)

இப்னு உமர்(ரலி) அறிவித்தார் 
நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் மக்கள் அப சகுனம் குறித்துப் பேசினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் அப சகுனம் எதிலேனும் இருக்குமானால், வீட்டிலும் பெண்ணிலும் குதிரையிலும் தான் இருக்கும்““ என்று கூறினார்கள். 
புகாரி (5094)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
(அப சகுனம் எனும்) அது எதிலாவது இருக்குமானால் குதிரையிலும் பெண்ணிலும் குடியிருப்பிலும் தான். 
என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
புகாரி (5095)







 இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுணம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுணம் என்பது பெண் கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு "இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது" (57 :22) என்ற வசனத்தை ஓதினார்கள். 

அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்)

நூல் : அஹ்மத் (24894)

சகுனம் பார்ப்பது இணைவைப்பதாகும். நமக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும் அதை இறைவன் தவக்குல் (எனும் உறுதியான நம்பிக்கை) மூலம் நீக்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 1663)

மற்றுமொரு ஹதீஸில், 

'தொற்று நோயோ, சகுனமோ கிடையாது' (திர்மிதி 1664)

நோன்பு வைத்தவர் ஐஸ் தண்ணி குடிக்கலாமா ?


நோன்பு வைத்தவர் ஐஸ் தண்ணி குடிக்கலாமா ?








அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நோன்பு நோற்றவராக இருக்கும் போது ஆலங்கட்டி மழை பொழிந்தது. அவர் அதிலிருந்து சாப்பிட ஆரம்பித்தார். நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் போது சாப்பிடுகிறீர்களே ? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ” நிச்சயமாக இது பரக்கத்தாகும்”என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (13971)



சஹாபாக்கள் என்ன சொன்னாலும் பின்பற்றவேண்டும் என்று சொல்லும் சலஃப் சாலிஹீன்களே  இந்த ஹதீஸை பின்பற்றுவீர்களா ??