வியாழன், 1 ஜனவரி, 2015

பால்குடி சட்டம் குர்ஆனில் ஓதபட்டு வந்ததா ?

2876. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். 
Book : 17
இந்த முஸ்லீம் ஹதீஸ் சொல்வது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் இதற்கு விளக்கம் கொடுக்கிறேன் பேர்வழி என்று
அந்த ஹதீஸ் குர்ஆனில் ஓதபட்டு வந்தது என்று இருக்கிறதா எழுதபட்டு இருந்தது என்று இருக்கிறதா ? ஒரு ஹதீஸை குரான் என்று நினைத்து தவறாக ஓதி வந்துள்ளார்கள் என்று அர்ஹம் மௌலவி சொல்கிறார்
இதை ஹதீஸ் என்று ஏற்றுக்கொண்டால் இந்த ஹதீஸ் சொல்வது ரஸூலுல்லாஹ் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்தது
குரான் இன்றுள்ள நிலையில் எழுத்தில் தொகுக்கபட்டதோ உஸ்மான் (ரலி ) ஆட்சியில் ,,அவர்கள் கொல்லபட்ட பின்னும் உயிருடன் இருந்த அன்னை ஆயிஷா அவர்கள் தான் முன்பே ஒரு தவறான செய்தியை குரான் பெயரில் சொல்லி விட்டோம் அதை உடனே மக்களிடம் சொல்லி விட வேண்டும் என்ற எண்ணம் கூட வராதா ?
அன்னை ஆயிஷா (ரலி ) அவர்களை பொய்யராக சித்தரிக்கும் மௌலவி மார்களே சிந்தியுங்கள்
ஒரு தனிப்பட்ட மனிதரின் மீது தாங்கள் கொண்டுள்ள வெறுப்பு எங்கு போய் முட்டுகிறது என்பதை யோசியுங்கள்
குரான் மட்டுமே அல்லாஹ்வினால் பாதுகாக்க பட்ட வஹி 
ஹதீஸ்கள் மனிதர்களால் பாதுகாக்க பட்டவை அதில் தவறு இருக்கவே செய்யும் என்பதை மக்கள் மன்றத்தில் போட்டு உடையுங்கள்
2:42 وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.



பின்குறிப்பும் தொடரும் கேள்விகளும்:
இன்று என்னை சந்தித்த அர்ஹம் அவர்கள், 'ஒரு ஹதீஸை குர்ஆன் என்று நினைத்து தவறாக ஓதி வந்துள்ளார்கள் என்று நான் சொல்லவில்லை; அவர்கள் ஓதியது குர்ஆன்'தான்; ஆனால் பின்பு அது மாற்றப்பட்டுவிட்டது' என்று, தான் சொன்னதாக சொன்னார். அப்படியானால்,
► ஆரம்பத்தில் பத்து தடவைகளாக இருந்து, ஐந்து தடவைகளாக மாற்றப்பட்ட அந்த குர்ஆன் வசனம் எங்கே?
► இன்றுவரை அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள உஸ்மான் (ரலி) அவர்களின் குர்ஆன் பிரதியில் உட்பட, இப்போதுள்ள எந்த ஒரு குர்ஆனிலும் இதுபோன்ற ஒரு வசனம் கிடையாதே?
► மேலேயுள்ள ஹதீஸ்படி, நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை மக்களால் ஓதப்பட்டு வந்த மன்ஸூஹான‌ அந்த வசனத்தை, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னால் யார் மாற்ற முடியும்?
► மாற்றப்பட்ட அந்த சட்டத்தினை தெரியாத சிலர்தான் ஓதினார்கள் என்று சொல்வீர்களானால், நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை சில மக்கள் ஓதினார்கள் என்று அந்த ஹதீஸை அறிவிக்கும் ஆயிஷா(ரலி) அவர்களுக்கே இந்த விஷயம் தெரிந்திருக்கும்போது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதைக் கண்டித்து, ஓதாமல் தடுத்திருக்க மாட்டார்களா?
► அல்லது வஹீயுடன் தொடர்பில் இருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு, அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து, அதன்மூலம் அந்த மக்களைத் தடுத்து இருக்கமாட்டானா?
► அல்குர்ஆனை, தானே பாதுகாப்பதாக கூறும் அல்லாஹ்தஆலா, குர்ஆனில் இல்லாததை அல்லது மாற்றப்பட்டதை நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை குர்ஆனில் உள்ளதாக ஓதிக் கொண்டிருக்கும் வகையில் மக்களை விட்டுவிடுவானா?

ஷேர் வாளர்களே எங்கே சென்றீர் ??

ஷேர்வாளர்களே எங்கே சென்றீர் ?
இன்று ஆயிவாளாராகி போன அப்பாஸ் அலி முகநூலில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். தான் ஏன் தவ்ஹீதை விட்டு வெளியேறினேன் என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் சகோ பிஜே அவருக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதம் தவ்ஹீத் ஜமாத்தினுடைய கொள்கை பிடிப்பை எப்படி பறைசாட்டுகின்றது என்பதை கூட விளங்காமல் ஏதோ அவரின் வாதத்திற்கு வலு சேர்க்கும் என்று நம்பி இதை இவ்வளவு நாளும் வெளியிட வேண்டாம் என்றுதான் எண்ணி இருந்தேன்.. வெளியிட வேண்டிய சூழ்நிலை வந்ததால் வெளியிடுகிறேன் என்று ஒரு பில்டப் வேறு !
தமிழில் எழுதப்பட்ட ஒரு கடிதம் சொல்லும் சேதி என்ன என்பதை கூட அறிந்துக் கொள்ளாத ஒருத்தனையா அரபி புலமையில் சிறந்த ஆய்வாளன் என்று நாங்கள் இவ்வளவு நாள் நம்பி இருந்தோம் ??
விரைவில் நடுத்தெருவில் எதிர்பார்க்கிறோம்.!
Abbas Ali Misc
1 hr ·
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …
அன்பான சகோதரர்களே…
எனக்கும் சகோதரர் பீஜே அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை என்ன? நான் ஏன் டிஎன்டிஜேவிலிருந்து வெளியேறினேன்? இதில் உண்மை நிலவரத்தை நான் தெளிவுபடுத்தியுள்ளேன்.
ஆனால் டிஎன்டிஜேவில் இன்னும் சில சகோதரர்கள் என் விசயத்தில் தவறான காரணங்களை கற்பித்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு முழுக் காரணம் சகோதரர் பீஜே அவர்கள் தான்.
எனவே இது தொடர்பாக என்னிடத்தில் உள்ள ஆதாரத்தை வெளியிடுவது தான் நல்லது என முடிவு செய்துள்ளேன். இதை வெளியிடக்ககூடாது என்று இது காலம் வரை மறைத்து வந்தேன். ஆனால் இப்போது வெளியிட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.
என் மீது பீஜே நடவடிக்கை எடுத்து எனக்கு அனுப்பிய மெயிலை பாருங்கள். நான் டிஎன்டிஜேவிலிருந்து வெளியேறியதற்கான உண்மைக் காரணத்தை அறிந்துகொள்வீர்கள். இதில் பீஜே அவர்கள் என்னைப் பற்றி தவறாக புரிந்துகொண்டு எழுதிய சில விசயங்களும் உள்ளது.
நான் டிஎன்டிஜேவில் இருந்த போது சிஹ்ர் சம்பந்தமாக அதிகமாக பேசினேன். அப்போது அது தான் சரி என்ற கொள்கையில் இருந்தேன். மறு ஆய்வு செய்யக்கூடிய நேரத்தில் நாம் முன்பு சொன்ன கருத்துக்கள் தவறு என்று தெரிந்தது. இந்த மாற்றம் வந்து ஒரு சில வாரங்களில் இதை நவம்பவம் 13 2014 அன்று நடந்த மசூராவில் நான் தெரிவித்த உடன் நான் முன்பு பேசிய பேச்சுக்கள் அனைத்தும் நடிப்பு என்று சகோதரர் பீஜே தவறாக எண்ணிவிட்டார்.
மேலும் நான் மசூராவில் பேசும் போது நமது ஆய்வில் தவறு இருந்தால் நமக்கு ஒரு கூலியும் சிஹ்ர் தொடர்பான ஹதீஸை நம்பக்கூடியவர்களுக்கு இருகூலியும் அல்லாஹ் தருவான். அவர்கள் நம்பியது தவறு என்றால் அவர்களுக்கு ஒரு கூலியும் நமக்கு இரு கூலியும் தருவான். எனவே இந்த விசயத்தில் யாரையும் முஷ்ரிக் என்று சொல்லக்கூடாது என்று கூறினேன்.
பீஜேவை அல்லாஹ் நரகத்தில் போடுவான் என்று நான் சொன்னதாக பீஜே அவர்கள் தவறாக புரிந்துவிட்டார்.நான் அவ்வாறு சொல்லவில்லை. 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
பி.ஜைனுல் ஆபிதீன்
To
syed ibrahim
CC
Asrafdeen deen kovai RAHIM kovai rahmathulla MI SULAIMAN TNTJHO and 17 more...
14 Nov 2013
அன்புள்ள சகோதரர் அப்பாஸ் அலி அவர்களுக்கு பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிக்
கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும்.
புன்படும்படி நீங்கள் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தும் நான் உங்கள்
மீது கொண்ட அக்கறையை நினைவுபடுத்தியும் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல்
கிடைத்தது.
நான் புன்படும்படி நீங்கள் பேசி இருந்தால் அது போல் நானும் தான்
பேசினேன். மற்றவர்களும் பேசத்தான் செய்தோம். காரசாரமான பேச்சுக்கள் வரும் போது இது தவிர்க்க முடியாதது என்பதால் யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதைவிடக் கடுமையான விமர்சனங்கள் நிர்வாகக்
குழுவில் நடந்துள்ளன. அதை நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை.
நீங்கள் என்னை எந்த முறையில் பேசி இருந்தாலும் கடுகளவும் அதை நான் கணக்கில் கொள்ள மாட்டேன்.
ஆனால் எனக்கு அதைவிட வேறொரு வருத்தமும் கோபமும் உள்ளது. உங்கள் மெயிலுக்குப் பின் அது மேலும் அதிகமானதே தவிர குறையவில்லை.
நான் புன்படும் வகையில் நீங்கள் பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கும் நீங்கள்
• மறுமையில் சிஹ்ர் கூட்டத்துக்கு இரு கூலியை அல்லது ஒரு கூலியை அல்லாஹ் கொடுப்பான் என்றும், நம்மை நரகத்தில் போட்டுவிட்டு சிஹ்ர் கூட்டத்துக்கு சொர்க்கத்தை அளித்தாலும் அளிக்கலாம் என்றும் நீங்கள் கூறியதும்
• எனக்கு உடன்பாடு இல்லாததால் சிஹ்ர் கும்பலுக்கு எதிரான
நிகழ்ச்சிகளுக்கு என்னைப் பயன்படுத்துவதை தவிர்க்கவே விரும்பினேன் ஆனால் முடியவில்லை என்று நீங்கள் சொன்னதும்
• உடன்பாடு இல்லாத சிஹ்ர் பற்றி எதிர்த்து நீங்கள் எழுதியதும்
பேசியதும் மற்றவர்களை விட அதிக அளவில் பேசியதும் எழுதியதும் நடிப்புத் தான் உள்ளத்தில் உள்ளதல்ல என்பதை தெள்ளத்தெளிவாக நீங்கள் போட்டு
உடைத்ததும்
• நமக்கு தவறு என்று பட்டாலும் மற்றவர்கள் பார்வையில் அதற்கு
ஆதாரம் உள்ளதால் அவர்களைக் குற்றம் பிடிக்கக் கூடாது என்ற புது உசூலைக் கண்டு பிடித்து தாவாக்களத்தின் அடித்தலத்தை அடித்து நொறுக்கும் வகையில்
நீங்கள் பேசியதும் ஆகியவை தான் என்னைப் புன்படுத்தின.
இத்தனை காலம் கொள்கையில் கூட நம்பிக்கையில்லாமல் உள்ளொன்று வைத்து வெளியே ஒன்று பேசிக்கொண்டு இருந்த ஒருவரை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியாமல்
இருந்தோம் என்று தான் நான் வருத்தம் அடைந்தேன்.
நீங்கள் மட்டுமின்றி நம் உலமாக்களில் பெரும்பாலானவர்கள் என்னிடம் இது குறித்து பேசிய போது என்னைப் புன்படுத்தும் விதமாக நீங்கள் பேசியது குறித்து எனக்குச் சமாதானம் சொன்னார்கள்.
அவர்களுக்கும் நீங்கள் சொன்ன புதுக் கொள்கை கடுகளவு கோபத்தை ஏற்படுத்தவில்லை.
எது பயங்கரமான குற்றமோ அது சாதாரணக் குற்றமாகக் கூட ஆலிம்களில் அதிகமானவர்களுக்குத் தெரியவில்லை.
கொள்கைக்காக அவர்கள் பேசுவது என்றால் எனக்கு வந்த கோபம் அவர்களுக்கும் வந்திருக்க வேண்டும்.
உங்களுக்கு ஆறுதல் சொன்னவர்கள் கூட நீங்கள் பீஜேயிடம் இப்படி
பேசியிருக்கக் கூடாது என்று தான் உங்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
எவ்வளவு பயங்கரமான கொள்கையைப் பேசியுள்ளீர்கள்? தவ்ஹீதின் அடித்தளத்தையே தகர்த்து விட்டீர்கள் என்று உங்களிடமும் அவர்கள் கூறவில்லை. என்னிடமும் கூறவில்லை.
அப்பாஸ் அலி பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறுகின்றனர்.
என் சம்மந்தப்பட்ட விஷயமாக இது அவர்களுக்கும் தோன்றுகிறது. உங்களுக்கும் தோன்றுகிறது. மார்க்க விஷயமாகத் தோன்றவில்லை.
ஓரிரு உலமாக்கள் விதிவிலக்காக உள்ளனர்.
உலமாக்களாக இல்லாதவர்களில் அதிகமானவர்கள் மார்க்க விஷயமாகக் கருதி உங்களின் விபரீதக் கொள்கைக்கு எதிராக வாதங்களை வைத்தார்கள். ஆனால் உலமாக்களில் அதிகமானோர் எனக்கும் உங்களுக்கும் இடையிலான சண்டை என்று
அதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை மக்களுக்குப் புரியவைப்பதில் நாம் ஓரளவு வெற்றி பெற்றதாக நினைத்தாலும் அடிப்படைக் கொள்கைகளில் யாருக்கு அதிகப் பிடிப்பு இருக்க வேண்டுமோ அவர்கள் விஷயத்தில் இந்த ஜமாஅத்
தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்று தான் நான் கருதுகிறேன்.
மாலை போடும் விஷயத்துக்காக மண்டையைப் பிளக்கும் வாதம் செய்தவர்களுக்கு வழிகேடர்களுக்கும் இணை கற்பிப்பவர்களுக்கும் அல்லாஹ் சொர்க்கத்தைக் கொடுத்து நமக்கு நரகத்தைக் கொடுப்பான் என்று நீங்கள் சொன்னது எருமை மாட்டின் மேல் மழை பெய்த உணர்வைக் கூட கொடுக்கவில்லை.
தமுமுக, ஜாக், ஹாமித் பக்ரி, பாக்கர் உள்ளிட்ட அனைவரும் சொன்னது என்ன?
பீஜே என்ற ஒருவன் சொன்னான். அவன் சொன்னதை எதிர்த்தால் நம்மை ஒழித்து விடுவான் என்பதற்காக நாங்கள் சகித்துக் கொண்டு இருந்தோம் என்று சொன்னார்கள்.
நம்மோடு எஞ்சி இருப்பவர்கள் அப்படி அல்ல என்று நான் நினைத்தேன்.
அதுவும் தவறு என்பது சமீபகால நிகழ்வுகள் மூலம் எனக்குத் தெரிகிறது. உடன்பாடு இல்லாவிட்டாலும் பீஜேக்காக அதை எதிர்க்க முடியவில்லை என்பதுதான் அதிகமானோரின் கருத்து. அதை நான் சமீபகாலமாகப் புரிந்து கொண்டேன்.
பொதுமக்கள் சரியாக இருந்தாலும் - தாயிகளும் முக்கிய பொறுப்பில்
உள்ளவர்களும் எனக்காகத் தான் ஒரு கொள்கையை ஆதரிக்கிறார்கள் என்றால் அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் நான் வியாபாரத்தில் முழுமையாக இறங்கினேன்.
திடீரென ஒதுங்கிக் கொண்டால் என்னை வைத்து இன்னொரு இயக்கம் என்பார்கள். அப்போதும் அதன் முடிவு இப்படித்தான் இருக்கும்.
நான் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு போய்விட்டேன் என்று மக்கள் நினைத்தாலும் பரவாயில்லை. நம் தலயீடு கடுகளவும் இல்லாததாக – எனக்குப் பயப்படாமல் அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்படும் நிர்வாகம் அமையட்டும் என்பதற்குத்தான் வியாபாரத்தில் ஈடுபட்டேன். எனக்கு பணத்தாசை எல்லாம் கிடையாது. அல்லாஹ்
தந்திருப்பது எனக்குப் போதுமானது என்ற மனநிறைவு எனக்கு உள்ளது.
எனது பதவிக்காலம் முடியும் நாட்களை நான் எண்ணிக் கொண்டு இருக்கிறேன். அதன் பின்னர் யாரும் எந்தக் கருத்தையும் சொல்லலாம்.
பீஜெக்குப் பயந்து உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் நிலை ஏற்படாது.
பீஜேக்கு எதிலும் கருத்து சொல்லவோ தலையிடவோ வாய்ப்பு இருக்காது. நாம் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் அந்த ஆளிடம் யார் திட்டு வாங்குவது என்று யாரும் பயப்பட இனி அவசியம் இருக்காது.
அண்ணன் தவறையும் சரியாக்கி விடுவார் என்ற பேச்சு என் முன்னாலும் நானில்லாத சபையிலும் நடப்பது எனக்குத் தெரியும். அதற்கும் இனிமேல் இடமிருக்காது.
பீஜேக்கு பயந்து கொண்டுதான் அவரது கருத்தை எதிர்க்காமல் உலமாக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் நிலை இனி ஏற்படாது.
இதுபோன்ற விமர்சனங்கள் தான் என்னைப் புன்படுத்தியது.
தங்களுக்கு எது சத்தியம் என்று தெரிகிறதோ அதை பேசிய நம் தாயிக்கள், எவ்வளவு பெரிய சக்தியையும் அஞ்சாமல் எதிர்த்த நம் தாயிக்கல் தங்களுக்குச் சரி என்று பட்டதை எனக்குப் பயந்து சொல்லாமல் இருப்பதாக அவர்கள் வாயாலே
சொல்வது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
அப்பாஸ் அலி அவர்களே நீங்கள் என்னைப் பற்றி பேசியதற்காக வருத்தப்பட வேண்டாம். அவர்களைப் போல் இல்லாமல் காலம் கடந்தாவது வெளிப்படையாகப் பேசினீர்கள். அப்படி பேசியது சத்தியமாக இருந்தால் அதை நான் முதலில் ஏற்று
இருப்பேன்.
ஒரு கற்பனைக் கதை என் நினைக்கு வருகிறது. பிள்ளைக்கு பேச்சுவராமல் இருக்கிறது என்று தாய் பலவாறாக சிகிச்சை செய்து பேசும் சக்தி பிள்ளைக்கு வந்ததாம். இப்போது பிள்ளை பேசப்போகிறது என்று ஆவலுடன் காத்து இருக்கும் போது அம்மா நீ எப்போது தாலி அறுப்பாய் என்று பிள்ளை பேசியதாம்.
இதுபோல் தான் உங்கள் பேச்சும் அன்றைக்கு இருந்தது.
உண்மையில் ஜமாஅத் தவறாக முடிவெடுத்த விஷயங்கள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டினால் அதை மகிழ்வோடு நான் ஏற்றுக் கொள்வேன்.
உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன் என்ற ஹதீஸ் பற்றி நீங்கள் மறுப்பு எழுதினீர்கள். நானோ மற்றவர்களோ கோபப்படவில்லை. அதை தீன்குலப் பெண்மணியில்
இம்மாதம் போட்டோம். நானும் சரிபார்த்து திருத்தம் செய்து கொடுத்தேன்.
இது போல் ஏராளமான உதாரணங்கள் இருந்தும் பீஜே சொல்வதை எதிர்த்தால் அவ்வளவுதான் என்ற பொய்வாதத்தை ஆலிம்கள் செய்வது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.
உங்களுக்கும் அதிகமான உலமாக்களுக்கும் இது பீஜேயின் பிரச்சனை என்று தோன்றினாலும் இப்போது உள்ள நிர்வாகக் குழு அதை மார்க்க விஷயமாகப் பார்க்கிறது.
நீங்கள் சொன்ன விஷயங்களை இப்போதைய ஜமாஅத் கடுமையான குற்றமாகக் கருதுகிறது. நீங்களும் நீங்கள் சொன்ன விஷயத்தில் தெளிவடைந்து ஜமாஅத்தின் நிலைக்கு நீங்கள் வரும் வரை மக்கள் மன்றத்தில் உங்களைப் பயன்படுத்தப்படாமல் இருப்பது தான் ஜமாஅத்துக்கும் நல்லது. உங்களுக்கும் நல்லது.
நீங்கள் சொன்ன கருத்து பயங்கர வழிகேடு என்று ஜமாஅத்துக்கு தெரியும் போது உங்களை பயன்படுத்துவதும் நீங்கள் அதற்கு உடன்படுவதும் சந்தர்ப்பவாதமாக ஆகி விடும்.
நீங்கள் சொன்னது வழிகேடு அல்ல என்று எங்களுக்குத் தோன்ற வேண்டும். அல்லது நீங்கள் சொன்னது வழிகேடுதான் உங்களுக்கு இயல்பாக வரவேண்டும். அது வரை இந்த நிலைதான் நல்லது. சரியானது.
எனது பதவிக் காலத்துக்குப் பின்போ அல்லது எனக்குப் பின்போ உங்கள் கருத்தே ஜமாஅத்தின் கருத்தாக ஆகலாம். (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.) அப்போது உங்களைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
ஒரு ஜமாஅத்தின் கொள்கையில் நம்பிக்கை இல்லாமல் உடன்பாடு இல்லாமல் அந்த ஜமாஅத்தின் கொள்கைப் பிரச்சாரகராக நீங்கள் நீடிக்க வேண்டாம்.
உங்கள் மீது தனிப்பட்ட கோபம் இல்லை. கொள்கை சம்மந்தமான கோபம் உள்ளது.
உங்கள் கொள்கை பகிரங்க வழிகேடு என்பதால் அது வழிகேடு இல்லை என்று எங்களுக்குத் தெரியும் வரை அல்லது உங்கள் கொள்கை வழிகேடு என்று நீங்களாக உணர்ந்து மாறும் வரை இந்த நிலைதான் நீடிக்க வேண்டும்.
இந்த மெயில் உயர்நிலைக் குழுவில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் நான் அனுப்பவில்லை. இனியும் அனுப்ப மாட்டேன். நீங்களும் யாருக்கும் அனுப்பாமல் இருந்தால் நல்லது. அனுப்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
அன்புடன்
பீ.,ஜைனுல் ஆபிதீன்


குர்ஆனுக்கு முரண் - இறந்தவர்கள்

சனது சரியாக இருந்தால் போதும் மதன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற கொள்கை உள்ள குன்றுகளுக்கு ஒரு கேள்வி 

1697. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் (கப்று) வேதனை செய்யப்படுகிறார்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.) "இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தாரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால், (குறைஷித் தலைவர்களான) இணைவைப்பாளர்கள் பத்ருப்போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்க,) "நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.

"நான் அவர்களுக்குச் சொல்லிவந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ("இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று சொல்லவில்லை).
பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்:

(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80).
(நபியே!) மண்ணறைகளில் (கப்று) இருப்பவர்களை உங்களால் செவியுறச்செய்ய முடியாது (35:22).
"நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)" என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அபூஉசாமா (ஹம்மாத் பின் உசாமா பின் ஸைத்-ரஹ்) அவர்கள் அறிவித்த (முந்தைய) ஹதீஸே முழுமையானதாகும். 

இந்த முஸ்லிம் ஹதீஸில் இப்னு உமர் ரலி சொல்வதாக ஆயிஷா ரலி அவர்களிடம் ஒரு ஹதீஸ் அறிவிக்க படுகிறது அறிவிப்பாளர் தொடர் சரியான அந்த காலத்தைய சஹாபிய மக்கள் ஆயிஷா ரலி அவர்களிடம் சொல்லிய போது அவர்கள் இந்த சஹீஹான ஹதீஸை என்ன கூறி மறுக்கிறார்கள் ??

இதில்  கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன வெனில் சம்மந்த பட்ட கிணற்று அருகில் இருந்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல் )அவர்களும் உமர் ரலி அவர்களும் ஆவார்கள் இவர்கள் இருவரும் பேசிய விஷயத்தை தான் நேரடியாக காதில்  வாங்கிய உமர் ரலி அறிவிக்கிறார்கள் அன்னை ஆயிஷா ரலி அந்த  இடத்தில் இருக்க வில்லை ஆனாலும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள் என்பதை கவனிக்கவும்

குரானுக்கு முரண் 

இந்த ஒற்றை காரணம் போதும் ஒரு ஹதீஸ் என்பது வஹி என்ற தரத்தில் அமைந்த சஹீஹான ஹதீஸா அல்லது அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் குரானுடன் மோதும் என்றால் தள்ளுபடி பண்ண வேண்டிய ஹதீஸா என்பதை அளவெடுக்க 

குரானுடன் மோதினால் ஒரு ஹதீஸை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதன் முதல் சொல்லியவர் பிஜே தான் என்று இப்போது சொல்லிக்கொண்டு கிளம்பி இருக்கும் வாய் வாளருக்கு இந்த கேள்வி

புதன், 11 டிசம்பர், 2013

Adirampattinam TNTJ - அதிராம்பட்டிணம் ததஜ: சமாதி வழிபாட்டிற்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்

Adirampattinam TNTJ - அதிராம்பட்டிணம் ததஜ: சமாதி வழிபாட்டிற்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்: அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமாதி வழிபாட்டிற்கு எதிரான தெருமுனை பிரச்சாரம் பல எதிப்பிற்கு இடையில் 10.12.20...

சனி, 5 ஜனவரி, 2013

அதிரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு (வீடியோ)




அதிரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு (வீடியோ)


பல ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டிணம் கடல்கரைத் தெருவில் உள்ள தர்கா விற்கு எதிரில் உள்ள கூத்து கொட்டகையில் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு அற்புதமான உரையை நிகழ்த்தினார். வரதட்சணையில் ஊரி திளைத்த அதிரை மக்களை சிந்திக்க வைத்தது அவரின் வீரிய பேச்சு . பல இளைஞர்கள் வரதட்சணை வாங்குவதை விட்டும் தங்களை தூரமாக்கி கொண்டார்கள்..
ஒரு காலத்தில் நமக்கு தவ்ஹீத் சிந்தனை வர காரணமாக இருந்த,நமக்கு ஆசானாக இருந்த சகோதரர்கள் இன்று கொள்கையில் தடம்புரண்டு போய் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பவர்கள். ஒரு நோட்டிசை வைத்து படம் காட்டுகிறார்கள்.அது சம்மந்தமாக நாம் கேள்வி கேட்கும் போது நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தர்கா கூடாது என்று பிரச்சாரம் செய்தவர்கள் என்றும் அப்போது நாம் பிறந்து கூட இருக்க மாட்டோம் என்று சொன்னார்கள்
இதற்கு பதிலடி நாம் கொடுத்த பின் ,அனேகமா நீங்கள் பிறந்து இருக்க மாட்டீர்கள் என்று எச்சரிக்கையுடன் தான் கூறினோம் அதை நீங்கள் கவனிக்க வில்லை என்று வார்த்தை விளையாட்டு விளையாடினார்கள்.சத்தியத்தை சொல்ல வயது முக்கியம் இல்லை என்பதை கூட மறந்து விட்டார்கள் .ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது .பழம் பெருமை பேசி ஆக போவது ஒன்றும் இல்லை .அன்று செய்த பிரச்சாரம் இன்று ஏன் செய்யவில்லை என்று நாம் கேட்க .அதற்கு மீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு அவர்களின் அமைப்பு ஆரம்பிக்க பட்ட வருடத்தை சொல்லிவிட்டு அதன் பின் கடற்கரை தெருவில் (கவனிக்கவும் கடற்கரை தெருவில் அவர்கள் அமைப்பில் இல்லை )வரதட்சணை மாநாடு நடத்தினோம் என்று மீண்டும் பழம்கதைகளை பட்டியலிட்டார்கள் .



  ஆதாரம் கேட்டு பழகிய நாம் மீண்டும் ஆதாரம் கேட்போம் அப்போது எச்சரிக்கையாக கடல்கரைதெருவில் என்று தான் சொன்னோம் நீங்கள் கவனிக்கவில்லை என்று சொல்வார்கள்.ஒரு முஸ்லீம் இரண்டு தடவை குட்டுப் படமாட்டான் 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்(.புகாரி 6133)

அவர்கள் அமைப்பின் விதை 1979 மதினா பல்கலை கழகத்தில் பெறப்பட்டது என்று சொல்லி இருக்கிறார்கள் .மாஷாஅல்லாஹ்.அதன் பின் அந்த விதையில் ஒட்டு செய்ய பட்ட அணைத்து தவ்ஹீத் ஜமாத்தின் விதையின் வீரியம் சேர்ந்த பிறகு நடத்த பட்ட மார்க்க நிகழ்ச்சிகள்  நமக்கு தெரியும்
அந்த வீரிய விதை பிரிந்த பின் நடந்தவையும்(மதினா நகரின் பேரிச்சை மரம் போன்று ) நமக்கு தெரியும் நாமும் அதிரை வாசி

 இந்த வரதட்சணை ஒழிப்பு மாநாட்டை எங்கள் சொந்த அமைப்பு (அமைப்பு கூடாது , ஆனா நாங்க ஆரம்பித்தால் கூடும், நாங்க தலைவரா இருந்தா ரொம்ப கூடும்) தான் நடத்தியது என்பது போன்று(மேலோட்டமாக பார்த்தால் ) ஒரு பெரிய கப்சாவை விட்டுள்ளார்கள்

வரதட்சணை மாநாட்டை நாங்கள் தான் நடத்தினோம் என்பவர்கள் வரதட்சணை திருமணத்தை புறக்கணித்து வாழ்ந்தால் மக்கள் இவர்களை நம்புவார்கள்.

வரதட்சணை மாநாட்டை யார் நடத்தினார்கள், யார் நடத்துவார்கள், யார் இன்றும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.